இந்த 5 கார் போதும் மொத்தமா எல்லாமே மாறிடும்! 2026ல் மாஸ் காட்டப்போகும் எம்ஜி!

எம்ஜி நிறுவனம் இந்தியாவில் இந்தாண்டு 5 புதிய கார்களை களம் இறக்க முடிவு செய்துள்ளது. அதன்படி இந்நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் வாகன்ஙகளையும் களம் இறக்க திட்டமிட்டுள்ளது. இது போக எம்ஜி செலக்ட் நெட்வோர்க்கை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

எம்ஜி எஸ் 5

எம்ஜி இசட்எஸ் இவி காருக்கு மாற்றாக எம்ஜி நிறுவனம் எஸ் 5 என்ற காரை களம் இறக்குகிறது. இந்த காரில் புதிய எல்இடி ஹெட்லைட், மறுவடிவமைப்பு செய்யபப்ட்ட 17 இன்ச் வீல், டாப் வேரியன்ட்டில் 18 இன்ச் வீல், கனெக்டெட் டெயில் லைட், 12.8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, கீலெஸ் எண்ட்ரி, வயர்லெஸ் சார்ஜர், ரைடு மோடுகள் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன.

MG Motor Upcoming Cars

இந்த கார் எம்ஜி 4 எலெக்ட்ரிக் ஹேட்ச் பேக் கார் உருவாக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. இது அதிகபட்சமாக 49 kWh முதல் 64kWh வரையிலான பேட்டரி திறனுடன் விற்பனைக்கு வரும் இது 168 எச்பி முதல் 228 எச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்படுகிறது. இ்நத கார் முழு சார்ஜில் 480 கி.மீ பயணிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் ரூ22-28 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஜி 4

எம்ஜி நிறுவனம் தவனது புதிய தலைமுறை எம்ஜி 4 ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இந்த கார் முந்தைய மாடலை விட பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பெரிய கிரெட்டா இவி காருக்கு போட்டியாக களம் இறங்கலாம். ஏன் டாடா சியாரா காருக்கு போட்டி காராக கூட வாய்ப்புள்ளுது. இந்த காரில் 2750 மிமீ வீல் பேஸ் உள்ளது. இந்த காரின் வடிவமைப்பு சைபர்ஸ்டர் காரின் வடிவமைப்பை ஒத்து இருக்கிறது. இந்த காரில் 360 டிகிரிகேமரா, வென்டிலேட்ட முன்பக்க சீட்கள், அடாஸ் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

MG Motor Upcoming Cars

இந்த காரில் 65kWh பேட்டரி பேக் உள்ளது. இந்த காரின் தயாரிப்பை பெரும்பாலும் இந்தியாவிலேயே செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளுது. இந்த கார் மாடுலர் ஸ்கேலபிள் பிளாடர்ஃபார்மில் உருவாக்கப்படுகதிறது. இந்த காரில் பின்ப்க்கம் மோட்டார் பொருத்தப்பட்டு ரியர் வீல் டிரைவ்ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 7.9 நொடியில் பிக்கப் செய்துவிடும்.

எம்ஜி ஒன் எஸ்யூவி

எம்ஜி நிறுவனம் ஒன் என்ற எஸ்யூவி காரை களம் இறக்குகிறது. இந்த காரின் வடிவமைப்பு சிக்மா கட்டுமானத்திற்கு ஏற்றார் போல வடிவமைக்கப்பட்டுள்ளுது. இது 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் 181 எச்பி பவர் மறஅம் 285 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிமவைக்கப்பட்டுள்ளுது. இது 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸ்

எம்ஜிநிறுவனம் தனது ஹெக்டர் மற்றுமு் ஹெக்டர் பிளஸ் காரின் ஃபேஸ்லிஃ்ப்ட் வெர்ஷனை வெளியிட தயாராகி வருகிறது. கடந்த டிசம்பர் மாதமே இதன் அறிமுகம் நடந்துவிட்டது. இதன் பெட்ரோல் வேரியன்ட்டின் விலை விபரங்கள் மட்டுமே வெளியாகியளு்ளது டீசல் வேரியன்ட்களின் விலை வரும் மாதங்களில் அறிவிக்கப்படலாம் என எதரி்பார்க்கப்படுகிறது.

எம்ஜி ஹெக்டர் பிளஸ் டீசல் 7 சீட்டர் கார் ரூ16.45 லட்சம் முதல் ரூ19.75 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக விற்பனைக்கு வந்தால் பெட்ரோல் காரைவிட டீசல் கார்கள் விலை அதிகமாக இருக்கும்.

மெஜஸ்டர்

எம்ஜி நிறுவனம் தனது இந்தியாவின் முதல் டி+ செக்மெண்ட் எஸ்யூவி காராக இந்த காரை இறக்குகிறது. இது டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு போட்டியாக களம் இறங்குகிறது. இந்த காரில் 2.0 லிட்டர் டீசல்இன்ஜின் ஆப்ஷன் உடன் வருகிறது. இது ஆஃப்ரோடு அம்சங்கள் நிறைந்த காராக உருவாக்கப்பட்டுள்ளது.

டிரை்வஸ்பார்க் கருத்து: எம்ஜி நிறுவனம் 5 கார்கள இந்த 2026ம் ஆண்டிற்கு விற்பனைக்கு கொண்டு வருகிறது. இது நிச்சயம் மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த கார்கள் நிச்சயம் மிகப்பெரிய அளவில் விற்பனையை பெற வழி வகுக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 24, 2026, 17:45 [IST]
English summary
Mg motor upcoming cars new india mg one hector diesel
மேலும்... #mg motor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+