டாடா கம்பெனிக்கு எமனாக மாறிவரும் எம்ஜி எலெக்ட்ரிக் கார்... ரூ.10 லட்சத்தில் பிரம்மாண்டமான ஆப்ஷன்!

JSW MG மோட்டார் நிறுவனம் அதன் பிரபலமான விண்ட்சர் எலெக்ட்ரிக் காரின் விற்பனை எண்ணிக்கை குறுகிய காலத்தில் சுமார் 75 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது, விண்ட்சர் இவி கார்களை இதுவரையில் 75 ஆயிரத்திற்கும் அதிகமான கஸ்டமர்கள் வாங்கியுள்ளனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் சில வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டு பலத்த வரவேற்பை பெற்றுவரும் எலெக்ட்ரிக் காராக எம்ஜி விண்ட்சர் விளங்குகிறது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் புரட்சியை துவங்கி வைத்துள்ள எலெக்ட்ரிக் கார்களுள் முக்கியமானது எம்ஜி விண்ட்சர் ஆகும். அந்த அளவிற்கு இந்தியர்கள் போட்டிப் போட்டு வாங்கிவரும் எலெக்ட்ரிக் காராக விண்ட்சர் விளங்குகிறது.

mg windsor electric car sales

இதற்கு முக்கிய காரணம், இந்தியாவிலேயே BaaS ஆப்ஷனில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் கார் எம்ஜி விண்ட்சர் ஆகும். இதனால், இந்த காரின் விலை மிகவும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டது. இது பல தரப்பட்ட வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்தது. அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் தற்சமயம் அதிக பேர் வாங்கும் எலெக்ட்ரிக் காராக விண்ட்சர் உருவெடுத்தது மட்டுமின்றி, விற்பனையிலும் குறுகிய காலத்தில் 75 ஆயிரம் யூனிட்கள் விற்பனையை கடந்துள்ளது.

எந்த அளவிற்கு குறுகிய காலம் என்றால், 2024ஆம் ஆண்டில் விண்ட்சர் காரை எம்ஜி நிறுவனம் அறிமுகம் செய்த நிலையில், வெறும் 2 வருடங்களில் 75 ஆயிரம் விண்ட்சர் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள JSW MG மோட்டார் நிறுவனம், இந்த 2026ஆம் ஆண்டில் மட்டும் இதுவரையில் 19 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ட்சர் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

mg windsor electric car sales

எம்ஜி விண்ட்சர் எலெக்ட்ரிக் கார் ஆனது ABC கார் என அழைக்கப்படுகிறது. அதாவது, விலை குறைவான A வரிசை கார்களை போன்று குறைவான விலை, B வரிசை கார்களை போன்றதான அளவுகளில் பெரியதான வெளிப்புற தோற்றம் மற்றும் C வரிசை கார்களை போன்றதான விசாலமான உட்புற இடவசதியை கொண்டுள்ளது.

இந்த எம்ஜி எலெக்ட்ரிக் காரை BaaS ஆப்ஷன் உடன் அல்லது இல்லாமல் வாங்கலாம். BaaS ஆப்ஷனில் காருக்கான பேட்டரியை உங்களால் சொந்தமாக்க முடியாது. அதற்கேற்ப BaaS ஆப்ஷனில் வெறும் ரூ.9.99 லட்சத்தில் இருந்து இந்த எலெக்ட்ரிக் காரை வாங்கலாம். BaaS ஆப்ஷனில் காருக்கான பேட்டரியை கிமீ-க்கு ரூ.3.9 என்கிற கட்டணத்தில் பெறலாம்.

எம்ஜி நிறுவனம் விண்ட்சர் இவி காரை 38kWh மற்றும் 52.9kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் வழங்குகிறது. இதில், 38kWh பேட்டரி மூலம் 332கிமீ வரையிலான ரேஞ்சையும், விண்ட்சர் புரோ காரில் மட்டுமே கிடைக்கும் 52.9kWh பேட்டரியில் 449கிமீ ரேஞ்சையும் பெறலாம்.

எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் எதிர்கால 'ஏரோக்ளைட்' டிசைன் மொழியில் உருவாக்கப்பட்ட விண்ட்சர் எலெக்ட்ரிக் காரில் சுமார் 135 டிகிரிக்கு மடிக்கக்கூடிய் 'ஏரோ லாஞ்ச்' இருக்கைகளும், செண்டர் கன்சோல் பகுதிக்கு மேலே டாஷ்போர்டில் 15.6 இன்ச்சில் அளவில் பெரியதாக கிராண்ட்வியூ தொடுதிரையும் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடப்பு 2026ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கு உள்ளாகவே 19 ஆயிரத்திற்கும் அதிகமான எம்ஜி விண்ட்சர் கார்கள் விற்பனை எனும்போது, இந்த வருடத்திற்குள் உள்ளாகவே விற்பனையில் இந்த கார் 1 லட்சம் யூனிட்கள் விற்பனை என்கிற பிரம்மாண்ட மைல்கல்லை எட்டிவிடக் கூடும். ஏனெனில், இனி தொடர்ச்சியாக பண்டிகை காலங்கள் அடுத்தடுத்து வர போகின்றன. அத்தகைய நேரத்தில் நிறைய பேர் கார் வாங்க விரும்புவார்கள் என்பதால், கார் தயாரிப்பு நிறுவனங்களும் கார்களுக்கு சலுகைகளை அறிவிப்பது வழக்கம்.

Article Published On: Monday, July 6, 2026, 17:12 [IST]
English summary
Mg windsor electric car overall sales crossed 75k units within two years
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out