டொயோட்டா ஃபார்ச்சூனர் தான் முக்கியமான டார்க்கெட்... எம்ஜி உருவாக்கும் புது காரின் விலை எவ்வளவாக இருக்க போகுதோ!

எம்ஜி மோட்டார் (MG Motor) தனது புதிய விலையுயர்ந்த எஸ்யூவி கார் மாடலாக அறிமுகம் செய்யவுள்ள மெஜெஸ்டர் (Majestor) காரின் இறுதிக்கட்ட சோதனை ஓட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறது. தற்போதைய எம்ஜி க்ளோஸ்டர் (Gloster) காரை விடவும் விலைமிக்கதாக, அதற்கும் மேல் நிலைநிறுத்தப்படவுள்ள இந்த மூன்று-வரிசை எஸ்யூவி கார் பொது சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட போது அடையாளம் காணப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக இணையத்தில் வெளியாகியுள்ள ஸ்பை படங்களில், முழுவதுமாக மறைக்கப்படாமல் குறைவான மறைப்புகளுடன், முழுமையான பாடி பேனல்கள் மற்றும் உற்பத்திக்குத் தயாரான விளக்குகள் உடன் புதிய மெஜெஸ்டர் கார் காட்சியளிக்கிறது. கடந்த ஆண்டில் 2025 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ (Bharat Mobility Expo) கண்காட்சியில் முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட்ட மெஜெஸ்டர், ஒரு பிரீமியம் தேர்வாக முன்னிலைப்படுத்தப்படுகிறது.

mg majestor suv car spy images

அண்மைய ஸ்பை படங்கள் மெஜெஸ்டரின் பெரிய, கம்பீரமான தோற்றத்தையும், சதுர வடிவ அமைப்புகளையும் வெளிப்படுத்துகின்றன. அகலமான கிரில், செங்குத்தாக அடுக்கப்பட்ட எல்இடி விளக்குகள், எடுப்பான வீல் ஆர்ச்கள் மற்றும் உற்பத்திக்குத் தயாரான அலாய் சக்கரங்கள் இதில் காணப்படுகின்றன. க்ளோஸ்டரைப் போலவே பாடி-ஆன்-ஃப்ரேம் கட்டமைப்பின் கீழ் மெஜெஸ்டர் உருவாக்கப்படவுள்ளது.

இது மூன்று வரிசை மற்றும் 7 பயணிகளுக்கான இருக்கை அமைப்பைக் கொண்ட முழு அளவிலான எஸ்யூவி ஆகும். இதன் நீளம் 5,000 மிமீ, அகலம் 1,900 மிமீ மற்றும் வீல்பேஸ் (முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம்) 2,950 மிமீ ஆகும்.

mg majestor suv car spy images

இந்த காரின் உட்புற அம்சங்கள் இன்னும் பகிரப்படவில்லை என்றாலும், உற்பத்தி மாடலில் பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர், மேம்பட்ட கனெக்டட் கார் அம்சங்கள் மற்றும் விரிவான பாதுகாப்பு அம்சங்கள் மெஜெஸ்டரில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பவர்டிரெய்னைப் பொறுத்தவரை, 2.0 லிட்டர் ட்வின்-டர்போ டீசல் என்ஜின் (213 பிஹெச்பி பவர், 479 என்எம் டார்க்) மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் எதிர்பார்க்கப்படுகிறது.

மெஜெஸ்டரின் டாப் வேரியண்ட்களில் ஃபோர்-வீல்-டிரைவ் சிஸ்டமும் இடம்பெறும். புதிய எம்ஜி மெஜெஸ்டர் வருகிற பிப்ரவரி 12ஆம் தேதியில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை எம்ஜி க்ளோஸ்டர் காரை விட அதிகமாக இருக்கும். க்ளோஸ்டர் இந்தியாவில் ரூ.38.33 லட்சம் முதல் ரூ.42.49 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விலைகளில் விற்கப்படுகிறது.

mg majestor suv car spy images

புதிய எம்ஜி மெஜெஸ்டர் ஆனது டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner), ஜீப் மெரிடியன் (Jeep Meridian) மற்றும் ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq) ஆகிய கார்களுக்கு போட்டியாக அமையும். சீனா மற்றும் சவுதி அரேபியா சந்தைகளில் கிடைக்கும் மேக்ஸஸ் டி90 (Maxus D90) எஸ்யூவியின் அடிப்படையில் மேஜெஸ்டர் உருவாகப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சாலை நிலைமைகளுக்கு ஏற்ற சௌகரியமான பயணம் மற்றும் சிறந்த ஹேண்ட்லிங் மற்றும் பவர்டிரெய்ன் அளவுத்திருத்தங்களை உறுதிப்படுத்த எம்ஜி நிறுவனம் சமீப வாரங்களாக தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம், மெஜெஸ்டர் மிக விரைவில் சந்தையில் அறிமுமாக உள்ளது என்பது புலப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, January 19, 2026, 5:00 [IST]
English summary
Mg majestor suv spotted ahead of launch check all details here
மேலும்... #mg motor #spy pics #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X