டாடாவுக்கே தண்ணி காட்டிய எலெக்ட்ரிக் கார்... 10 லட்ச ரூபாய்க்கு இவ்வளவு பெரிய கார் கொடுத்தா இதுதான் நிலைமை!!

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் (Electric Car) சந்தையில் அசர வைக்கும் சாதனையை எம்ஜி மோட்டார் இந்தியா (MG Motor India) நிகழ்த்தியுள்ளது. 2025ஆம் காலண்டர் ஆண்டில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் விற்பனையான எலெக்ட்ரிக் காராக எம்ஜி விண்ட்சர் (MG Windsor) முதலிடத்தை பிடித்துள்ளது.

எம்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்படி, 2025ஆம் ஆண்டில் மொத்தம் 46,735 எம்ஜி விண்ட்சர் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், அதன் விலைப்பிரிவில் உள்ள போட்டியாளர்களுக்கு ஒரு சவாலான மாடலாக எம்ஜி விண்ட்சர் உருவெடுத்துள்ளது. 2025ஆம் ஆண்டில் விண்ட்சர் பெற்ற இந்த வெற்றி, முக்கிய நகரச் சந்தைகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் அதன் தேவையை எடுத்துக்காட்டுகிறது.

mg windsor as most sold electric car of 2025

இதன் மூலமாகவே எம்ஜி விண்ட்ஸர், 2025ஆம் ஆண்டில் 46,735 யூனிட்கள் விற்பனையாகி நாட்டின் சிறந்த விற்பனையான எலெக்ட்ரிக் காராக ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. மேலும், எம்ஜியின் அஸ்டர் (Astor) மற்றும் ஹெக்டர் (Hector) போன்ற பிற எம்ஜி கார் மாடல்களை உருவாக்குவதற்கான பாகங்கள் விநியோக ஆதரவையும் வழங்குவதன் மூலம், விண்ட்சரின் வெற்றி எம்ஜியின் ஒட்டுமொத்த தயாரிப்பு வரிசைக்கும் வலு சேர்த்துள்ளது.

2025ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 19% வளர்ச்சியையும், 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் 111% அதிகரிப்பையும் எம்ஜி மோட்டார் பதிவு செய்துள்ளது. டயர்-I நகரங்கள் மட்டுமல்லாமல், மெட்ரோ அல்லாத மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளிலும் எம்ஜி எலெக்ட்ரிக் கார்களுக்கான நிலையான தேவை அதிகரித்து வருவது, நிலையான போக்குவரத்து தீர்வுகளை ஏற்க இந்தியா தயாராக இருப்பதைக் காட்டுகிறது.

mg windsor as most sold electric car of 2025

இந்தியாவின் முதல் 'இன்டெலிஜென்ட் சியூவி' (Crossover Utility Vehicle) காரான எம்ஜி விண்ட்சர் ஆனது செடான் கார்களின் பரந்த இடவசதியையும், எஸ்யூவி கார்களின் பல்துறை திறனையும் ஒருங்கே கொண்டுள்ளது. இதன் பேட்டரி-அஸ்-எ-சர்வீஸ் (BaaS) விலை வெறும் ரூ.9.99 லட்சம் முதல் தொடங்குகிறது. BaaS-இன் கீழ் இந்த எலெக்ட்ரிக் காரை வாங்கினால் சார்ஜ் நிரப்புபவதற்காக கூடுதலாக ஒரு கிலோமீட்டருக்கு ரூ.3.9 செலுத்த வேண்டியிருக்கும்.

100 கிலோவாட்ஸ் (136 பிஎஸ்) ஆற்றலையும், 200 என்.எம் டார்க் திறனையும் வழங்கும் எம்ஜி விண்ட்சர், இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், 38 kWh பேக் (332 கி.மீ ரேஞ்ச்), மற்றும் 52.9 kWh பேக் (449 கி.மீ ரேஞ்ச்) என்பன அடங்குகின்றன. இதில், 52.9 kWh பேட்டரி ஆனது விண்ட்சர் காரின் புரோ (PRO) வேரியண்ட்டில் வழங்கப்படுகிறது.

mg windsor as most sold electric car of 2025

'ஏரோகிளைட்' (AeroGlide) வடிவமைப்புடன் வரும் விண்ட்சர், அதன் விலையிலான ஹேட்ச்பேக் கார்களை போல் இல்லாமல் 135 டிகிரி வரை சாய்ந்து கொள்ளக்கூடிய 'ஏரோ லவுஞ்ச்' (Aero Lounge) இருக்கைகளுடன் பிஸ்னஸ் கிளாஸ் வசதியை அளிக்கிறது. மேலும், சென்டர் கன்சோலில் உள்ள 15.6 அங்குல பிரம்மாண்ட 'கிராண்ட்-வியூ டச் டிஸ்ப்ளே' (GRANDVIEW Touch Display) ஆனது ஓட்டுனருக்கு சிறந்த அனுபவத்தை வழங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வடிவமைப்பு, தொழிற்நுட்ப அம்சங்கள் மற்றும் செயல்படுதிறன் ஆகியவற்றின் சரியான கலவையே எம்ஜி விண்ட்சரின் விற்பனை வளர்ச்சிக்குக் காரணம் என சொன்னால் அது மிகையில்லை. மேலும், இது இந்தியாவில் நவீன வசதிகளுடன் கூடிய ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் காரை வாங்க விரும்புபவர்களையும் ஈர்த்து வருகிறது.

விண்ட்சர் அதன் அன்றாட நடைமுறைத்திறன், தொழில்நுட்பம் மற்றும் எதிர்கால வடிவமைப்புடன் இந்திய எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டையே தலைக்கீழ் புரட்டி போட்டுள்ள எம்ஜி கார் ஆகும். இதனால், புதிய 2026ஆம் ஆண்டிலும் எம்ஜி விண்ட்சர் தனது வழக்கமான விற்பனை பயணத்தை தொடரும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 6, 2026, 5:00 [IST]
English summary
Mg windsor as most sold electric car of 2025 check sales number all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X