மாருதி ஸ்விஃப்ட் அளவிற்கு கூட இந்த கார் இருக்காது... ஆனால் ஸ்டைலில் அடிச்சிக்க முடியாது!

மினி இந்தியா (MINI India) நிறுவனம் அதன் புதிய மினி கண்ட்ரிமேன் சி (Countryman C) காருக்கான முன்பதிவுகளை காரின் அறிமுகத்திற்கு முன்னதாகவே துவங்கியுள்ளது. ஏப்ரல் 22ஆம் தேதி மாலை 3 மணியளவில் துவங்கப்பட்டுள்ள இந்த முன்பதிவுகள் குறித்தும், மினி கண்ட்ரிமேன் காரின் புதிய வேரியண்ட்டான இந்த கண்ட்ரிமேன் சி கார் குறித்தும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பி.எம்.டபிள்யூ (BMW) குழுமத்தின் கீழ் செயல்படும் மினி பிராண்ட் ஆனது இந்தியாவில் அளவில் சிறியதான சொகுசு கார்களை விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ளது. இன்னும் சொல்லப்போனால், மினி கார்களை போன்று ஸ்போர்டியரான தோற்றத்தில் சொகுசு கார்கள் எதுவும் இந்தியாவில் விற்பனையில் இல்லை. பிஎம்டபிள்யூ குழுமத்தின் கீழ் செயல்படுவதால், மினி கார்களும் சென்னைக்கு அருகே உள்ள பிஎம்டபிள்யூ தொழிற்சாலையில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.

mini countryman c pre-bookings open

தற்போது முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ள புதிய கண்ட்ரிமேன் சி காரும் பிஎம்டபிள்யூ தொழிற்சாலையில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் இந்த புதிய மினி கார் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. தோற்றத்தை பொறுத்தவரையில், மாடர்னான லுக்கில் நகர்புற சாலைகளில் பயன்படுத்த புதிய கண்ட்ரிமேன் சி சரியானதாக காட்சியளிக்கிறது.

மினி கார்களுக்கே உண்டான அளவில் சிறியதான வெளிப்பக்க தோற்றத்துடன், உட்புறத்தில் போதுமான விசாலமான இடவசதியை எதிர்பார்ப்போருக்கு இந்த கார் ஏற்றதாக இருக்கும். இத்தகைய புதிய கண்ட்ரிமேன் சி காரை முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் அருகில் உள்ள மினி டீலர்ஷிப் ஷோரூமை தொடர்புக் கொள்ளலாம்.

mini countryman c pre-bookings open

இந்தியாவில் மினி பிராண்டிற்கு 9 நகரங்களில் மொத்தம் 12 டீலர்ஷிப் ஷோரூம்கள் உள்ளன. சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் செயல்படும் மினி ஷோரூம்களை 'குன் எக்ஸ்க்ளூசிவ்' (Kun Exclusive) நிர்வகிக்கிறது. மினி கார்களை வாங்குவோர் இந்தியாவில் உள்ள பிஎம்டபிள்யூ குழுமத்தின் 51 சர்வீஸ் மையங்களில் கட்டண சேவைகளை பெறலாம்.

இந்த 51 சர்வீஸ் மையங்கள் இந்தியாவில் மொத்தம் 36 பகுதிகளில் செயல்படுகின்றன. புதிய மினி கண்ட்ரிமேன் சி காரில் 2 லிட்டர் ட்வின்பவர் டர்போ 4-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மினி கண்ட்ரிமேன் கார்களில் முன்பு 3-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு வந்த நிலையில், அது தற்போது 4-சிலிண்டர் என்ஜினாக மாற்றப்பட்டுள்ளது.

அதிகப்பட்சமாக 170 எச்பி மற்றும் 280 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடிய புதிய 4-சிலிண்டர் என்ஜின் உடன் 7-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் டெக்னாலஜி (Mild-hybrid Technology) உடன் வழங்கப்படும் இந்த என்ஜின் சிஸ்டத்தின் மூலமாக கண்ட்ரிமேன் சி காரில் 15.4kmpl மைலேஜ் பெற முடியும் என்கிறது மினி நிறுவனம்.

மினி ஆப்ரேட்டிங் சிஸ்டம் 9-இல் இயங்கும் உலகின் முதல் வட்ட வடிவ 9.4-இன்ச் OLED டிஸ்பிளே 2026 மினி கண்ட்ரிமேன் சி காரில் வழங்கப்பட்டுள்ளது. லெதர் இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரின் கேபினில் வெஸ்சின் (Vescin) என்கிற மறுசுழற்சி செய்யக்கூடிய மற்றும் உயர் தரத்திலான துணி பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 360-டிகிரி 'பார்க்கிங் அசிஸ்டண்ட் பிளஸ்' வசதியும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய மினி கண்ட்ரிமேன் சி காரின் விலைகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக தற்போது முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன. உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட உள்ளதால், இந்த காரின் விலையை குறைவாக எதிர்பார்க்கலாம். இந்தியாவில் மினி கண்ட்ரிமேன் கார்கள் வரிசையில் இ, எஸ்.இ ஆல்4 மற்றும் ஜே.சி.டபிள்யூ ஆல்4 (JCW All4) உள்ளிட்ட வெர்சன்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் நிலையில், அவற்றுடன் புதியதாக சி வெர்சன் இணைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 22, 2026, 17:06 [IST]
English summary
Mini countryman c pre bookings open in india ahead of launch check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+