எத்தனை பேரை உள்ளே ஏற்றுனாலும் இன்னும் இடம் கொடுக்கும் புதிய எம்ஜி கார்! விலை இன்று அறிவிப்பு!

எம்ஜி மெஜஸ்டர் (MG Majestor) கார் இந்திய சந்தையில் ஏப்ரல் 27ஆம் தேதியான இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) நிறுவனத்தின் புதிய ஃபுல்-சைஸ் எஸ்யூவி (Full-size SUV) காரான மெஜஸ்டர், ஏற்கனவே வெளியீடு செய்யப்பட்டுவிட்ட நிலையில், விலைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு கார் இன்று விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

இந்தியாவில் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) காருக்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உள்ளது. ஃபார்ச்சூனரை வாங்கும் அளவிற்கு பணம் இல்லாவிடினும், வாழ்நாளில் எப்படியாவது ஒரு ஃபார்ச்சூனர் காரை வாங்கிவிட வேண்டும் என கனவோடு இருப்பவர்கள் ஏராளம். அதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாகவே ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஃபார்ச்சூனருக்கு போட்டியாக மெஜஸ்டரை களமிறக்குகிறது.

jsw majestor suv car launch today

தற்சமயம் விற்பனையில் உள்ள எம்ஜி க்ளோஸ்டர் (Gloster) காருக்கு மாற்றாக மெஜஸ்டர் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. க்ளோஸ்டர் ஆனது சொகுசு வசதிகள் நிறைந்த ஆடம்பரமான எம்ஜி எம்பிவி காராக விளங்கும் நிலையில், புதிய மெஜஸ்டர் ஆனது ஆடம்பரத்திற்கு கவனம் செலுத்தும் அதேநேரத்தில் கரடு முரடான ஆஃப்-ரோடு பயணங்களுக்கும் கொண்டுச் செல்லக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய எம்ஜி மெஜஸ்டர் காரை ஓட்டிப் பார்த்து நாங்கள் எங்களது விரிவான விமர்சனத்தை சமீபத்தில் வழங்கி இருந்தோம். புதிய மெஜஸ்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.40 லட்சம் - ரூ.45 லட்சம் என்கிற அளவில் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய எம்ஜி காருக்கான முன்பதிவுகள் (Bookings) ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டன.

jsw majestor suv car launch today

விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் ரூ.41,000 டோக்கன் தொகையை செலுத்தி காரை முன்பதிவு செய்யலாம். எங்களுக்கு தெரிந்தவரையில், ஷார்ப் 4x2 (Sharp 4x2), சாவி 4x2 (Savvy 4x2) மற்றும் சாவி 4x4 என மூன்று விதமான வேரியண்ட்களில் புதிய மெஜஸ்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம். வேரியண்ட்களை பொறுத்து சிறப்பம்சங்கள் வழங்கப்படும்.

இருப்பினும், இந்த அனைத்து வேரியண்ட்களிலும் ஒரே மாதிரியான 2 லிட்டர் ட்வின்-டர்போ டீசல் என்ஜினே வழங்கப்பட உள்ளது. ஏனெனில், ஏற்கனவே மெஜஸ்டரை பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், அதில் இந்த காரில் மேற்கூறப்பட்ட ஒரேயொரு டீசல் என்ஜின் மட்டுமே பொருத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கியர்பாக்ஸ் ஆப்ஷனாகவும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்பட உள்ளது.

இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 215 எச்பி மற்றும் 478 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியது ஆகும். மிகவும் நீளமான எஸ்யூவி காராக உருவாக்கப்பட்டுள்ள மெஜஸ்டரின் நீளம் 5,046மிமீ ஆகும். அதாவது, 5 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட காராக இது விளங்குகிறது.

முக்கியமான தொழிற்நுட்ப அம்சங்களாக லெவல்-2 அடாஸ் (ADAS), அளவில் பெரியதான 12.3-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை, 12-ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் மற்றும் மசாஜ் வசதிக் கொண்ட வெண்டிலேட்டட் (Ventilated) முன் இருக்கைகள் உள்ளிட்டவற்றுடன், 19 இன்ச்சில் நன்கு அளவில் பெரியதான அலாய் சக்கரங்களுடன் மெஜஸ்டர் விற்பனைக்கு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 4x4 டிரைவ் சிஸ்டத்துடன் எந்தவொரு பாதையிலும் இயங்கக்கூடிய கார் என்றே மெஜஸ்டரை இந்தியாவில் எம்ஜி நிறுவனம் விளம்பரப்படுத்தி வருகிறது. பல்வேறு நிலப்பரப்புகளை கொண்ட இந்தியாவில் ஆஃப்-ரோடு எஸ்யூவி கார்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைப்பதுண்டு என்பதால், மெஜஸ்டர் இந்திய வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்க்கிறோம். டொயோட்டா ஃபார்ச்சூனர் மட்டுமின்றி, ஜீப் மெரிடியன் (Jeep Meridian) மற்றும் ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq) கார்களுக்கும் போட்டியாக எம்ஜி மெஜஸ்டர் களமிறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Monday, April 27, 2026, 9:20 [IST]
English summary
Mg majestor suv car to launch in india today check all details here
மேலும்... #mg motor #upcoming launch #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+