4 லட்சம் ரூபாய் சலுகை விலையில் விற்பனை செய்யப்படும் கார்.. உடனே ஷோரூம்க்கு வண்டிய விடுங்க
இந்த ஜூன் மாதம் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் அனைத்து கார் மாடல்களுக்கும் கணிசமான அளவில் சலுகைகளை வழங்கியிருக்கிறது எம் மோட்டார். குறைந்தபட்சமாக 50,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 4 லட்சம் ரூபாய் வரையிலான சலுகைகளை வழங்கியிருக்கிறது. எம்ஜி மோட்டாரின் எந்தெந்த கார் மாடலுக்கு எவ்வளவு சலுகை வழங்கப்பட்டிருக்கிறது என்பதை சற்று விரிவாக இங்கே நாம் பார்க்கலாம்.
இந்த ஜூன் மாதம் அதிக மதிப்பிலான சலுகைகளை எம்ஜி மோட்டார் வழங்கியிருக்கிறது அதன் கிளாஸ்டர் எஸ்யூவிக்குத் தான். இந்த கிளாஸ்டர் எஸ்யூவிக்கு மாற்றாகவே புதிய மெஜஸ்டர் எஸ்யூவியை இந்தியாவில் வெளியிட்டுவிட்டது அந்நிறுவனம். இதனால் இந்த மீதமிருக்கும் கார்களை விற்பனை செய்ய சுமார் 4 லட்சம் ரூபாய் வரையிலான சலுகைகளை வழங்கியிருக்கிறது. இதில் 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தள்ளுபடியும், 50,000 ரூபாய் மதிப்பிலான எக்சேஞ்சு போனஸும் அடங்கும்.

இரண்டாவதாக அதிக சலுகையைப் பெற்றிருப்பது அதன் ஃபிளாக்ஷிப் எலெக்ட்ரிக் காரன ZS EV. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலுக்கு 2.55 லட்சம் ரூபாய் வரையிலான சலுகைகளை இந்த ஜூன் மாதம் வழங்கியிருக்கிறது எம்ஜி மோட்டார். இதில் 2.15 லட்சம் ரூபாய் மதிப்பிலான தள்ளுபடியும், 20,000 மதிப்புடைய லாயல்டி போனஸும் அடங்கும்.
இந்தியாவில் அஸ்டர் என்ற எரிபொருள் எஸ்யூவி மாடலையும் எம்ஜி மோட்டார் விற்பனை செய்து வருகிறது. இந்த அஸ்டரின் எலெக்ட்ரிக் வடிவமாகவே ZS EV உருவாக்கப்பட்டது. இந்த அஸ்டர் எஸ்யூவிக்கு 85,000 ரூபாய் வரையிலான சலுகைகளை வழங்கியிருக்கிறது எம்ஜி மோட்டார். இதில் 25,000 ரூபாய் மதிப்பிலான தள்ளுபடி, 20,000 மதிப்பிலான எக்ஸ்சேஞ்சு போனஸ், 20,000 மதிப்புடைய லாயல்டி போனஸ் மற்றும் 20,000 மதிப்புடைய காப்பரேட் தள்ளுபடி ஆகியவை அடங்கும்.

கடந்த மாதம் வரை இந்தியாவில் விலை குறைவான எலெக்ட்ரிக் காராக இருந்து வந்த காமெட்டிற்கு 60,000 ரூபாய் வரையிலான சலுகைகளை இந்த மாதம் அறிவித்திருக்கிறது எம்ஜி மோட்டார். இதில் 10,000 ரூபாய் மதிப்புடைய தள்ளுபடி, 20,000 ரூபாய் மதிப்புடைய லாயல்டி போனஸ் மற்றும் 20,000 ரூபாய் மதிப்புடைய எக்ஸ்சேஞ்சு போனஸ் ஆகியவை அடங்கும். இந்த எலெக்ட்ரிக் காரை 7.32 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.
கடைசியாக ஹெக்டர் எரிபொருள் எஸ்யூவி மற்றும் விண்ட்ஸர் எலெக்ட்ரிக் கார் ஆகிய இரண்டு மாடல்களுக்கும் 50,000 ரூபாய் வரையிலான சலுகைகளை அளிக்கிறது எம்ஜி மோட்டார். விண்ட்ஸர் தான் இந்தியாவில் இப்போது அதிகம் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் காராக இருந்து வருகிறது. எனவே இந்தக் காருக்கு தள்ளுபடி அளிக்கவில்லை. எக்ஸ்சேஞ்சு போனஸ் மற்றும் லாயல்டி போனஸ் ஆகிய சலுகைகளை மட்டுமே அளிக்கிறது எம்ஜி மோட்டார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜியின் கார்களை வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு இதுவொரு சிறந்த வாய்ப்பு. குறிப்பாக கிளாஸ்டர் எஸ்யூவியை சலுகைகளுடன் இன்னும் குறைவான விலைக்கே டீலர்ஷிப்கள் மூலம் வாங்கலாம். இந்த ஃபுல் சைஸ் எஸ்யூவி மாடலை 38.33 லட்சம் ரூபாய் முதல் 46.24 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் எம்ஜி மோட்டார் விற்பனை செய்தது.
தற்போது இந்த எஸ்யூவியை அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டது. இதற்கு மாற்றாக வேறொரு காரை கொண்டு வந்த காரணத்தினாலேயே இதன் விற்பனையை எம்ஜி மோட்டார் நிறுத்தியிருக்கிறது. எனவே கொடுக்கப்படும் சலுகைகளுக்கும் மேலாகவே விலையைக் குறைத்து வாங்குவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. வாடிக்கையாளர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ZS EV-யும் அதேபோல் சலுகைகளுடன் வாங்குவதற்கு சிறந்த தேர்வாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications