இது மாருதி ஸ்விஃப்ட் இல்லை.. ஸ்விஃப்ட் மாதிரியே இருக்க ப்ரீமியமான ஹேட்ச்பேக் கார்!

'கூப்பர் S கன்வர்டிபிள்' (Cooper S Convertible) மாடலின் 'JCW பேக்' (JCW Pack) வேரியன்டை இந்தியாவில் வெளியிட்டுள்ளது மினி (MINI). BMW குழுமத்தைச் சேர்ந்த இந்த நிறுவனம் ப்ரீமியமான பெர்ஃபாமன்ஸ் கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இதன் பெரும்பான்மையான கார்கள் முழுவதுமாக இறக்குமத செய்யப்பட்டு CBU முறையிலேயே இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. அது போல புதிய கூப்பர் S கன்வர்டிபிள் JCW பேக் மாடலையும் இறக்குமதி செய்தே விற்பனை செய்யவுள்ளது.

ஸ்டாண்டர்டான கூப்பர் S கன்வர்ட்பிள் கார் மாடலில் உள்ளேயும், வெளியேயும் காஸ்மெடிக் அப்டேட்களை மட்டும் செய்து இந்த JCW பேக் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்டு வேரியன்டிற்கும் இந்த JCW பேக் வேரியன்டிற்கும் வசதிகளிலோ, மெக்கானிக்கலாக இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸிலோ எந்தவொரு வேறுபாடுகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த JCW பேக் வேரியன்டை ரூ.61.50 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது மினி.

Mini Cooper S Convertible JCW Pack

மிட்நைட் பிளாக் மற்றும் லெஜண்டரி கிரே ஆகிய இரண்டு தனித்துவமான நிறங்களில் இந்த JCW பேக் வேரியன்ட் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்டு வேரியன்டில் இருந்து இந்தப் புதிய நிறங்களே தனித்துவமான பிரதான மாற்றங்களாக இருக்கின்றன. வழக்கமாக மினி தங்களுடைய JCW பேக் வேரியன்ட்களில் கொடுப்பதைப் போல இந்தக் கூப்பர் S கன்வர்டிபிள் மாடலின் லெஜண்டரி கிரே நிற வேரியன்டில் பானெட் ஸ்ட்ரைப்புகளைக் கொடுத்துள்ளது. இது காருக்கு தனித்துவமான லுக்கைக் கொடுக்கிறது.

காரின் முன்பக்க கிரில், ORVM-கள், டோர் ஹேண்டில்கள், வீல் ஆர்ச்கள், சைடு ஸ்கிர்ட்கள் மற்றும் பம்பர்கள் ஆகியவை கிளாஸ் பிளாக் ஃபினிஷைக் கொண்டுள்ளன. இத்துடன் கருப்பு நிற ஃபினிஷைக் கொண்ட புதிய 17 இன்ச் வீல்களையும் பெற்றுள்ளது இந்த JCW பேக் வேரியன்ட். அதில் JCW பிராண்டில் ஸ்போர்ட்டியான பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. ரூஃப் ஃபேப்ரிக்கும் (Roof Fabric) ஜெட் பிளாக் நிறத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Mini Cooper S Convertible JCW Pack Inside

காரின் உட்புறமும், சீட்கள் மற்றும் டேஷ்போர்டு என அனைத்துமே கருப்பு நிறத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், உட்புறம் JCW பிராண்டு ஸ்போர்ட்டியான சீட்கள் மற்றும் JCW பிராண்டு ஸ்டீயரிங் வீல்கள் என அனைத்து அம்சங்களுமே JCW பிராண்டடாகவே கொடுக்கப்பட்டிருக்கிறது. இவையனைத்தும் காஸ்மெடிக் மாற்றங்கள் மட்டுமே, வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை. ஸ்டாண்டர்டு கூப்பர் S கன்வர்டிபிள் மாடலில் கொடுக்கப்பட்டிருக்கும் வசதிகள் தான் இந்த JCW பேக் மாடலிலும் உள்ளது.

மேலே கூறியது போல பவர்ட்ரெயினும் எந்தவொரு மாற்றமும் இல்லை. இந்தக் காரில் 204 hp பவர் மற்றும் 300 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட, 2.0 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம் இன்ஜின் பவர் காரின் முன்பக்க வீல்களுக்குச் செல்கிறது.

இந்த பவர்ட்ரெயின் செட்டப்புடன் மணிக்கு 0-100 கிமீ வேகத்தை 6.9 நொடிகளில் எட்டும் திறனைக் கொண்டிருக்கும் இந்தக் கன்வர்டிபிள் காரானது, அதிகபட்சமாக மணிக்கு 237 கிமீ வேகத்தில் செல்லும் திறனையும் கொண்டிருக்கிறது. மேலும் இந்தக் ப்ரீமியம் பெர்ஃபாமன்ஸ் ஹேட்ச்பேக் கார் மாடலானது லிட்டருக்கு 16.82 கிமீ மைலேஜையும் கொடுக்கும் என மினி குறிப்பிட்டுள்ளது.

மினியின் இந்திய லைன்-அப்பில் இது இரண்டாவது JCW பேக் வேரியன்டாகும். இதற்கு முன்னதாக ஸ்டாண்டர்டான கூப்பர் S ஹேட்ச்பேக் மாடலின் JCW பேக்கையும் விற்பனையில் வைத்திருக்கிறது மினி. இந்த மாடலானது ரூ.55.65 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. JCW பேக் அல்லாத ஸ்டாண்டர்டு கூப்பர் S கன்வர்டிபிள் மாடலானது ரூ.58.50 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: காஸ்மெடிக்காக டிசைன் ரீதியில் தனித்துவமான டிசைன் கொண்ட கார் வேண்டும் எனக் கேட்கும் வாடிக்கையாளர்களுக்காக இந்த JCW பேக் வேரியன்டை வெளியிடுகிறது மினி. ஆனால் அதற்காக சில லட்சங்களை வாடிக்கையாளர்கள் கூடுதலாக செலவு செய்ய வேண்டியிருக்கும். சாலையில் மினி கூப்பர செல்லும் போதே மிகவும் ஸ்மூத்தாகவும், எலிகண்ட்டாகவும் இருக்கும். எனவே கொடுக்கும் பணத்திற்கு ஒர்த்தான கார் தான். இந்தியாவில் குறைவான விலை கொண்ட கன்வர்டிபிள் கார் மாடலும் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Tuesday, April 28, 2026, 16:49 [IST]
English summary
Mini cooper s convertible jcw pack launched in india check all details here
மேலும்... #mini #cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+