மாருதி ஸ்விஃப்ட் கார் அளவுக்கு தான் ஒவ்வொரு காரும் இருக்கு... நாட்டில் மொத்தமாகவே 18 ஷோரூம்கள் தான்!

மினி இந்தியா நிறுவனம் 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. எந்த அளவிற்கு என்றால், கடந்த 2025ஆம் ஆண்டின் முதல் பாதியை காட்டிலும், நடப்பு ஆண்டின் முதல் பாதியில் மினி கார்களின் விற்பனை சுமார் 70 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

BMW குழுமத்தின் கீழ் செயல்படும் மினி நிறுவனத்தில் இருந்து அதன் பெயருக்கு ஏற்றாற் போன்று அளவில் சிறியதான கார்கள், சொகுசான தரத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. சொகுசான கார்களாக இருப்பினும், அளவில் சிறியதாக இருப்பதால் BMW கார்கள் அளவிற்கு மினி கார்களை இந்தியாவில் பலர் வாங்குவது இல்லை.

mini india car sales

இருப்பினும், இந்த 2026ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலக்கட்டத்தில் மொத்தம் 504 மினி கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே கூறியதுபோல், இது 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களை காட்டிலும் சுமார் 70%-ஐ காட்டிலும் அதிகமாகும்.

கடந்த 6 மாதங்களில், மற்ற அனைத்து மினி கார்களை காட்டிலும் மினி கண்ட்ரிமேன் காருக்கு சிறப்பாக வரவேற்பு கிடைத்துள்ளது. அதாவது, இந்த காரை இந்திய மக்கள் நிறைய பேர் வாங்கியுள்ளனர். கடந்த ஜூன் மாத மத்தியில் விலை குறைவான கண்ட்ரிமேன் காராக அறிமுகம் செய்யப்பட்ட கண்ட்ரிமேன் சி காருக்கும் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர்.

mini india car sales

இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுவதன் மூலமாக குறைவான விலையை பெற்றுள்ள இந்த கண்ட்ரிமேன் சி ஆனது சென்னை BMW ஆலையில் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. கண்ட்ரிமேன் கார்களுக்கு அடுத்த இடத்தில் மினி கன்வெர்டபிள் மற்றும் ஹாட்ச் கார்கள் உள்ளன. இவ்வாறான பிரபலமான கார்களை விற்பனை செய்வதுடன், அவற்றின் ஸ்பெஷல் எடிஷன்களையும் இந்த 2026இல் மினி அறிமுகப்படுத்தி உள்ளது.

அவ்வாறு அறிமுகம் செய்யப்பட்ட மினி கூப்பர் எஸ் விக்டரி எடிஷன் மற்றும் கன்வெர்டபிள் JCW பேக் எடிஷன் கார்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. இவ்வாறான புதிய கார் அறிமுகங்களுடன், இந்த 2026ஆம் வருடத்தில் ஷோரூம்களின் எண்ணிக்கையையும் மினி நிறுவனம் கணிசமாக உயர்த்தி உள்ளது. இந்த வருடத்தில் ஜெய்பூர், ராஞ்சி, விஜயவாடா உள்பட சில நகரங்களில் புதிய மினி ஷோரூம்கள் திறக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், மும்பை, புனே, குருகிராம் போன்ற ஏற்கனவே ஷோரூம் உள்ள நகரங்களிலும் தனது மார்க்கெட்டை மினி விரிவுப்படுத்தி உள்ளது. இந்த வகையில், இந்தியாவில் 17 நகரங்களில் மொத்தம் 18 மினி டீலர்ஷிப் ஷோரூம்கள் செயல்படுகின்றன. மேலும், சில்லறை விற்பனைக்காக 'ரீடெயில்.NEXT' என்கிற செயல்திட்டத்தை மினி நிறுவனம் இந்தியாவில் செயல்படுத்தி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதுமையான மற்றும் புத்துணர்ச்சியான தயாரிப்புகள் மற்றும் தொடர்ந்து விரிவுப்படுத்தப்பட்டு வரும் ஷோரூம் மையங்கள் மூலம் மினி நிறுவனத்தின் மார்க்கெட் இந்தியாவில் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. 6 மாதங்களில் 504 கார்கள் என்பது குறைவாக தோன்றினாலும், கடந்த ஆண்டை காட்டிலும் 70%-க்கும் மேல் அதிகம் எனும்போது மினி இந்தியா நிறுவனத்தின் விற்பனை எந்த அளவிற்கு மேம்பட்டுள்ளது என்பதை யோசித்து பாருங்கள்.

Article Published On: Thursday, July 9, 2026, 21:30 [IST]
English summary
Mini india sold 504 cars within first 6 month period of 2026
மேலும்... #mini #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out