டாடாவை தூக்கி சாப்பிட்ட எலெக்ட்ரிக் கார்.. போட்டி போட்டு வாங்கும் வாடிக்கையாளர்கள்!

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் மாடல் என்றால் டாடாவின் ஏதாவது ஒரு மாடலைத் தான் கைகாட்டுவோம். ஆனால் இல்லை, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் மாடல் எம்ஜி மோட்டாருடையது. ஒட்டுமொத்தமாக அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமே முன்னணியில் இருக்கிறது. ஆனால், குறிப்பிட்ட மாடல் அதிகம் விற்பனை செய்யப்படுவதில் எம்ஜி மோட்டாரின் விண்ட்ஸர் EV-யே முதலிடத்தில் இருக்கிறது.

டாடாவின் நெக்ஸான் EV, பன்ச் EV எல்லாம் அதற்கடுத்தடுத்த இடங்களிலேயே உள்ளன. இந்நிலையில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் மார்ச் மாத விற்பனை குறித்த தரவுகள் வெளியாகியிருக்கின்றன. அதில் வழக்கம் போல விண்ட்ஸர் EV அதிகளவிலான விற்பனைைப் பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் மட்டும் சுமார் 4,530 விண்ட்ஸர் EV கார்கள் இந்தியாவில் விற்பனையாகியிருக்கின்றன.

MG Comet EV

ஒட்டுமொத்தமாக மார்ச் மாதம் 6,528 கார்களை விற்பனை செய்துள்ளது எம்ஜி மோட்டார். இந்தியாவில் தற்போது மூன்று எரிபொருள் கார் மாடல்களையும், மூன்று எலெக்ட்ரிக் கார் மாடல்களையும் விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். அதில் மூன்று எலெக்ட்ரிக் கார்கள் மட்டும் 5,623 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன. எரிபொருள் கார்களின் விற்பனை அளவு 905 யூனிட்டுகள் தான். கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது தற்போது அதன் விற்பனை 31.69% அதிகரித்துள்ளது.

எரிபொருள் மற்றும் எலெக்ட்ரிக் என இரண்டு வகையான கார் மாடல்களையும் விற்பனை செய்தாலும், பிரதானமாக எலெக்ட்ரிக் கார் நிறுவனமாக மாறி வருகிறது எம்ஜி மோட்டார். அதற்கேற்ப அந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் விற்பனையும் கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது, கடந்த மார்ச் மாதம் 54.39% வரை உயர்ந்துள்ளது. ஆனால், எரிபொருள் கார்களின் விற்பனை 31.18% வரை குறைந்திருக்கிறது.

MG ZS EV

2024ல் வெளியிடப்பட்டதில் இருந்தே எம்ஜியின் விண்ட்ஸர் EV தான் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் கார் மாடலாக இருந்து வருகிறது. வழக்கமான பாதையில் பயணிக்காமல், வாடிக்கையாளர்களுக்கு என்ன அம்சங்கள் முக்கியம், என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்து அதற்கேற்ற அம்சங்களை எம்ஜி கொடுத்திருந்தது இந்த அதிக விற்பனைக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தற்போது விண்ட்ஸர் EV, ZS EV மற்றும் காமெட் EV ஆகிய மூன்று மாஸ் மார்க்கெட் எலெக்ட்ரிக் கார் மாடல்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். இது தவிர சைபர்ஸ்டர் EV, M9 ஆகிய சொகுசு எலெக்ட்ரிக் மாடல்களும் MG செலக்ட் ஷோரூம்கள் மூலமாக தனியே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எம்ஜி விற்பனை செய்யும் இந்த ஐந்து எலெக்ட்ரிக் கார் மாடல்களுமே ஒன்றோடொன்று தொடர்பில்லாமல் தனித்த அடையாளங்களைக் கொண்டிருப்பவையாக இருக்கின்றன.

ஒவ்வொரு கார் மாடலின் வாடிக்கையாளர் வட்டமும் முழுமையாக வேறு வேறாக இருக்கிறது. இதனால் தான் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் டாடா மோட்டார்ஸுக்கு அடுத்தபடியாக எம்ஜி மோட்டார் இருந்து வருகிறது. விண்ட்ஸர் EV-யின் விற்பனையைக் கடந்து, 682 யூனிட்டுகள் காமெட் EV-யையும், 411 யூனிட்டுகள் வரை ZS EV-யையும் மார்ச் மாதம் விற்பனை செய்துள்ளது எம்ஜி மோட்டார்.

எரிபொருள் கார்களில் அந்நிறுவனத்திற்கு அதிகம் விற்பனையாகியிருப்பது ஹெக்டர் தான். 850 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து அஸ்டர் 55 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளது. கிளாஸ்டர் என்ற ஃபுல் சைஸ் எஸ்யூவி மாடல் ஒன்றையும் விற்பனையில் வைத்திருந்தது எம்ஜி. சமீபத்தில் தான் அதற்கு மாற்றாக மெஜஸ்டர் என்ற புதிய எஸ்யூவியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. டொயோட்டா ஃபார்ச்சூனருக்குப் போட்டியாக விற்பனை செய்யப்படவுள்ளது இந்தக் கார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எரிபொருள் கார்கள் பிரிவில் மேலே கூறியது போல மிகவும் குறைவான விற்பனையையே பதிவு செய்து வருகிறது எம்ஜி மோட்டார். அதில் அந்நிறுவனம் பெரிய அளவில் கவனம் செலுத்தவும் இல்லை. ஆனால் எலெக்ட்ரிக் கார் பிரிவில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக இருந்து வருகிறது. இந்தியாவின் மற்ற கார் நிறுவனங்களால் இந்தப் பிரிவில் தவிர்க்க முடியாத ஒன்றாகவும் உருவெடுத்திருக்கிறது. இந்தியாவில் வாடகை பேட்டரி (BaaS) திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் எம்ஜி மோட்டார் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, April 17, 2026, 12:41 [IST]
English summary
Mg motor sales report march 2026 windsor ev in first place check all details here
மேலும்... #mg motor #cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+