1965 காரை கண்முன் கொண்டு வந்துட்டாங்க! மாருதி ஸ்விஃப்ட் அளவுக்குதான் சைஸ்... ஆனா விலையை பார்த்தா மயக்கம் வருது

பி.எம்.டபிள்யூ குழுமம் (BMW Group) வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்தியாவில் அதன் பிஎம்டபிள்யூ மற்றும் மினி (MINI) கார்களின் விலைகளை 2% உயர்த்த போவதாக அறிவித்துள்ள நிலையில், மினி நிறுவனம் அதன் பிரபலமான கூப்பர் எஸ் (Cooper S) காரின் புதிய விக்டரி எடிஷன் (Victory Edition)-ஐ இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய ஸ்பெஷல் எடிஷன் மினி காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மினி நிறுவனத்தின் கூப்பர் கார்களுக்கு உலகளவில் சிறப்பான வரவேற்பு உள்ளது. அதுமட்டுமின்றி, மினி கூப்பர் கார்கள் சர்வதேச அளவில் பல பந்தயங்களில் பயன்படுத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில், 1965ஆம் ஆண்டில் நடைபெற்ற மான்டே கார்லோ ராலி (Monte Carlo Rally) பந்தயத்தில் பயன்படுத்தப்பட்ட அப்போதைய மினி கூப்பர் கார் பட்டத்தை வென்றது.

mini cooper s victory edition launch

அதன் நினைவாகவே தற்போது மினி கூப்பர் எஸ் விக்டரி எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய காரின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.57.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிஷன் மினி கூப்பர் எஸ் காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாத இறுதியிலேயே துவங்கப்பட்டுவிட்டது.

வழக்கம்போல் மற்ற மினி கார்களை போன்று, முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியா கொண்டுவரப்பட்டு சிபியூ (CBU) முறையில் விற்பனை செய்யப்பட உள்ள இந்த ஸ்பெஷல் எடிஷன், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. தோற்றத்தை பொறுத்தவரையில், 1965 மான்டே கார்லோ ராலியில் வெற்றி பெற்ற மினி கூப்பர் காரை நினைவுக்கூறும் விதமாக சிவப்பு நிறத்தில், இந்த ஸ்பெஷல் எடிஷன் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

mini cooper s victory edition launch

அதேபோல், மேற்கூரையும் வெள்ளை நிறத்தில் இருப்பதை காணலாம். அதேநேரம், வாடிக்கையாளர்கள் விரும்பினால் இந்த விக்டரி எடிஷனை கருப்பு நிற மேற்கூரை உடனும் வாங்கலாம் என மினி அறிவித்துள்ளது. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, 1965 மான்டே கார்லோ ராலியில் மினி கூப்பர் காருக்கு வழங்கப்பட்ட '52' என்கிற எண் இந்த ஸ்பெஷல் எடிஷனிலும் வழங்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் கூடுதலாக, வெள்ளை நிறத்திலான ஸ்ட்ரிப் ஒன்று காரின் முன்பக்க பொனெட்டில் இருந்து பின்பக்க டெயில்கேட் வரையில் செல்வதை காணலாம். காரின் பின்பக்கத்தில் இரட்டை-ரிட்ஜ் கொண்ட ரூஃப் ஸ்பாய்லரும், தனித்துவமான 18-இன்ச் அலாய் சக்கரங்களும் இந்த புதிய ஸ்பெஷல் எடிஷன் காரின் தோற்றத்தை மேலும் அழகுப்படுத்தி காட்டுகின்றன. காரின் பின்பக்கத்தில், மத்தியில் எக்ஸாஸ்ட் குழாய் கொடுக்கப்பட்டுள்ளது.

1965 மான்டே கார்லோ ராலி வெற்றியை குறிக்கும் விதமாக, '1965' ஸ்டிக்கர்கள் காரின் பின்பக்க கதவிலும், D-பில்லரிலும் ஒட்டப்பட்டுள்ளன. இவற்றுடன், புதிய கூப்பர் எஸ் விக்டரி எடிஷன் காருக்கு JCW எனப்படும் ஜான் கூப்பர் வொர்க்ஸ் பேக்கேஜையும் மினி நிறுவனம் வழங்கியுள்ளது. இதனை சுட்டிக் காட்டும் விதமாக, 'John Cooper Works' லோகோ ஆனது காரின் முன்பக்க க்ரில் மற்றும் பின்பக்க கதவில் இடம்பெறுள்ளது.

அத்துடன், காரின் முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் மினி லோகோகள் வழக்கத்திற்கு மாறாக கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. இதற்கேற்ப, காரை சுற்றிலும் பல பகுதிகளில் பளபளப்பான கருப்பு நிற பேனல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோன்று, காருக்கு உள்ளேயும் பல இடங்களில் 1965 மான்டே கார்லோ ராலி பந்தய வெற்றியை நினைவுக்கூறும் ஹைலைட்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அலங்கார வேலைப்பாடுகளை தவிர்த்து, கூப்பர் எஸ் காரில் வழங்கப்படும் வழக்கமான மெக்கானிக்கல் பாகங்கள் தான் இந்த புதிய விக்டரி எடிஷனிலும் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், வழக்கமான மினி கூப்பர் எஸ் காரில் இருந்து வேறுப்பட்ட கூப்பர் எஸ் காரை வாங்க விரும்புபவர்களுக்கு இந்த ஸ்பெஷல் எடிஷன் ஏற்றதாக இருக்கும். குறுகிய காலத்திற்கு, குறுகிய எண்ணிக்கையில் மட்டுமே இந்த கார் விற்பனை செய்யப்பட உள்ளதால், விருப்பமுள்ளவர்கள் விரைவாக புக் செய்வது நல்லது.

Article Corrections

தவறுதலாக 'மோண்டே கார்லோ' என குறிப்பிடப்பட்டு இருந்து 'மான்டே கார்லோ' என மாற்றப்பட்டது.

More from DriveSpark

Article Published On: Friday, March 20, 2026, 10:36 [IST]
English summary
Mini india introduces cooper s victory edition price design features all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+