ஒரே ஆண்டில் ஓஹோன்னு வளர்ச்சி! இந்த கம்பெனி காரை இவ்வளவு பேர் வாங்குவாங்கனு நினைச்சு கூட பாக்கல!
2026ம் ஆண்டு பிறந்துள்ள நிலையில் தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வரிசையாக தங்களின் கடந்த டிசம்பர் மாத விற்பனை விபரங்கள் மற்றும் கடந்த 2025ம் ஆண்டு முழுவதும் நடந்த விற்பனை விபரங்களை வெளியிட்டு வளர்ச்சி மற்றும் வீழச்சி விபரங்களை பகிர்ந்து வருகின்றன. அதன்படி ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி அந்நிறுவனத்தின் விற்பனை விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் மொத்தம் 6500 வாகனங்களையே விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு டிசம்பர் மாதம் 7516 கார்களை விற்பனை செய்திருந்தது. அதை ஒப்பிடும் போது 13.5 சதவீதம் கடந்த டிசம்பர் மாதம் விற்பனை வீழ்ச்சி தான் ஏற்பட்டுள்ளது. ஆனால் கடந்த நவம்பர் மாதம் இந்நிறுவனம் 5754 வாகனங்களை தான் விற்பனை செய்திருந்தது. அதை ஒப்பிட்டால் நவம்பர் மாத விற்பனையை விட டிசம்பர் மாதம் 12.9 சதவீதம் விற்பனை அதிகமாகியுள்ளது.

2025ம் ஆண்டிற்கான விற்பனை விபரங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை மொத்தம் 70,554 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2024ம் ஆண்டில் மொத்தம் நடந்த விற்பனையை ஒப்பிடும் போது 19 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.
கடந்த 2025ம் ஆண்டு எம்ஜி மோட்டார் நிறுவனம் சில முக்கியமான மைல்கல்களை எட்டி பிடித்தது. அதன்படி 1 லட்சம் இவி வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்தது. இந்நிறவனத்தின் எம்ஜி விண்ட்ஸர் இவி கார் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் இவி காராக மாறியுள்ளதால் மக்கள் பலர் இந்த காரை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்த காரில் ஸ்டாண்டர்டு மற்றும் புரோ ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன.

இந்நிறுவனம் சமீபத்தில் தனது 2026 எம்ஜி ஹெக்டர் காரை அறிமுகப்படுத்தியது. இந்த கார் விலை குறைவாக அறிமுகமானது பலரை ஆச்சரியப்படுத்தியது.இந்நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் காரானஜ எம்ஜி மெஜஸ்டர் காரை இதுவரை அறிமுகம் செய்யவில்லை. இந்த கார் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் நடடந்த பாரத் மொபிலிட்டி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. பின்னர் பல இடங்களில் சோதனை செய்யப்பட்டது.
எம்ஜி நிறுவனம் தனது விண்ட்ஸர் கார் மூலம் கடந்த 2025ம் ஆண்டு அதிக கார்களை விற்பனை செய்தது. இது மட்டுமல்ல அந்நிறுவனத்தின் கனவு திட்டமான எம்ஜி செலெக்ட் ஷோரூமை திறந்தது. இதன் மூலம் சொகுசு இவிகளை விற்பனை செய்து வருகிறது. இந்த ஷோரூம் வழியாக எம்ஜி எம் 9 பிரஸிடென்ஸியல் லிமோ, எம்ஜி சைபர்ஸ்டர் எலெக்ட்ரிக் 2 டோர் கன்வெர்டபிள் ஸ்போர்ட்ஸ் கார் உள்ளிட்ட கார்களை விற்பனை செய்து வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எம்ஜி நிறுவனம் சில முக்கியமான மைல்கல்லை எட்டி பிடித்து வெற்றிகரமாக 2025ம் ஆண்டை நிறைவு செய்துள்ளது. இந்நிறுவனம் வரும் காலங்களில் சிறப்பான விற்பனை வளர்ச்சியை பெறும். இந்த மாதமே பொங்கல் வருவதால் தமிழகத்தில் இந்த காரின் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









