டொயோட்டா ஃபார்ச்சூனர் பக்கம் இனி ஒருத்தரும் போக போறது இல்ல! கஸ்டமர்களை கவர்ந்த புதிய எம்ஜி கார்!
JSW எம்ஜி மோட்டார் நிறுவனம் அதன் மெஜஸ்டர் காரின் விலைகளை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரூ.40.99 லட்சத்தில் இருந்து இந்த காரின் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதுவே, இதற்கு விற்பனையில் போட்டியாக விளங்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர் ரூ.34.76 லட்சத்தில் இருந்தே கிடைக்கிறது. இதனால், புதிய மெஜஸ்டர் கார் உடன் ஃபார்ச்சூனரின் டாப் வேரியண்ட்டை தான் ஒப்பிட வேண்டும். ஃபார்ச்சூனரின் டாப் வேரியண்ட்டாக 'நியோ டிரைவ்' ரூ.44.72 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
இது 4-வீல்-டிரைவ் சிஸ்டம் கொண்ட வேரியண்ட் ஆகும். அதுவே, எம்ஜி மெஜஸ்டரில் 4-வீல்-டிரைவ் சிஸ்டம் ஆனது சாவி வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. அதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.44.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரே அளவிலான விலையில் உள்ள எம்ஜி மெஜஸ்டர் சாவி 4x4 வேரியண்ட்டிற்கும், டொயோட்டா ஃபார்ச்சூனர் நியோ டிரைவ் 4x4 வேரியண்ட்டிற்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

என்ஜின்: மெஜஸ்டர் சாவி வேரியண்ட்டில் கிடைக்கும் 2 லிட்டர் ட்வின்-டர்போ டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 215 எச்பி மற்றும் 478 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. ஃபார்ச்சூனர் நியோ டிரைவ் வேரியண்ட்டில் 2.8 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் உடன் 48 வோல்ட் எலெக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்படுகிறது. ஆம், இது ஒரு மைல்ட்-ஹைப்ரீட் கார் ஆகும்.
| Engine & Performance | Majestor Savvy | Fortuner Neo Drive |
| Engine | 2L Twin-Turbo Diesel | 2.8L Turbo Diesel + 48V Mild-Hybrid |
| Cylinder Count | 4 | 4 |
| Power | 215 hp | 204 hp |
| Torque | 478 Nm | 500 Nm |
| Gearbox | 8 AT | 6 AT |
| Fuel Tank | 75 L | 80 L |
ஆஃப்-ரோடு பயணங்களுக்கான உபகரணங்கள்: இந்த இரண்டுமே லேடார்-ஃபிரேம் சேசிஸில் உருவாக்கப்பட்ட 4-வீல்-டிரைவ் எஸ்யூவி கார்கள் ஆகும். புதிய மெஜஸ்டர் மாடலில் 10 டெர்ரன் மோட்கள் வழங்கப்படும் நிலையில், ஃபார்ச்சூனரில் 5 டெர்ரன் மோட்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. அதேபோன்று, கரடுமுரடான ஆஃப்-ரோடு பயணங்களை மேற்கொள்வதற்கு தேவையான டிஃப்ரென்ஷியல் லாக் ஆனது மெஜஸ்டரில் மூன்று பக்கங்களிலும் வழங்கப்படும் நிலையில், ஃபார்ச்சூனரில் பின்பக்கத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது.
| Chassis & Hardware | Majestor Savvy | Fortuner Neo Drive |
| Chassis | Ladder-frame | Ladder-frame |
| Drive Layout | 2WD / 4WD | 4WD |
| Terrain Modes | 10 | 5 |
| Differential Lock | Front, Centre, Rear | Rear |
| Hill-hold / Descent Control | Yes | Yes |
| Front Suspension | Double Wishbone | Double Wishbone |
| Rear Suspension | 5-link | 4-link |

பரிமாண அளவுகள்: உயரத்தில் பெரியதாக வித்தியாசம் இல்லாவிடினும், நீளம், அகலத்தில் ஃபார்ச்சூனர் மற்றும் புதிய மெஜஸ்டருக்கு இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. ஏனெனில், மெஜஸ்டரை எம்ஜி நிறுவனம் இந்தியாவின் முதல் D+ எஸ்யூவி காராக அறிமுகம் செய்துள்ளது. அதுவே, ஃபார்ச்சூனர் ஆனது D எஸ்யூவி கார் ஆகும்.
| Dimension / Detail | Majestor Savvy | Fortuner Neo Drive | Difference |
| Length (mm) | 5,046 | 4,795 | +251 (Majestor larger) |
| Width (mm) | 2,016 | 1,855 | +161 (Majestor wider) |
| Height (mm) | 1,876 | 1,835 | +41 (Majestor taller) |
| Wheelbase (mm) | 2,950 | 2,745 | +205 (Majestor longer) |
| Tyre Size (in) | 19 | 18 | +1 (Majestor larger) |
| Ground Clearance (mm) | 219 | 225 | -6 (Fortuner higher) |
| Water-Wading Capacity (mm) | 810 | 700 | +110 (Majestor higher) |
| Boot Space (L, all seats up) | 343 | 296 | +47 (Majestor larger) |
தொழிற்நுட்ப வசதிகள்: இந்த இரு கார்களின் வெளிப்பக்கத்திலும் LED ஹெட்லைட்கள், டர்ன் இண்டிகேட்டர்கள் உடன் ORVM-கள் மற்றும் பின்பக்க விண்ட்ஷீல்டில் வைபர் & வாஷர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. உட்புற தொழிற்நுட்ப அம்சங்களில் லேட்டஸ்ட் அறிமுகமான மெஜஸ்டர் முன்னிலை வகிக்கிறது. மெஜஸ்டரில் முதலில் நம்மை வசீகரிப்பது, பெரிய அளவிலான 12.3-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை ஆகும்.
| Interior & Comfort Features | Majestor Savvy | Fortuner Neo Drive |
| Seating Capacity | 6 / 7 (Captain Seat Option) | 7 |
| Touchscreen Infotainment | 12.3-inch | 8-inch |
| Android Auto / Apple CarPlay | Wireless | Wired |
| Speaker System | 12 Speakers | 11 Speakers |
| Driver's Display | 12.3-inch Full Digital | Analogue + Digital MID |
| Automatic Climate Control | 3-Zone | 2-Zone |
| Wireless Charger | Dual (2) Chargers | Optional Extra |
| Cruise Control Type | Adaptive | Standard |
| Push-button Start/Stop | Yes | Yes |
| Drive Modes | Eco / Normal / Sport | Eco / Normal / Sport |
| Steering Column Adjustment | Tilt & Telescopic | Tilt & Telescopic |
| Paddle Shifters | Yes | Yes |
| Electric Front-Seat Adjustment | Yes | Yes |
| Front Ventilated & Massaging Seats | Yes | No |
| Front Centre Armrest | Yes | Yes |
| Sunroof Type | Panoramic | No Sunroof |
| Adjustable Second-Row Seats | Slide + Recline | Slide + Recline |
| Second-Row Armrest | Yes | Yes |
| Rear AC Vents Location | Roof-mounted (2nd & 3rd Row) | Roof-mounted (2nd & 3rd Row) |
| Powered Tailgate | Yes | Yes |
அதுவே, ஃபார்ச்சூனரில் டாப் வேரியண்ட்டான நியோ டிரைவ்-இல் கூட 8-இன்ச் டச் ஸ்க்ரீன் தான் வழங்கப்படுகிறது. மேலும், இந்த திரையை மொபைல் போன் உடன் மெஜஸ்டரில் வயர் இல்லாமல் இணைக்கும் வசதி உள்ள நிலையில், ஃபார்ச்சூனரில் வயர் உடன் மட்டுமே இணைக்க முடியும். அதேபோல், ஆடியோ சிஸ்டத்தில் வழங்கப்படும் ஸ்பீக்கர்களின் எண்ணிக்கை மெஜஸ்டரில் ஒன்று கூடுதல் ஆகும்.
| Exterior Feature | Majestor Savvy | Fortuner Neo Drive |
| LED Headlights | Yes | Yes |
| LED Tail-lamps | Yes, Connected | Yes |
| Chrome-finished Door Handles | No | Yes |
| Side Step | Yes | Yes |
| Rear Spoiler | Yes | Yes |
| ORVM-mounted Indicators | Yes | Yes |
| Electrically Foldable & Adjustable ORVMs | Yes | Yes |
| Rear Defogger | Yes | Yes |
| Antenna Type | Shark-fin Type | Shark-fin Type |
| Rear Wiper & Washer | Yes | Yes |
| Roof Rails | Yes | Yes |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே பார்த்ததுபோல், விலையில் இந்த இரு 4x4 எஸ்யூவி கார்களுக்கும் இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை. இருப்பினும், ஆஃப்-ரோடு பயணங்களுக்கான உபகரணங்கள், பரிமாண அளவுகள் மற்றும் தொழிற்நுட்ப வசதிகளில் ஃபார்ச்சூனர் நியோ டிரைவ் வேரியண்ட்டை எம்ஜி மெஜஸ்டர் சாவி முந்துகிறது. இதில் இருந்து இந்த காரை எம்ஜி நிறுவனம் எந்த அளவிற்கு போட்டி மிகுந்ததாக களமிறக்கியுள்ளது என்பதை அறியலாம்.
மேலும், மெஜஸ்டர் சாவி வேரியண்ட்டை ரூ.40.99 லட்சத்தில் 4x2 டிரைவ் ஆப்ஷனிலும் வாங்கலாம். ஆனால், டொயோட்டா ஃபார்ச்சூனரில் நியோ டிரைவ் வேரியண்ட் ஆனது 4x4 டிரைவ் சிஸ்டத்துடன் மட்டுமே கிடைக்கிறது. இன்னும் கூடுதல் விலையிலான ஃபார்ச்சூனர் லெஜண்டர் காரில் கூட நியோ டிரைவ் வேரியண்ட்டை பெறலாம். ஆனால், மெஜஸ்டரை போன்று குறைந்த விலையில் பெற முடியாது.


Click it and Unblock the Notifications