புதிய எம்ஜி தோமஹாக் PHEV கார் 40 கிமீ மைலேஜ், 1,100 கிமீ ரேஞ்ச் தரும் என்பது உண்மையா? எப்படி சாத்தியம்?

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய எம்ஜி தோமஹாக் ஹைப்ரிட் கார் நேற்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த கார் குறிப்பிட்ட கணக்கீடுகளின்படி, லிட்டருக்கு 40கிமீ மைலேஜ் என்பதுடன், எரிபொருள் முழுமையாக நிரப்பப்படும்பட்சத்தில் 1,100 கிமீ வரை ரேஞ்ச் தரும் என்று எம்ஜி நிறுவனம் தெரிவித்தது. ஒரு 7 சீட்டர் காருக்கு இந்த அளவு மைலேஜ் என்பது எல்லோர் மனதிலும் கேள்விகளை எழுப்பியது. இந்த நிலையில், இந்த காரின் பிளக் இன் ஹைப்ரிட் தொழில்நுட்பம் பிற ஹைப்ரிட்டுகளைவிட சற்று வித்தியாசமானதாக உருவாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே எம்ஜி நிறுவனம் இந்த மைலேஜ் விபரங்களை சோதனை தரவுகளின்படி கூறுகிறது.

எம்ஜி தோமஹாக் PHEV ஒரு சாதாரண பெட்ரோல் ஹைப்ரிட் கார் அல்ல என்பது இங்கே கவனிக்க வேண்டும். இதில் 1.5 லிட்டர் Atkinson-cycle பெட்ரோல் எஞ்சின் மற்றும் 20.5 kWh பேட்டரி மற்றும் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளன. முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி மூலம் மட்டும் 115 கிமீக்கும் அதிகமான தூரம் செல்ல முடியும் என்று எம்ஜி தெரிவிக்கிறது. இது பெட்ரோல் எஞ்சின் துணை இல்லாமல் வெறும் பேட்டரி மின்சாரத்தை பயன்படுத்தி மின் மோட்டாரில் இயங்கும். தினசரி அலுவலகம் செல்வது உள்ளிட்ட குறைந்த தூர பயணங்களுக்கு இது மிகவும் ஏதுவானது.

MG Hector Hawk PHEV

அதாவது, லிட்டருக்கு 40 கிமீ மைலேஜ் என்பதை பெட்ரோல், டீசல் கார்கள் போன்று நேரடியாக கணக்கீடு செய்ய முடியாது. ஏனெனில்,தோமஹாக் PHEV ஹைப்ரிட் காரின் மிகப்பெரிய தொழில்நுட்ப பலம் என்பது சாலைநிலை, வேகம் இவற்றை பொறுத்து பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின்மோட்டாரை பயன்படுத்தி நான்கு விதமான தொழில்நுட்ப முறைகளில் இயங்குகிறது. அண்மையில் எம்ஜி மோட்டார் நிறுவனம் ADAPT என்ற புதிய கட்டமைப்பு தளத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதில் உருவாக்கப்பட்ட முதல் கார் இது என்பதுடன் இதன் டிரைவ்டிரெயின் தொழில்நுட்பம் பல்வேறு சவால்களை கடந்து நவீன அம்சங்களுடன் உருவாக்கப்பட்டது. அவற்றை சற்று விரிவாக புரிந்துகொண்டால் இந்த கணக்கை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

Also Read

1. ப்யூர் இவி (Pure EV)

தினசரி பயன்பாட்டிற்காக இந்த இந்த மோடில் பேட்டரியில் இருக்கும் மின்சாரத்தை பயன்படுத்தி எலெக்ட்ரிக் மோட்டாரில் மட்டுமே கார் இயக்கப்படும். பெட்ரோல் எஞ்சின் துணையில்லாமல் செல்லும். இதிலுள்ள 20.5kWh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 115 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று எம்ஜி மோட்டார் தெரிவிக்கிறது. சாதாரண வீட்டு சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் செய்ய முடியும்.

MG ADAPT

2. சீரிஸ் ஹைப்ரிட் (Series Hybrid)

போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளிலும், மெதுவாக கார் செல்லும்போது இந்த மோடில் தானியங்கி முறையில் மாறி கார் இயங்கும். இதில் பெட்ரோல் எஞ்சின் சக்கரங்களை நேரடியாக இயக்காது. பெட்ரோல் எஞ்சினை பயன்படுத்தி ஜெனரேட்டர் மூலமாக மின் உற்பத்தி செய்து மோட்டாருக்கு வழங்கும். அதன்படி, மின் மோட்டார் சக்கரங்களை இயக்குகிறது.

Also Read

3. பேரலல் ஹைப்ரிட் (Parallel Hybrid)

அதிக ஆக்சிலரேஷன் தேவைப்படும் இடங்கள் மற்றும் மலைச்சாலைகளில் செல்லும்போது பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் ஆகிய இரண்டும் சேர்ந்து இயங்கும். இதனால், கார் திணறாமல் செயல்திறன் மற்றும் சிக்கனத்தை மேம்படுத்தும் வகையில் இயங்கும்.

4. எஞ்சின் டைரக்ட் டிரைவ் (Engine Direct Drive)

நெடுஞ்சாலைகளில் செல்லும்போது அதிக வேகத்தில் ஒரு குறிப்பிட்ட வேகத்தை தக்க வைத்து ஓட்டும்போது பெட்ரோல் எஞ்சின் நேரடியாக சக்கரங்களை இயக்கும். இதில், மின் மோட்டார் துணை தேவைப்படாது. ஆனால், பெட்ரோல் எஞ்சின் மூலமாக அதிகபட்சமான எரிபொருள் சிக்கனத்தை பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

MG Hector Hawk PHEV

செயற்கை நுண்ணறிவு அமைப்பு

எம்ஜி மோட்டாரின் ADAPT பிளாட்ஃபார்மில் மேற்கண்ட நான்கு தொழில்நுட்பங்களும் 10-in-1 Intelligent Electric Drive Unit என்ற நுண்ணறிவுத் திறன் அமைப்பு மற்றும் எலெக்ட்ரோமேக்னடிக் டெடிகேடட் ஹைப்ரிட் டிரான்ஸ்மிஷன் அமைப்பு உள்ளிட்ட இந்த முழு அமைப்பையும் Intelligent Energy Management System என்ற கட்டுப்பாட்டு அமைப்பு தானியங்கி முறையில் கட்டுப்படுத்துகிறது. சாலைநிலை, வேகம் போன்றவற்றிற்கு ஏற்ப இந்த நான்கு மோடுகளில் பொருத்தமானதை இந்த கட்டுப்பாட்டு அமைப்பு தேர்வு செய்வது குறிப்பிடத்தக்கது.

நேரடி கணக்கீடு இயலாது

அதாவது, லிட்டருக்கு 40 கிமீ மைலேஜ், 1,100 கிமீ ரேஞ்ச் என்பதை நேரடியாக கணக்கிட முடியாது. தோமஹாக் PHEV காரில் 52 லிட்டர் பெட்ரோல் டேங்க் இருக்கிறது. பேட்டரியில் முழுமையான சார்ஜுடன் 115 கிமீ தூரத்திற்கு செல்ல முடியும். பேட்டரி முழு சார்ஜிலும் மற்றும் பெட்ரோல் டேங்க் முழுமையாக நிரப்பப்பட்ட நிலையில் 1,100 கிமீக்கும் அதிகமான ஒருங்கிணைந்த ரேஞ்ச் பெறும் வாய்ப்பு இருப்பதாக எம்ஜி கூறுகிறது.எனவே 1,100 கிமீயிலிருந்து 115 கிமீயை கழித்துவிட்டு மீதமுள்ள 985 கிமீயை பெட்ரோல் எஞ்சின் மட்டுமே வழங்குகிறது என்று கணக்கிடுவதும் தவறாகிவிடும்.

அதேபோல் 52 லிட்டர் டேங்கில் லிட்டருக்கு 40 கிமீ மைலைஜ் என்று நேரடியாக கணக்கிட்டால் 2,080 கிமீ கிடைக்க வேண்டும். ஆனால் எம்ஜி நிறுவனம் கூறும் ஒருங்கிணைந்த ரேஞ்ச் 1,100 கிமீ-க்கும் மேல் என்று குறிப்பிடப்படுகிறது. அப்படியானால் உண்மையில் லிட்டருக்கு 40 கிமீ மைலேஜ் கிடைக்குமா? என்பதை நேரடியாகவும் கூற முடியாது. மேலும், ஓட்டுதல் முறை, சாலை நிலை, வாகனத்தில் உள்ள பயணிகளின் எண்ணிக்கை, தட்பவெப்பம், வேகம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மூலமாக நடைமுறை மைலேஜ் குறைவாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது.

நடைமுறையில் இதைவிட குறைய வாய்ப்பு உள்ளது. ஹைப்ரிட் மோடில் கணக்கீடுகளின்படி 20 முதல் 23 கிமீ மைலேஜ் வரை கிடைக்க வாய்ப்பு இருக்கும். ஆனால், இந்த காரை குறிப்பிட்ட காலம் பயன்படுத்தினால் மட்டுமே உண்மையான மைலேஜ் குறித்து கணக்கீடு செய்ய முடியும். அதுவரையில் நடைமுறையில் எவ்வளவு மைலேஜ் தரும் என்பது இப்போதைக்கு உறுதியாக கூற முடியாது.

Article Published On: Thursday, August 27, 2026, 9:30 [IST]
English summary
Mg tomahawk phev 40 kmpl mileage 1100 km range calculation explained
மேலும்... #mg motor #mg hector
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X