டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு அப்பன்! அந்த கார் இந்தியாவுக்கு வருதா! மார்க்கெட் அதிர போகுது!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor). இந்த நிறுவனம் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) காருக்கு போட்டியாக எம்ஜி க்ளோஸ்ட்டர் (MG Gloster) என்ற காரை ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது.
இந்த சூழலில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு போட்டியாக மேலும் ஒரு காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் தயாராகி வருகிறது. அது எம்ஜி மெஜஸ்டர் (MG Majestor) ஆகும். இது மூன்று வரிசை இருக்கை அமைப்பை கொண்ட ஃபுல்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கடந்த 2025ம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ (2025 Bharat Mobility Global Expo) வாகன திருவிழாவிலேயே எம்ஜி மெஜஸ்டர் கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. எனவே அப்போதில் இருந்தே இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு, வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்தது.
இந்த சூழலில் ஒரு வழியாக எம்ஜி மெஜஸ்டர் கார் வரும் பிப்ரவரி 12ம் தேதி (February 12) இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது குறித்து ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டுள்ளது. எம்ஜி மெஜஸ்டர் காரில், ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் (Engine Option) மட்டுமே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் இன்ஜினாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் (Gear Box Option) வழங்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் இந்த காரில், 4x2 மற்றும் 4x4 என 2 ஆப்ஷன்களுமே கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வசதிகளை (Features) பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 360 டிகிரி கேமரா, முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், பெரிய பனரோமிக் சன்ரூஃப், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட அம்சங்களை எல்லாம் நாம் எதிர்பார்க்கலாம்.
டிசைனை (Design) பொறுத்தவரையில், முன் பகுதியில் பெரிய க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி பகல் நேர விளக்குகள், பின் பகுதியில் எல்இடி டெயில்லைட்கள், எல்இடி லைட் பார் ஆகிய அம்சங்கள் உடன், ட்யூயல் எக்ஸாஸ்ட் அமைப்பையும் நாம் எதிர்பார்க்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் எம்ஜி க்ளோஸ்ட்டர் காரின் ஆரம்ப விலை 38.33 லட்ச ரூபாயாக உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆனால் எம்ஜி மெஜஸ்டர் கார், எம்ஜி க்ளோஸ்ட்டர் காருக்கு மேலாக நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே எம்ஜி க்ளோஸ்ட்டர் காரை விட, எம்ஜி மெஜஸ்டர் காரின் விலை அதிகமாக இருக்கலாம். அனேகமாக எம்ஜி மெஜஸ்டர் காரின் ஆரம்ப விலை 40-45 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது எதிர்பார்க்கப்படும் விலை மட்டுமே. அதிகாரப்பூர்வமான விலை வரும் பிப்ரவரி 12ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அறிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications








