டொயோட்டா ஃபார்ச்சூனர் சோலியை முடிக்க போகும் பெயிண்ட் நிறுவனம்! நாளைக்கு கச்சேரி இருக்கு!
இந்தியாவில் ஃபுல்-சைஸ் எஸ்யூவி ரக கார்களுக்கு (Full-Size SUV Cars) என தனியாக வாடிக்கையாளர்கள் வட்டம் உள்ளது. இருப்பினும் இந்த செக்மெண்ட்டில் டொயோட்டா ஃபார்ச்சூனர்தான் (Toyota Fortuner) முழுமையாக ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளது. ஆனால் டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு, கூடிய விரைவில் மிக கடுமையான போட்டி ஏற்படவுள்ளது.
எம்ஜி மெஜஸ்டர் (MG Majestor) காரின் அறிமுகம் பற்றிதான் நாங்கள் பேசி கொண்டுள்ளோம். இந்தியாவின் ஃபுல்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் ஏற்கனவே ஒரு காரை விற்பனை செய்து வருகிறது. அது எம்ஜி க்ளோஸ்ட்டர் (MG Gloster) ஆகும். இந்த வரிசையில் எம்ஜி க்ளோஸ்ட்டர் காரை தொடர்ந்து, ஃபுல்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் மேலும் ஒரு காரை எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

அதுதான் எம்ஜி மெஜஸ்டர் ஆகும். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எம்ஜி மெஜஸ்டர் கார், நாளை (பிப்ரவரி 12) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்தியாவில் கடந்த 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo) வாகன திருவிழா நடைபெற்றது.
இதில், எம்ஜி மெஜஸ்டர் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இது நடந்து சுமார் 1 வருட காலம் கடந்துள்ள நிலையில், எம்ஜி மெஜஸ்டர் கார் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்திய சந்தையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் மட்டுமின்றி ஃபோக்ஸ்வேகன் டேரான் ஆர்-லைன் (Volkswagen Tayron R-Line), ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq) மற்றும் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் (Nissan X-Trail) போன்ற கார்களுக்கும், எம்ஜி மெஜஸ்டர் விற்பனையில் சவால் அளிக்கும்.

இதில், ஃபோக்ஸ்வேகன் டேரான் ஆர்-லைன் காரும், எம்ஜி மெஜஸ்டர் போலவே இந்திய சந்தைக்கு புதுவரவுதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இன்னும் சொல்லப்போனால் ஃபோக்ஸ்வேகன் டேரான் ஆர்-லைன் இன்னும் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. தற்போது நிலையில் இந்த காருக்கு முன்பதிவுகள் (Bookings) மட்டுமே ஏற்கப்பட்டு வருகின்றன.
ஆனால் கூடிய விரைவில், விலை (Price) எவ்வளவு? என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, ஃபோக்ஸ்வேகன் டேரான் ஆர்-லைன் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அனேகமாக அடுத்த மாதமே (மார்ச்), ஃபோக்ஸ்வேகன் டேரான் ஆர்-லைன் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சரி, எம்ஜி மெஜஸ்டர் பற்றிய விஷயங்களுக்கு வருவோம். எம்ஜி மெஜஸ்டர் காரில், 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன் (Engine Option) வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 213 பிஹெச்பி பவரையும், 478 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம்.
இந்த காரின் அனைத்து வேரியண்ட்களிலும் 4x4 சிஸ்டம் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு, பனரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 3 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகளையும் (Features), எம்ஜி மெஜஸ்டர் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் எம்ஜி மெஜஸ்டர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 39 லட்ச ரூபாய் - 40 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என நாங்கள் கருதுகிறோம். ஆனால் இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) மட்டுமே. நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான், அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும்.
இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார் நிறுவனம், ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் (JSW Group) ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்தியாவை சேர்ந்த ஜேஎஸ்டபிள்யூ குழுமம், ஆட்டோமொபைல் மட்டுமின்றி, பெயிண்ட், ஸ்டீல், சிமெண்ட், எனர்ஜி மற்றும் உள்கட்டமைப்பு போன்ற பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








