டொயோட்டா ஃபார்ச்சூனர் மார்க்கெட்டை காலி பண்றதுதான் முதல் இலக்கு! 7 பேர் ஏறினாலும் தாராளமா இடம் கொடுக்கும் கார்
JSW எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் அதன் புதிய மெஜெஸ்டர் காரை இந்தியாவின் முதல் D+ எஸ்யூவி காராக விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. மெஜஸ்டர் காரை பற்றிய விபரங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், மே 27ஆம் தேதியான இன்று விலைகள் அறிவிக்கப்பட்டு கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் அளவில் பெரியதான எஸ்யூவி காராக டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. ஃபார்ச்சூனருக்கு போட்டியாக எம்ஜி நிறுவனம் புதிய மெஜஸ்டர் காரை இந்திய சந்தையில் களமிறக்குகிறது. இருப்பினும், ஃபார்ச்சூனரை காட்டிலும் எம்ஜி மெஜஸ்டர் அளவில் பெரியது ஆகும். இதனால்தான் இந்தியாவின் முதல் D+ எஸ்யூவி காராக மெஜஸ்டர் அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் எம்ஜி மெஜஸ்டர் மொத்தம் இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. அவையாவன, 2-வீல்-டிரைவ் மற்றும் 4-வீல்-டிரைவ் என்பன ஆகும். இதில், 2-வீல்-டிரைவ் வேரியண்ட்டில் என்ஜினின் இயக்க ஆற்றல்கள் காரின் இரு சக்கரங்களுக்கு மட்டுமே செல்லும்; அதன் மூலம் மீதி இரு சக்கரங்கள் இயங்கும்.
அதுவே, 4-வீல்-டிரைவ் வேரியண்ட்டில் என்ஜினின் இயக்க ஆற்றல்கள் காரின் நான்கு சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் செல்லும். இதில் 2-வீல்-டிரைவ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.40.99 லட்சமாகவும், 4-வீல்-டிரைவ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.44.99 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 2-வீல்-டிரைவ் வேரியண்ட்டை 6 அல்லது 7 இருக்கைகள் உடன் வாங்கலாம்.

அதற்கேற்ப காரின் விலை வேறுப்படும். அதுவே, 4-வீல்-டிரைவ் வேரியண்ட் ஆனது 7-சீட்டர் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இரு வேரியண்ட்களை பொறுத்து அவற்றில் கிடைக்கும் அம்சங்களும் சற்று வேறுப்படுகின்றன. அவை என்னென்ன என்பதை பற்றி கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.
| Tech Spec & Key Features of MAJESTOR | MG MAJESTOR 4x2 AT | MG MAJESTOR 4x4 AT | MAJESTOR Savvy 4x2 AT | MAJESTOR Savvy 4x4 AT |
| Dimension (L x W x H) mm | 5,046 x 2,016 x 1,870 | 5,046 x 2,016 x 1,870 | 5,046 x 2,016 x 1,870 | 5,046 x 2,016 x 1,870 |
| Wheelbase (mm) | 2,950 | 2,950 | 2,950 | 2,950 |
| Power | 215.5 PS | 215.5 PS | 215.5 PS | 215.5 PS |
| Torque | 478.5 Nm | 478.5 Nm | 478.5 Nm | 478.5 Nm |
| Transmission | 8 AT | 8 AT | 8 AT | 8 AT |
| Panoramic Sunroof | - | - | ✓ | ✓ |
| ADAS Level 2 | - | - | ✓ | ✓ |
| Front Massage Seats | - | - | ✓ | ✓ |
| Dual 12.3" Infotainment & Digital Cluster | - | - | ✓ | ✓ |
| Electric Parking Brake & Electric Shifter | - | - | ✓ | ✓ |
| Speakers | - | - | 12 JBL Speakers | 12 JBL Speakers |
| Power Driver's Seat | - | - | 12 Way | 12 Way |
| Ventilated Seats | - | - | ✓ | ✓ |
| 360 Degree Camera | - | - | ✓ | ✓ |
| Rain Sensing Wipers | - | - | ✓ | ✓ |
| Auto AC (3 Zone) | - | - | ✓ | ✓ |
| Wheel Size (R19) | - | - | ✓ | ✓ |
| Dual Wireless Charger | - | - | ✓ | ✓ |
| Electronic Roll Mitigation | - | - | ✓ | ✓ |
| Hill Descent Control | - | - | ✓ | ✓ |
| Enhanced Off-Roading (Crawl Control, M-Lock) | - | - | - | ✓ |
| Triple Differential Lock | - | - | - | ✓ |
எம்ஜி மெஜஸ்டரில் அதிகப்பட்சமாக சுமார் 215.5 பிஎஸ் மற்றும் 478.5 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்றப்படி, மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் எதிலிலும் இந்த கார் கிடைக்காது.
ஏற்கனவே கூறியதுபோல், இந்த காரில் என்ஜின் உடன் 2-வீல்-டிரைவ் சிஸ்டத்தை பெறலாம் அல்லது 4-வீல்-டிரைவ் சிஸ்டத்தை பெறலாம். 4-வீல்-டிரைவ் சிஸ்டத்தை தேர்வு செய்தால் 10 ஆஃப்-ரோடு மோட்கள் காரில் கிடைக்கும். இதன் மூலமாக, மழை, பனி போன்ற வலுக்கும் பரப்பு கொண்ட பகுதிகளிலும் மெஜஸ்டர் காரை தைரியமாக ஓட்டிச் செல்லலாம்.
மேலும், 4-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் வாங்கினாலும் தேவைப்பட்டால் உங்களால் 2-வீல்-டிரைவில் காரை இயக்க முடியும். மெஜஸ்டர் காரை வழக்கமான சாலைகளில் பயன்படுத்துவது மட்டுமின்றி, ஆஃப்-ரோடு சாலைகளிலும் பயன்படுத்தலாம் என்கிற விளம்பரத்துடனே எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இதற்கேற்ப, முன், பின் & செண்டர் டிஃப்ரென்ஷியல் லாக்குகளை இந்த காரில் பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான மார்க்கெட் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது என்றாலும், எம்ஜி மெஜஸ்டர் போன்ற அளவில் பெரியதான எஸ்யூவி கார்கள் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஃபார்ச்சூனரை போன்று, ஆஃப்-ரோடு பயணங்களுக்கு கொண்டு செல்வதற்கு ஏற்ற காராக மெஜஸ்டர் விளங்குவதால், இந்த ஒரு பாயிண்ட் பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications