இந்தியாவில் மினி கூப்பர் எஸ்இ எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவு தொடங்கியது

தோற்றத்தில் சிறிதாகவும், தனித்துவமான வடிவமைப்பும், ஓட்டுவதற்கு உற்சாகமான அனுபவமும் கொண்ட மினி (MINI) கார்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில், இந்திய வாடிக்கையாளர்கள் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் பக்கமும் கவனத்தை திருப்பி இருப்பதால், அதற்கு தக்க மாடல்களை கொண்டு வருவதற்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் புதிய தலைமுறை மினி கூப்பர் எஸ்இ (MINI Cooper SE) எலெக்ட்ரிக் கார் மாடலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

இந்தியாவின் பிரீமியம் எலெக்ட்ரிக் கார் சந்தையில் புதிய வரவாக இந்த கார் களமிறங்க உள்ளது. இரண்டாம் தலைமுறை கூப்பர் எஸ்இ மாடலுடன், பிரபல பிரிட்டிஷ் ஆடை வடிவமைப்பாளர் பால் ஸ்மித் (Paul Smith) உடனான கூட்டணியில் உருவான சிறப்புப் பதிப்புகளையும் மினி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. வரும் 27ந் தேதி இந்த புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

Mini Cooper SE

புதிய பேட்டரி, அதிக ரேஞ்ச்

புதிய தலைமுறை மினி கூப்பர் எஸ்இ காரில் 54.2 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் WLTP சோதனை முறையின்படி 402 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய தலைமுறை மாடலைவிட பேட்டரி திறனும் பயண தூரமும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன.

இந்த காரில் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 218 எச்பி பவரையும், 330 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதன் மூலம் 0 முதல் 100 கிமீ வேகத்தை வெறும் 6.7 விநாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 170 கிமீ வேகத்தில் செல்லும் திறனையும் இந்த கார் கொண்டுள்ளது.

Also Read

சார்ஜிங் வசதியைப் பொறுத்தவரை, 95 kW திறன் கொண்ட டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் பேட்டரியை 10 சதவீதத்திலிருந்து 80 சதவீதம் வரை 30 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம். அதேபோல், 7.4 kW ஏசி சார்ஜரைப் பயன்படுத்தி முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 7.5 மணி நேரம் ஆகும்.

என்னென்ன மாற்றங்கள்?

வெளிப்புறத் தோற்றத்தில் மினி கார்களுக்கே உரிய வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட்டுகள் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன. அதேசமயம், மூடப்பட்ட முன்பக்க கிரில் அமைப்பு, புதிய வடிவிலான பின்பக்க விளக்குகள் மற்றும் ஃபிளஷ் டோர் ஹேண்டில்கள் ஆகியவை புதிய தலைமுறை மாடலுக்கு நவீன தோற்றத்தை வழங்குகின்றன.

உட்புறத்தில் 9.45 இன்ச் வட்ட வடிவ ஓஎல்இடி தொடுதிரை முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளது. இதன் மூலமாக இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் வாகனத்தின் பல்வேறு தகவல்களைப் பெற முடியும். மூன்று ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் பாரம்பரிய டோகிள் சுவிட்சுகளும் இடம்பெற்றுள்ளன.

வசதிகளைப் பொறுத்தவரை, டூயல் ஸோன் ஆட்டோமேட்டிக் ஏசி, முன்பக்க இருக்கைகளுக்கு ஹீட்டிங் வசதி, பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஹெட் அப் டிஸ்பிளே உள்ளிட்ட அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் அடாஸ் (ADAS) தொழில்நுட்பங்களும் வழங்கப்பட்டுள்ளன.

Also Read

பால் ஸ்மித் சிறப்புப் பதிப்பு

கூப்பர் எஸ்இ எலெக்ட்ரிக் காருடன் சேர்த்து, பால் ஸ்மித் எடிஷன் மாடல்களையும் மினி நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. இதில் கூப்பர் எஸ்இ, கூப்பர் எஸ் மற்றும் கூப்பர் கன்வெர்டிபிள் ஆகிய மூன்று மாடல்கள் இடம்பெறுகின்றன. பிரிட்டிஷ் வடிவமைப்பாளர் பால் ஸ்மித்தின் தனித்துவமான வடிவமைப்பு அணுகுமுறை இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இந்த சிறப்புப் பதிப்புகளில் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் 20க்கும் மேற்பட்ட பிரத்யேக வடிவமைப்பு அம்சங்கள் இடம்பெறுகின்றன. ஸ்டேட்மென்ட் கிரே, இன்ஸ்பயர்டு ஒயிட் மற்றும் மிட்நைட் பிளாக் மெட்டாலிக் என மூன்று வண்ணத் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில் முதல் இரண்டு வண்ணங்களும் பழைய மினி கார்களின் பாரம்பரிய நிறங்களால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த பதிப்புகளின் உட்புறத்தில் பிரத்யேக அலங்காரங்கள், ஸ்டீயரிங் வீலில் வண்ணமயமான கோடுகள், இருக்கைகளில் நீல நிற தையல் வேலைப்பாடுகள் மற்றும் பால் ஸ்மித் அடையாளங்கள் இடம்பெறுகின்றன. கதவைத் திறக்கும்போது ஹலோ என்ற வார்த்தையை ஒளியாக வெளிப்படுத்தும் வசதியும், பிரத்யேக வடிவமைப்பு கொண்ட தரை விரிப்புகளும் இந்த கார்களின் தனித்துவத்தை மேலும் அதிகரிக்கின்றன.

இந்தியாவில் மினி கூப்பர் எஸ்இ மற்றும் பால் ஸ்மித் எடிஷன் கார்களுக்கான அதிகாரப்பூர்வ விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. தற்போது முன்பதிவுகள் தொடங்கியுள்ள நிலையில், வேரியண்ட் வாரியான விவரங்கள், முன்பதிவுத் தொகை மற்றும் டெலிவரி கால அட்டவணை ஆகியவை அறிமுக நிகழ்ச்சியின்போது வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Article Published On: Wednesday, November 18, 2026, 14:26 [IST]
English summary
Mini cooper se electric car pre bookings open india launch range features
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out