பணக்காரங்க எல்லாம் இந்த 3 கார்ல ஒன்ன கண்டிப்பா வச்சிருப்பாங்க! அப்படி என்ன இருக்குது?

இந்தியாவில் எம்ஜி நிறுவனம் தனது மெஜஸ்டர் காரை வெளியிட்டுள்ளது. இந்த கார் இந்தியாவில் முதல் டி+ செக்மெண்ட் கார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காருக்கான புக்கிங் துவங்கியுள்ளது. வெறும் ரூ41,000 முன்பணம் செலுத்தி இந்த காரை தற்போது புக் செய்து கொள்ளலாம். இந்த காரின் அறிமுகம் வரும் ஏப்ரல் மாதம் நடக்கும் என எதிர்பார்க்கலாம். இந்நிலையில் இந்த காருக்கு போட்டியாக உள்ள டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் எம்ஜி குளோஸ்டர் ஆகிய கார்கள் குறித்த விபரங்களை காணலாம்.

முதலில் வாகனங்களின் அளவுகளை பார்க்கலாம் எம்ஜிமெஜஸ்டர் காரை பொருத்தவரை 5046 மிமீ நீளம், 20169 மிமீ அகலம், 1876 மிமீ உயரம், 2950 மிமீ வீல் பேஸ் கொண்டதாக இருக்கிறது. இந்த காரில் 343லிட்டர் பூட் வசதி உள்ளது. பெட்ரோல் டேங்கை பொருத்தவரை 75 லிட்டர் கொள்ளவு கொண்டதாகவும், 18 இன்ச் வீல் கொண்டதாகவும், 265/55-ஆர்19 அளவில் டயர்களும், 219 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 810 மிமீ ஆழம் கொண்ட தண்ணீரில் செல்லும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

MG Majestor Vs Fortuner Vs Gloster

இதுவே ஃபார்ச்சூனர் காரில் 4795 மிமீ நீளம், 1855 மிமீ அகலம், 1835 மிமீ உயரம், 2745 மிமீ வீல் பேஸ், 296 லிட்டர் பூட் வசதி, 80 லிட்டர் பெட்ரோல் டேங்க், 18 இன்ச் வீல், 265/60-ஆர்18 அளவில் டயர் 225 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 700 மிமீ தண்ணீரில் மூழ்கி செல்லும் திறன் கொண்டதாக உள்ளது.

எம்ஜி குளோஸ்டர் காரை பொருத்தவரை 4985 மிமீ நீளம், 1926 மிமீ அலகம், 1867 மிமீஉயரம் 2950 மிமீ வீல் பேஸ், 343 லிட்டர் பூட் வசதி, 75லிட்டர் டேங்க் கொள்ளளவு, 19 இன்ச் அலாய் வீல், 255/55-ஆர்19 டயர்கள், 210 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், 550 தண்ணீரில் மூழ்கி செல்லும் திறன் கொண்டதாக உள்ளது.

MG Majestor Vs Fortuner Vs Gloster

அடுத்ததாக பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை 3 கார்களும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. எம்ஜி மெஜஸ்டர் காரில் 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, பிளைண்ட் வியூ மானிட்டர், அடாஸ் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது. இது எம்ஜி குளோஸ்டர் காரில் காரில் உள்ளது. எம்ஜி ஃபார்ச்சூனர் காரில் 7 ஏர்பேக் மட்டுமே உள்ளது. மற்ற அம்சங்கள் இல்லை.

இந்த கார்களில் இன்ஜினை பொருத்தவரை எம்ஜி மெஜஸ்டர் மற்றம் எம்ஜி குளோஸ்டர் ஆகிய கார்களில் டீசல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே உள்ளது. ஃபார்ச்சூனர் காரில் மட்டுமே பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் உள்ளது. இந்த காரில் உள்ள பெட்ரோல் இன்ஜின் 2.7 லிட்டர் இன்ஜினாக உள்ளது. இது 164 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

டீசல் இன்ஜின் ஆப்ஷனை பொருத்தவரை எம்ஜி மெஜஸ்டர் காரில் 2.0 லிட்டர் 214 பிஎச்பி பவர் 478.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 4 வீல் டிரைவ்சிஸ்டம், டிரான்ஸ்ஃபர் கேஸ், முன்பக்கம், மத்தி மற்றும் பின்பக்கம் லாக்கிங் டிஃப்ரன்ஸியல் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் உள்ள டீசல் வேரியன்டை பொருத்தவரை 2.8 லிட்டர் கொண்ட இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 202 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. இது 6 ஸ்பீடு மேவுனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் வருகிறது. இதிலும் 4 வீல் டிரைவ், டிரான்ஸ்ஃபர் கேஸ், பின்பக்கம் லாக்கிங் டிஃப்ரன்ஸியல் அம்சம் உள்ளது.

எம்ஜி குளோஸ்டர் காரை பொருத்தவரை டீசல் இன்ஜினில் 2.0 லிட்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 159/214 பிஎச்பி பவர் மற்றும் 373.5 என்எம், மற்றும் 478.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இது 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 4 வீல் டிரைவ் , டிராஃபர்கேஸ் மற்றும் பின்பக்க லாக்கிங் டிஃப்ரன்ஸியல் உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 14, 2026, 13:30 [IST]
English summary
Mg majestor vs toyota fortuner vs mg gloster price specs comparison
மேலும்... #auto news
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+