டாடாவுக்கே தண்ணி காட்டும் எம்ஜி எலெக்ட்ரிக் கார் இதுதான்! ஒரே மாதத்தில் 3,500 கஸ்டமர்ஸ்!
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India) நிறுவனம், 2025 டிசம்பரில் மொத்தம் 6,500 கார்களை விற்பனை செய்துள்ளது. இது 2024 டிசம்பரில் விற்பனையான 7,516 எம்ஜி கார்களுடன் ஒப்பிடுகையில் 14% சரிவைக் காட்டுகிறது. இருப்பினும், 2025 நவம்பரில் விற்பனையான 5,754 எம்ஜி கார்களுடன் ஒப்பிடுகையில், இது 13% வளர்ச்சியாகும்.
புதிய 2026 எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் (Hector Facelift) அறிமுகப்படுத்தப்பட்டது இந்த விற்பனை உயர்வுக்கு முக்கிய காரணமாகும். அதேபோன்று, 2025ஆம் ஆண்டில் எம்ஜி விண்ட்சர் புரோ (Windsor Pro) எலெக்ட்ரிக் கார் அறிமுகப்படுத்தப்பட்டதும் கூட இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஒரு காரணம் ஆகும்.

இதைத் தொடர்ந்து, எம்ஜி எம்9 பிரசிடென்ஷியல் லிமௌசைன் (M9 Presitential Limousine) மற்றும் 2-கதவுகளை கொண்ட கன்வெர்ட்டிபிள் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரான சைபர்ஸ்டர் (Cyberster) ஆகியவையும் எம்ஜி நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றை தொடர்ந்து, இந்த 2026ஆம் ஆண்டு முழுவதும் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதில் எம்ஜி நிறுவனம் கவனம் செலுத்தவுள்ளது.
கடந்த 2025 டிசம்பர் மாதத்தில், எம்ஜி விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரின் விற்பனை 3,596 யூனிட்களாக இருந்தது. இது முந்தைய 2024ஆம் ஆண்டின் இதே டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 5% சரிவையும், 2025 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 11% சரிவையும் காட்டுகிறது. இந்த சரிவுகள் இருந்தபோதிலும், 2025 முழுவதும் விண்ட்சர் இவி ஆனது எலெக்ட்ரிக் பயணிகள் வாகனப் பிரிவில் ஒரு முக்கிய வீரராக தன்னை நிலைநிறுத்தி, சாதனை படைத்துள்ளது.

இந்த விற்பனைப் பட்டியலில் ஹெக்டர் (Hector) இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 2025 டிசம்பரில் 1,147 ஹெக்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டின் டிசம்பர் உடன் ஒப்பிடுகையில் 16% வீழ்ச்சியைக் காட்டினாலும், 2025 நவம்பரில் வெறும் 278 ஹெக்டர் கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்த நிலையில் அதனுடன் ஒப்பிடுகையில் விற்பனை சுமார் 313% அதிகரித்துள்ளது.
டாடா ஹாரியர் (Harrier), சஃபாரி (Safari) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (Mahindra XUV7XO) போன்ற கார்களுடன் விற்பனையில் போட்டியிடும் மிட்-சைஸ் எஸ்யூவி காரான புதிய எம்ஜி ஹெக்டர்/பிளஸ் ஃபேஸ்லிஃப்ட் பல புதிய அம்சங்களுடன் சமீபத்தில் களமிறங்கியுள்ளது. எம்ஜி கோமெட் இவி (Comet EV) சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இதன் விற்பனை 2025 டிசம்பரில் 1,143 யூனிட்களை எட்டி, முந்தைய 2024ஆம் ஆண்டின் டிசம்பரை விட 63% அதிகரித்துள்ளது. ஏனெனில், 2024 டிசம்பரில் 700 கோமெட் இவி எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதேபோல், 2025 நவம்பரில் விற்பனை செய்யப்பட்ட 897 கோமெட் இவி கார்களுடன் ஒப்பிடுகையிலும் இந்த விலை குறைவான எம்ஜி எலெக்ட்ரிக் காரின் விற்பனை 27% வளர்ச்சி அடைந்துள்ளது.
இவற்றிற்கு அடுத்து 4வது இடத்தில் உள்ள எம்ஜி இசட்.எஸ் இவி (ZS EV) கடந்த மாதம் 502 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. அதுவே, 2024 டிசம்பரில் 858 இசட்.எஸ் இவி எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையான நிலையில், இது 41% சரிவாகும். எனினும், 2025 நவம்பரில் 400 இசட்.எஸ் இவி கார்கள் விற்பனையானதில் இருந்து 26% வளர்ச்சி கண்டுள்ளது.

அதேநேரம், எம்ஜி அஸ்டர் (Astor) காரின் தேவை கடந்த டிசம்பரில் கணிசமாக குறைந்துள்ளது. 2025 டிசம்பரில் 112 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி, கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 84% சரிவையும், 2025 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 25% சரிவையும் விற்பனையில் அஸ்டர் கண்டுள்ளது.
ஷார்ப் (Sharp), சாவி (Savvy) மற்றும் சாவி 6 சீட்டர் (Savvy 6-Seater) வேரியண்ட்களில் கிடைக்கும் எம்ஜி க்ளோஸ்டர் (Gloster), 2024 டிசம்பரில் 100 யூனிட்களும், 2025 நவம்பரில் 5 யூனிட்களும் விற்கப்பட்ட நிலையில், 2025 டிசம்பரில் ஒரு யூனிட் கூட விற்பனையாகவில்லை.

| No | MG Car Sales | Dec-25 | Dec-24 | Diff | Growth % YoY | % Share Dec 25 |
|---|---|---|---|---|---|---|
| 1 | Windsor | 3,596 | 3,785 | -189 | -4.99 | 55.32 |
| 2 | Hector | 1,147 | 1,373 | -226 | -16.46 | 17.65 |
| 3 | Comet | 1,143 | 700 | 443 | 63.29 | 17.58 |
| 4 | ZS EV | 502 | 858 | -356 | -41.49 | 7.72 |
| 5 | Astor | 112 | 700 | -588 | -84.00 | 1.72 |
| 6 | Gloster | 0 | 100 | -100 | -100.00 | 0.00 |
| - | Total | 6,500 | 7,516 | -1,016 | -13.52 | 100.00 |
| No | MG Car Sales | Dec-25 | Nov-25 | Diff | Growth % MoM | % Share Nov 25 |
|---|---|---|---|---|---|---|
| 1 | Windsor | 3,596 | 4,025 | -429 | -10.66 | 69.95 |
| 2 | Hector | 1,147 | 278 | 869 | 312.59 | 4.83 |
| 3 | Comet | 1,143 | 897 | 246 | 27.42 | 15.59 |
| 4 | ZS EV | 502 | 400 | 102 | 25.50 | 6.95 |
| 5 | Astor | 112 | 149 | -37 | -24.83 | 2.59 |
| 6 | Gloster | 0 | 5 | -5 | -100.00 | 0.09 |
| - | Total | 6,500 | 5,754 | 746 | 12.96 | 100.00 |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய எலெக்ட்ரிக் கார்கள் மூலமாக எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் சந்தையில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து விரிவுப்படுத்தி வருகிறது. குறிப்பாக, கோமெட் இவி மற்றும் விண்ட்சர் இவி எலெக்ட்ரிக் கார்களின் அறிமுகம் எம்ஜி நிறுவனத்திற்கு பெரிய உந்துசக்தியாக அமைந்துள்ளது. இந்த நிலையில், எஸ்யூவி (SUV) கார்கள் வரிசையை விரிவாக்க எம்ஜி தயாராகி வருகிறது.
2025 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள மெஜேஸ்டர் (Majestor) ஆனது க்ளோஸ்டர் காருக்கு மேல் நிலைநிறுத்தப்படும் ஒரு புதிய விலையுயர்ந்த எம்ஜி எஸ்யூவி ஆகும். பிரீமியம் எஸ்யூவி கார்கள் பிரிவில் எம்ஜி நிறுவனத்தின் ஆதிக்கத்தை பலப்படுத்தும் நோக்கில் மெஜேஸ்டர் அறிமுகம் செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications









