7 பேர் போர மாதிரி தரமான கார்.. ஏப்ரல் 27ல் வெளியிடும் நிறுவனம்.. என்ன கார்னு தெரியுமா?
எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் புதிய மெஜஸ்டர் எஸ்யூவி மாடலின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இந்தக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம். அதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 27ம் தேதின்று இதனை இந்தியாவில் வெளியிடவுள்ளது. அன்று, இந்தக் காரின் விலை உள்ளிட்ட விவரங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் ஏற்கனவே கிளாஸ்டர் என்ற ஃபுல் சைஸ் எஸ்யூவி மாடல் ஒன்றை விற்பனை செய்து வருகிறது எம்ஜி மோட்டார். அதற்கு மாற்றாகவே புதிய மெஜஸ்டர் எஸ்யூவி களமிறங்குகிறது. இதனை ஷார்ப் (Sharp) மற்றும் சாவி (Saavy) என இரண்டு வேரியன்ட்களாக வெளியிடவுள்ளது அந்நிறுவனம். ரூ.40 லட்சம் முதல் ரூ.45 லட்சத்திற்குள்ளான விலையில் இந்த எஸ்யூவியின் வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மெஜஸ்டர் எஸ்யூவியின் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.

மெக்கானிக்கலாக மெஜஸ்டரை புதிது என்று நாம் சொல்ல முடியாது. ஏனெனில் தற்போதைய கிளாஸ்டரின் உயர்நிலை வேரியன்ட்களில் பயன்படுத்தப்பட்டு வரும் 2.0 லிட்டர், ட்வின் டர்போ டீசல் இன்ஜின் தான் புதிய மெஜஸ்டரிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 8 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினானது, 215 hp பவர் மற்றும் 478.5 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.
இந்த ஃபுல் சைஸ் எஸ்யூவி மாடலில் மூன்று லாக்கிங் டிஃபரன்ஷியல்கள் மற்றும் ஸ்னோ, ராக், சேண்டு, மட் மற்றும் நார்மல் எனப் பல்வேறு ரைடிங் மோடுகளைக் கொடுத்துள்ளது எம்ஜி மோட்டார். லோ ரேஞ்சு செட்டப்புடன் கூடிய 4 வீல் டிரைவ் வசதி உட்பட ப்ரீமியம் எஸ்யூவி என்பதால் அனைத்து விதமான மேம்பட்ட அம்சங்களையும் இந்த மெஜஸ்டரில் எம்ஜி மோட்டார் கொடுத்திருக்கிறது.

பாக்ஸியான வடிவமைப்புடன், ரக்கடான ரோடு பிரசன்ஸ் கொண்ட காராகவே இருக்கிறது புதிய மெஜஸ்டர். காரின் முன்பக்கம் பெரிய கிரில் கிளாஸ் பிளாக் நிறத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு இரண்டு பக்கமும் செங்குத்தாக அடுக்கி வைக்கப்பட்டதைப் போல LED முகப்பு விளக்குகளும், அதற்கு மேலே ஸ்லீக்கான LED DRL-களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சில்வர் நிற ஸ்கிட் பிளேட், கருப்பு நிற ரக்கடான பம்பர்களுடன் மிகவும் முரட்டுத்தனமான, அதே நேரத்தில் மைல்டு கிளாஸியான தோற்றத்துடன் காட்சியளிக்கிறது புதிய மெஜஸ்டர்.
காரின் உட்புறம் மூன்று ஸ்போக்குகள் கொண்ட ஸ்டீயரிங் வீல், இரண்டு 12.4 இன்ச் டிஸ்பிளேக்கள், லெதர் போன்ற அப்ஹோல்ஸ்ட்ரி, பனோரமிக் சன்ரூஃப், 12 ஸ்பீக்கர்கள் கொண்ட JBL சவுண்டு சிஸ்டம், பவர்டு டெயில்கேட், 3 ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், டூயல வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்கள், வென்டிலேஷன் மற்றும் மஸாஜிங் வசதியுடன் கூடிய சீட்கள், 64 நிறங்கள் கொண்ட ஆம்பியன்ட் லைட்டிங் ஆகிய பல்வேறு தொழில்நுட்ப மற்றும் சொகுசு அம்சங்களும் இந்தக் காரில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள், லெவல் 2 ADAS, 360 டிகிரி கேமரா, ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர், ஹில் ஹோல்டு மற்றும் ஹில் டிஸண்டு கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் டொயோட்டா ஃபார்ச்சூனர், ஜீப் மெரிடியன் மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகிய எஸ்யூவிக்களுக்குப் போட்டியாக புதிய மெஜஸ்டர் விற்பனை செய்யப்படவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எத்தனை 7 சீட்டர் எஸ்யூவிக்கள் இருந்தாலும், டொயோட்டாவின் ஃபார்ச்சூனருக்கு இணையாக எந்தக் காரும் இதுவரை இந்தியாவில் விற்பனை செய்யப்படவில்லை, ஃபோர்டு எண்டேவரைத் தவிர. நீண்ட காலத்திற்குப் பிறகு ஃபார்ச்சூனருக்கு இணையாக போட்டியிடும் வகையில் ஒரு ஃபுல் சைஸ் எஸ்யூவியை எம்ஜி மோட்டார் விற்பனைக்குக் கொண்டு வருகிறது. இது வாடிக்கையாளர்களின் மனதில் எந்தளவிற்கு இடம் பிடித்கும் என்பது அடுத்த சில வாரங்களில் தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications








