டொயோட்டா ஃபார்ச்சூனர் சகாப்தம் முடிந்தது... இந்தியாவே காத்து கொண்டிருந்த 7 சீட்டர் கார் களத்தில் இறங்கியது...
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த எம்ஜி மெஜஸ்டர் (MG Majestor) கார், இன்று (பிப்ரவரி 12) பொது பார்வைக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சற்று நேரத்திற்கு முன்பு எம்ஜி மெஜஸ்டர் கார் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இது ஃபுல்-சைஸ் எஸ்யூவி (Full-size SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்திய சந்தையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner), ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq) மற்றும் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் (Nissan X-Trail) போன்ற கார்களுக்கு எல்லாம் போட்டியாக எம்ஜி மெஜஸ்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள ஃபோக்ஸ்வேகன் டேரான் ஆர்-லைன் (Volkswagen Tayron R-Line) மற்றும் தனது சொந்த உடன்பிறப்பான எம்ஜி க்ளோஸ்ட்டர் (MG Gloster) ஆகிய கார்கள் உடனும், எம்ஜி மெஜஸ்டர் விற்பனையில் போட்டியிடும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
எம்ஜி மெஜஸ்டர் காரின் வசதிகளை (Features) பொறுத்தவரையில், மசாஜ் மற்றும் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், மல்டி ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ட்யூயல் வயர்லெஸ் சார்ஜர், ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங், 3 ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.

அத்துடன் 75க்கும் மேற்பட்ட கனெக்டட் கார் வசதிகள் உடன் கூடிய ஐஸ்மார்ட் 2.0 போன்ற அதிநவீன வசதிகளும், எம்ஜி மெஜஸ்டர் காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஆஃப்-ரோடு சாகச பயணங்களை மேற்கொள்வதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளையும் எம்ஜி மெஜஸ்டர் கார் கொண்டுள்ளது.
எம்ஜி மெஜஸ்டர் காரின் பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அஸிஸ்ட் மற்றும் ஆட்டோமேட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங் போன்ற வசதிகளை எல்லாம் உள்ளடக்கிய லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
இதுதவிர 360 டிகிரி ஹெச்டி கேமரா, ஹில் ஹோல்டு அஸிஸ்ட், ஹில் டெசண்ட் கண்ட்ரோல் மற்றும் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு வசதிகளும், எம்ஜி மெஜஸ்டர் காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன. எனவே சாலையில் இந்த காரை உங்களால் நம்பிக்கையுடன் ஓட்ட முடியும்.
செயல்திறனை பொறுத்தவரையில் 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷனை (Engine Option) எம்ஜி மெஜஸ்டர் பெற்றுள்ளது. அதிகபட்சமாக 213 பிஹெச்பி பவர் மற்றும் 478 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
எம்ஜி மெஜஸ்டர் காருக்கு அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள், எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாகமோ அல்லது எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் மூலமாகவோ, 41 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, எம்ஜி மெஜஸ்டர் காரை 'புக்கிங்' செய்து கொள்ளலாம்.
எம்ஜி மெஜஸ்டர் கார் தற்போதைய நிலையில் பொது பார்வைக்கு மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் விலை (Price) எவ்வளவு? என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த மிக முக்கியமான கேள்விக்கான பதில் நமக்கு வரும் ஏப்ரல் மாதம்தான் தெரிய வரும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆம், வரும் ஏப்ரல் மாதம்தான் மெஜஸ்டர் காரின் விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு களமிறகப்படும் என எம்ஜி மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து எம்ஜி மெஜஸ்டர் காரின் டெலிவரி (Delivery) பணிகள் வரும் மே மாதத்தில் இருந்து தொடங்கப்படவுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எம்ஜி மெஜஸ்ட்ர் காரின் வருகை, இந்தியாவின் ஃபுல்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில், போட்டியை மிகவும் கடுமையானதாக மாற்றும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது. குறிப்பாக டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு, எம்ஜி மெஜஸ்டர் விற்பனையில் கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
எம்ஜி மெஜஸ்டர் கார், 7 சீட்டர் மற்றும் 6 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கும். எனவே அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்களுக்கு இது ஏற்றதாக இருக்கும். பிரீமியம் வசதிகள், அட்டகாசமான செயல்திறன் மற்றும் சிறப்பான நடைமுறை பயன்பாடு என அனைத்து அம்சங்களும் ஒருங்கிணைந்த ஒரு காராக எம்ஜி மெஜஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








