டொயோட்டா ஃபார்ச்சூனரையே கதறவிட புது எஸ்யூவிய களமிறக்குது எம்ஜி.. இனி இதை தான் மக்கள் வாங்கிக் குவிக்க போறாங்க
சாலைகளில் செல்லும் போது டொயோட்டா ஃபார்ச்சூனர் காரைப் பார்த்தாலே ஒரு சின்ன பயம் வரும். அந்தளவிற்கான ரோடு பிரசன்ஸை அந்தக் கார் கொண்டிருக்கும். அதற்குப் போட்டியாக புதிய ஃபுல் சைஸ் எஸ்யூவி ஒன்றை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரவிருக்கிறது எம்ஜி மோட்டார். அது வேறெதுவும் இல்லை, மெஜஸ்டர் (Majestor) தான்.
ஏற்கனவே இந்த எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்திவிட்டது எம்ஜி. இந்நிலையில் இதன் வெளியீட்டைத் தேதியை தற்போது அறிவித்துள்ளது. ஏப்ரல் 20ம் தேதியன்று மெஜஸ்டர் எஸ்யூவி மாடலின் விலை குறித்த விவரங்களை வெளியிடவிருப்பதாகத் தெரிவித்துள்ளது எம்ஜி. இந்த ஃபுல் சைஸ் எஸ்யூவி மாடல் என்னென்ன அம்சங்களைக் கொண்டிருக்கிறது, என்ன விலையில் வெளியாகலாம் ஆகிய தகவல்களை இங்கே நாம் பார்க்கலாம்.

என்ன விலையில் வெளியாகலாம்? இந்தியாவில் டொயோட்டா ஃபார்ச்சூனருக்குப் பதிலாக கிளாஸ்டர் என்ற எஸ்யூவி மாடலை விற்பனை செய்து வந்தது எம்ஜி மோட்டார். தற்போது அதற்கு மாற்றாகவே புதிய மெஜஸ்டர் வெளியாகிறது. ஃபார்ச்சூனர் மாடலானது ரூ.34.16 லட்சம் முதல் ரூ.42.37 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய மெஜஸ்டர் மாடலை ரூ.40 லட்சம் முதல் ரூ.45 லட்சத்திற்குள்ளான விலையில் எம்ஜி மோட்டார் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ்: கிளாஸ்டருக்கு மாற்றாக வெளியிடப்பட்டாலும், அதன் உயர்நிலை வேரியன்ட்களில் பயன்படுத்தப்பட்ட 2.0 லிட்டர், ட்வின்-டர்போ டீசல் இன்ஜினையே புதிய மெஜஸ்டர் எஸ்யூவி மாடலில் கொடுக்கவிருக்கிறது எம்ஜி மோட்டார். இந்த இன்ஜினானது 215 hp பவர் மற்றும் 478.5 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. 4 வீல் டிரைவ் வசதியுடன் வரும் இந்த எஸ்யூவியில் 8 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

டிசைன்: மற்ற ஃபுல் சைஸ் எஸ்யூவி மாடல்களைப் போலவே பாக்ஸியான மற்றும் ரக்கடான டிசைனையே புதிய மெஜஸ்டரும் கொண்டுள்ளது. சாலையில் செல்பவர்களை நின்று திரும்பிப் பார்க்க வைக்கும் வகையிலான ரோடு பிரசன்ஸை இந்த எஸ்யூவி கொண்டிருக்கும் என்பது மட்டும் உறுதி. காரின் முன்பக்கம் கிளாஸ் பிளாக் எலமென்ட்களுடன் கூடிய பெரிய கிரில், செங்குத்தாக அடுக்கி வைக்கப்பட்டது போலான LED முகப்பு விளக்குகள் DRL-களுடன் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இரண்டு பக்கமும் பெரிய கிளாடிங்குடன் கூடிய ரக்கடான பம்பர்கள், 19 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், பின்பக்கம் கனெக்டட் LED விளக்குகள் ஆகிய டிசைன் அம்சங்களைக் கொண்டுள்ளது. அதிக கிரௌண்டு கிளியரன்ஸைக் கொண்டிருப்பதனால், பயணிகள் காரின் உள்ளே ஏறுவதற்கு வசதியாக இரண்டு பைக்கமும் சைடு ஸ்டெப்களைக் கொடுத்துள்ளது எம்ஜி மோட்டார்.
வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள்: ப்ரீமியமான எஸ்யூவி என்பதால் அனைத்து வகையான மேம்பட்ட அம்சங்களையும் கொண்ட காராகவே இந்த மெஜஸ்டர் எஸ்யூவி உள்ளது. காரின் உள்ளே இரண்டு 12.4 இன்ச் டிஸ்பிளேக்கள், 3 ஸ்போக்குகள் கொண்ட ஸ்டீயரிங் வீல், பனோரமிக் சன்ரூஃப், 12 ஸ்பீக்கர்கள் கொண்ட JBL சவுண்டு சிஸ்டம், பவர்டு டெயில்கேட், 3 ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் ஆகிய வசதிகளை மெஜஸ்டர் கொண்டுள்ளது.
இவற்றுடன், டூயல் வயர்லெஸ் போன் சார்ஜர்கள், மெமரி ஃபங்ஷனுடன் கூடிய 12 வே பவர்டு டிரைவர் சீட், 8 வே பவர்டு முன்பக்க பயணிகள் இருக்கை, 64 நிறங்கள் கொண்ட ஆம்பியன்ட் லைட்டிங், வென்டிலேஷன் மற்றும் மஸாஜிங் வசதிகள் கொண்ட முன்பக்க இருக்கைகள் ஆகிய மேம்பட்ட வசதிகளையும் மெஜஸ்ட் எஸ்யூவி மாடலில் எம்ஜி மோட்டார் கொடுத்துள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள்: பாதுகாப்பிற்காக இந்த ஃபுல் சைஸ் எஸ்யூவி மாடலில் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டு), லெவல் 2 ADAS, 360 டிகிரி கேமரா, ஆட்டோ டிம்மிங் IRVM, ஹில் ஹோல்டு மற்றும் டிஸண்டு கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபுல் சைஸ் எஸ்யூவி பிரிவில் போட்டியாளர்களை கடந்து சிறப்பான எஸ்யூவி மாடலாக மாறுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் கொண்ட காராக எம்ஜி மெஜஸ்டர் இருக்கிறது. ஏப்ரல் 20ம் தேதியன்று வெளியாகவிருக்கும் விலையும் இதன் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கியக் காரணியாக இருக்கும். டொயோட்டா ஃபார்ச்சூனர், ஜீப் மெரிடியன் மற்றும் ஸ்கோடா கோடியாக் ஆகிய 7 சீட்டர் கார்களுக்குப் போட்டியாக இந்த மெஜஸ்டர் விற்பனைக்கு வரவிருக்கிறது.


Click it and Unblock the Notifications








