மாருதி ஸ்விப்ட் அளவுக்கு குட்டியாக இருந்தாலும் விலை பல லட்ச ரூபாய்! பணக்காரர்களாலும் வாங்க முடியாத அரிதான கார்

மினி நிறுவனத்தில் இருந்து புதியதாக கூப்பர் எஸ் ஜிபி இன்ஸ்பெயிர்டு எடிசன் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.58.90 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய மினி காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மினி நிறுவனத்தின் ஜிபி வரிசை கார்களுக்கு உலகளவில் சிறப்பான மவுசு உள்ளது. அதனை நினைவுக்கூறும் விதமாகவே புதியதாக கூப்பர் எஸ் ஜிபி இன்ஸ்பெயிர்டு எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு லிமிடெட் எடிசன் கார் ஆகும். அதாவது, அந்த அளவிற்கு மிகவும் குறைவான யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

new mini cooper s gp inspired edition launched

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்தியாவிற்காக மொத்தமாகவே வெறும் 30 யூனிட்கள் மட்டுமே இந்த லிமிடெட் எடிசன் கார் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனால், விருப்பப்படுபவர்கள் உடனே இந்த காரை புக் செய்வது நல்லது. ஆனால், இந்த லிமிடெட் எடிசன் காருக்கான முன்பதிவுகள் இந்த மே மாத துவக்கத்திலேயே துவங்கப்பட்டுவிட்டன.

முன்பதிவு செய்பவர்களிடம் முன்தொகையாக ரூ.1.5 லட்சம் பெறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, புதிய கூப்பர் எஸ் ஜிபி இன்ஸ்பெயிர்டு எடிசன் காரை புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன. இந்தியாவின் மினி கூப்பர் எஸ் கார்கள் வரிசையில் இந்த புதிய லிமிடெட் எடிசன் ஆனது விலைமிக்க டாப் வேரியண்ட்டாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

new mini cooper s gp inspired edition launched

அதாவது, கூப்பர் எஸ் காரின் JCW பேக் வேரியண்ட்டை விட புதிய ஜிபி இன்ஸ்பெயிர்டு எடிசன் விலைமிக்கது ஆகும். தோற்றத்தை பொறுத்தவரையில், புதிய கூப்பர் எஸ் ஜிபி இன்ஸ்பெயிர்டு எடிசன் ஆனது முற்றிலுமாக லெஜெண்ட் கிரே நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், காரின் மேற்கூரை மற்றும் பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள் சிவப்பு நிறத்தில் உள்ளன.

இந்த காரின் முன்பக்கத்தில் பொனெட்டில் ஸ்ட்ரிப்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம், காரின் பக்கவாட்டில் 'GP' என்கிற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கதவுகளில் வழங்கப்பட்டுள்ள சில்கள் ஒளிரக்கூடியவைகளாக உள்ளன. முன்பக்கத்தில் பம்பர், க்ரில் மற்றும் ஹெட்லைட்கள் உள்ளிட்டவை மினி நிறுவனத்தின் JCW கார்களில் உள்ளதை போன்று உள்ளன.

காரின் முன்பக்கத்திலும் பக்கவாட்டிலும் விங்லெட்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன், காரின் முன்பக்கத்தில் சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ள டோ ஆனது இந்த காருக்கு மோட்டார்ஸ்போர்ட் லுக்கை தருகிறது. இந்த லிமிடெட் எடிசன் கார் வெறும் 30 யூனிட்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளதாக கூறினோம் அல்லவா... அவை ஒவ்வொன்றிலும் 1இல் இருந்து 30 வரையிலான எண் காரின் C-பில்லரில் பொறிக்கப்பட்டு வழங்கப்படும்.

புதிய கூப்பர் எஸ் ஜிபி இன்ஸ்பெயிர்டு எடிசனில் 17 இன்ச்சில் கருப்பு நிறத்திலான அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் டிஃப்யூஸரும் இடம்பெற்றுள்ளது. உட்புறத்தில் இந்த லிமிடெட் எடிசன் கார் JCW வேரியண்ட்டில் உள்ளதை போன்ற இருக்கைகளை கொண்டுள்ளது. அதேபோல், ஸ்டீயரிங் சக்கரமும் JCW கார்களில் உள்ளதை போன்று உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மினி கூப்பர் எஸ் காரின் வழக்கமான தொழிற்நுட்ப அம்சங்கள் அனைத்தும் புதிய ஜிபி இன்ஸ்பெயிர்டு எடிசனிலும் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், என்ஜின் & கியர்பாக்ஸ் சிஸ்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. வெறும் 30 யூனிட்கள் மட்டுமே இந்த லிமிடெட் எடிசன் கார் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது என்றாலும், 30 யூனிட்கள் இன்னும் முழுமையாக விற்றுத் தீர்ந்து இருக்காது என்றே கருதுகிறோம்.

Article Published On: Tuesday, May 19, 2026, 23:56 [IST]
English summary
Mini cooper s gp inspired edition launched in india check price features all details here
மேலும்... #mini #cooper s #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+