காரின் சைஸை பார்த்து குறைவா எடை போடாதீங்க! சென்னை BMW ஆலையில் உருவாக்கப்படும் புதிய கார்!

பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனமான மினி, தனது புத்தம் புதிய 'கண்ட்ரிமேன் சி' சொகுசு காரை ஜூன் 17ஆம் தேதியான இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.58 லட்சம் முதல் ரூ.58.50 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மினி காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் முதன்முறையாக உள்நாட்டிலேயே சென்னை BMW ஆலையில் அசெம்பிள் செய்யப்படும் முதல் மினி கண்ட்ரிமேன் கார் இதுதான் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதன் முன்பதிவுகள் ஏற்கனவே மினி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த புதிய மினி கண்ட்ரிமேன் சி கார் ஆனது, கண்ட்ரிமேன் JCW All4 கார் மாடலுக்குக் கீழே நிலைநிறுத்தப்பட உள்ளது.

mini countryman c india launch

கண்ட்ரிமேன் JCW All4 ஆனது ரூ.64.90 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய மினி கண்ட்ரிமேன் சி இந்திய சந்தையில் BMW X1, ஆடி Q3 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் GLA ஆகிய சொகுசு காம்பாக்ட் எஸ்யூவி கார்களுக்குக் கடுமையான போட்டியை கொடுக்கும் என தெரிகிறது.

புதிய மினி கண்ட்ரிமேன் சி காரில் BMW X1 காரின் சக்திவாய்ந்த 1.5-லிட்டர் 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 134 bhp குதிரைத்திறனையும், 230 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. என்ஜினின் ஆற்றல் 7-ஸ்பீடு டபுள்-கிளட்ச் (DCT) என்கிற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம் காரின் முன் சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் கண்ட்ரிமேன் சி காரில் ஆல்-வீல் டிரைவ் (AWD) வசதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற எலெக்ட்ரிக் காரில் இருந்து புதிய கண்ட்ரிமேன் சி காரை வேறுபடுத்திக் காட்டும் வகையில் பல சுவாரஸ்யமான வடிவமைப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன. புதிய முன் மற்றும் பின்பக்க பம்பர்கள், மாற்றியமைக்கப்பட்ட கிரில், உடலின் நிறத்திலேயே அமைந்த கதவு கைப்பிடிகள் மற்றும் மேட்ரிக்ஸ் எல்இடி டெயில் விளக்குகள் ஆகியவை இதன் அழகைக் கூட்டுகின்றன.

மேலும், பிரத்யேக ஷாம்பேன் நிற வெளிப்புற அலங்காரங்கள் மற்றும் பிரத்யேக அலாய் சக்கரங்கள் இந்த புதிய மினி காரின் கம்பீரத்திற்கு வலுச்சேர்க்கின்றன. இந்த காரின் மேற்கூரை, ORVM மற்றும் கதவு பில்லர்கள் உள்ளிட்டவை அனைத்தையும் கருப்பு நிறத்தில் கொடுத்து அசத்தியுள்ளனர். சிலி ரெட், பிரிட்டிஷ் ரேசிங் கிரீன், நானுக் ஒயிட், ஸ்லேட் ப்ளூ மற்றும் ஸ்மோக்கி கிரீன் ஆகிய ஐந்து கவர்ச்சிகரமான வண்ணங்களில் இந்த கார் கிடைக்கப் போகிறது.

மினி கண்ட்ரிமேன் சி காரின் உட்புற கேபின் பாரம்பரிய குரோம் மற்றும் லெதர் அமைப்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, நவீன ஃபேப்ரிக் ஃபினிஷிங் கொண்ட டாஷ்போர்டு மற்றும் இரட்டை வண்ண அப்ஹோல்ஸ்டரியைப் பெற்றுள்ளது. இதன் மையப்பகுதியில் மினி ஆப்ரேட்டிங் சிஸ்டம்-9 கொண்ட அதிநவீன வட்ட வடிவ OLED தொடுதிரை வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர, ஹெட்-அப் டிஸ்ப்ளே, பேடில் ஷிஃப்டர்கள், பிரீமியம் ஆடியா சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், ஏசி காற்றுக்கு செங்குத்தான டிசைனில் துளைகள் மற்றும் டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் என உங்களை வியப்பில் ஆழ்த்தும் பல அம்சங்கள் இந்த புதிய காரில் நிறைந்துள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மினி நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய காராக புதிய கண்ட்ரிமேன் சி அறிமுகம் செய்யப்படுகிறது. ஏனெனில், அந்த அளவிற்கு விலை குறைவான மினி கார்களுள் ஒன்றாக இது மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்படுகிறது. இதன் காரணமாகவே, இந்த காரை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யும் திட்டத்தில் மினி இறங்கியது. இவ்வாறு உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்படுவதால், மத்திய அரசின் இறக்குமதி வரிகளில் இருந்து தப்பித்து காரின் விலையை குறைவாக நிர்ணயிக்க முடியும்.

Article Published On: Wednesday, June 17, 2026, 6:02 [IST]
English summary
Mini will launch the countryman c in india today expecting price and features
மேலும்... #mini #countryman #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out