ஹூண்டாய் கிரெட்டாவிற்குப் போட்டியாக வெளியாகும் புதிய ப்ரீமியம் எஸ்யூவி?

ஜூன் 17ம் தேதியன்று இந்தியாவில் புதிய 'கண்ட்ரிமேன் C' (Countryman C) எஸ்யூவியை வெளியிடவிருப்பதை உறுதி செய்திருக்கிறது மினி (MINI). ஏற்கனவே இந்தியாவில் கண்ட்ரிமேன் JCW ஆல்4 (Countryman JCW All4) வேரியன்டை விற்பனை செய்து வரும் நிலையில், அதற்கு கீழான புதிய வேரியன்டாக வெளியாகவிருக்கிறது கண்ட்ரிமேன் C. இந்தப் புதிய மினி எஸ்யூவி குறித்து இங்கே நாம் பார்க்கலாம்.

புதிய கண்ட்ரிமேன் C எஸ்யூவிக்கான முன்பதிவை இங்கே ஏற்கனவே தொடங்கிவிட்டது மினி. மாஸ் மார்க்கெட் மற்றும் சொகுசு கார்களுக்கு இடைப்பட்ட ப்ரீமியமான கார்களாக மினி கார்கள் இருக்கும். JCW ஆல்4 வேரியன்டில் கொடுக்கப்பட்டிருப்பதை விட சற்று குறைவான பெர்ஃபாமன்ஸைக் கொண்ட இன்ஜினை புதிய கண்ட்ரிமேன் C வேரியன்டில் அந்நிறுவனம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mini Countryman C

எந்த இன்ஜின் என்பது குறித்த தகவலை மினி இன்னும் பகிர்ந்து கொள்ளவில்லை. எனினும் BMW X1 காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை அந்நிறுவனம் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினானது, 136 hp பவர் மற்றும் 230 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது.

தற்போது விற்பனையில் இருக்கும் கண்ட்ரிமேன் JCW ஆல்4 வேரியன்டில் 300 hp பவர் மற்றும் 400 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மேம்பட்ட இன்ஜினின் உதவியுடன் மணிக்கு 100 கிமீ வேகத்தை 5.4 நொடிகளில் எட்டுவதுடன், அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் திறனையும் கொண்டுள்ளது JCW ஆல்4 வேரியன்ட்.

Mini Countryman C

இந்த பவர்ட்ரெயினுடன் இப்போது 66.15 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த எஸ்யூவி வேரியன்ட் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிதாக வெளியாகவிருக்கும் கண்ட்ரிமேன் C வேரியன்டானது குறைவான பவர் மற்றும் டார்க்கை வெளிப்படுத்தும் பவர்ட்ரெயினைக் கொண்டிருந்தாலும், அதற்கு ஏற்ற வகையில் குறைவான விலையிலேயே வெளியாகும் எனத் தெரிகிறது.

5 பேர் வரை சொகுசுாக அமர்ந்து செல்லும் வகையில் இடவசதி கொண்ட காராகவே இந்த கண்ட்ரிமேன் இருக்கிறது. 4,447 மிமீ நீளம், 1,843 மிமீ அகலம் மற்றும் 1,645 மிமீ உயரத்தைக் கொண்டுள்ளது இந்த ப்ரீமியம் எஸ்யூவி. அளவில் கிரெட்டா, செல்டோஸ் உள்ளிட்ட மிட்-சைஸ் எஸ்யூவி கார்களுக்கு இணையாக இதனைக் கூறலாம். ஆனால் பவர்ட்ரெயின் மற்றும் வசதிகளில் கிரெட்டாவை விட பல மடங்கு கண்ட்ரிமேன் மேம்பட்டிருக்கும்.

ஆடி Q3 மற்றும் மெர்சிடீஸ் பென்ஸ் GLA உள்ளிட்ட தொடக்கநிலை சொகுசு எஸ்யூவிக்களுக்குப் போட்டியாக இந்த மினி கண்ட்ரிமேன் C எஸ்யூவி இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ளது. சில்லி ரெட், பிரிட்டிஷ் ரேஸிங் கிரீன், நாநக் ஒயிட், ஸ்லேட் ப்ளூ மற்றும் ஸ்மோக்கி கிரீன் ஆகிய நிறத் தேர்வுகளுடன் இந்தியாவில் இந்த ப்ரீமியம் எஸ்யூவி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளே அனைத்து விதமான ப்ரீமியமான வசதிகளையும் இந்த எஸ்யூவி கொண்டிருக்கும், அதில் எந்த மாற்றமும் இருக்காது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தனித்துவனமான எஸ்யூவியை கொஞ்சம் குறைவான விலையில் வாங்க வேண்டும் என்று விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக இந்தப் புதிய வேரியன்டை மினி இந்தியாவிற்குக் கொண்டு வருவதாகத் தெரிகிறது. இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யவிருப்பதால், 50 லட்சம் ரூபாயை ஒட்டிய விலையில் இதன் வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது. மாஸ் மார்க்கெட் கார்களில் இருந்து ப்ரீமியம் கார்களுக்கு மாற விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த கண்ட்ரிமேன் C-யை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Article Published On: Tuesday, June 2, 2026, 17:50 [IST]
English summary
Mini countryman c new suv variant to be launched in india on june 17
மேலும்... #mini #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out