மாருதி ஸ்விஃப்ட்டை விட குறைவான விலையில் 7 சீட்டர் கார்... இந்த லிஸ்ட்ல ஒன்னு இல்ல மொத்தம் 4 கார் இருக்கு...

இந்தியாவில் 7 பேர் பயணம் செய்ய கூடிய கார்களுக்கு (7 Seater Cars) எப்போதுமே அதிக தேவை இருந்து வருகிறது. அதிக உறுப்பினர்களை கொண்ட அளவில் பெரிய குடும்பங்களின் முதல் சாய்ஸ் 7 சீட்டர் கார்கள்தான். ஆனால் 7 சீட்டர் கார்கள் என்றாலே விலை மிகவும் அதிகமாக இருக்கும் என பலரும் நினைத்து கொண்டுள்ளனர்.

ஆனால் இது தவறு. ஏனெனில் இந்திய சந்தையில் ஏராளமான 7 சீட்டர் கார்கள் மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில், மிகவும் முக்கியமான மூன்று 7 சீட்டர் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

Nissan Gravite

நிஸான் க்ராவைட் (Nissan Gravite): ஜப்பானை சேர்ந்த நிஸான் நிறுவனத்தின் தயாரிப்பான க்ராவைட் இந்திய சந்தைக்கு புது வரவு ஆகும். தற்போதைய நிலையில் இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.65 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது 5 சீட்டர் காரான மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) காரை விட மிகவும் குறைவான விலை ஆகும்.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 5.79 லட்ச ரூபாயாக உள்ளது. நிஸான் க்ராவைட் காரில் 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் (Engine Option) வழங்கப்பட்டுள்ளது. இதன் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) வழங்கப்பட்டுள்ளன.

Renault Triber

அத்துடன் மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, கூல்டு க்ளவ் பாக்ஸ், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளும் (Features), நிஸான் க்ராவைட் காரில் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றுடன் 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், ட்ராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், பிரேக் அஸிஸ்ட் சிஸ்டம், இபிடி உடன் ஏபிஎஸ், பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரியர் கேமரா ஆகிய பாதுகாப்பு வசதிகளையும் (Safety Features), நிஸான் க்ராவைட் கொண்டுள்ளது.

Mahindra Bolero

ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber): பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனத்தின் தயாரிப்பான ட்ரைபர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.76 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. ரெனால்ட் ட்ரைபர் காரிலும் 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்தான் வழங்கப்பட்டுள்ளது. இதன் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ரெனால்ட் ட்ரைபர் காரின் வசதிகளை பொறுத்தவரையில், மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, கூல்டு க்ளவ் பாக்ஸ், 7 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.

அத்துடன் 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், ட்ராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், பிரேக் அஸிஸ்ட் சிஸ்டம், இபிடி உடன் ஏபிஎஸ், பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரியர் கேமரா ஆகிய பாதுகாப்பு வசதிகளையும், ரெனால்ட் ட்ரைபர் கார் கொண்டுள்ளது.

நிஸான் க்ராவைட் மற்றும் ரெனால்ட் ட்ரைபர் ஆகிய 2 கார்களுக்கும் இடையே ஏராளமான ஒற்றுமைகள் உள்ளதே என நீங்கள் நினைப்பது புரிகிறது. ரெனால்ட் ட்ரைபர் காரின் அடிப்படையில்தான் நிஸான் க்ராவைட் உருவாக்கப்பட்டுள்ளது. ரெனால்ட் மற்றும் நிஸான் ஆகிய 2 நிறுவனங்களுக்கும் இடையே கூட்டணி இருந்து வருவது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero): இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்பான பொலிரோ காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 8 லட்ச ரூபாயாக உள்ளது. இதில், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதன் உடன் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டும் வழங்கப்படுகிறது.

சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன் இதன் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். அதே நேரத்தில் மஹிந்திரா பொலிரோ காரின் வசதிகளை பொறுத்தவரையில், 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பார்க்கிங் சென்சார்கள், ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்கள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் 7 சீட்டர் கார்களை வாங்க விரும்புபவர்கள் இந்த 3 கார்களை பரிசீலனை செய்யலாம். அத்துடன் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரையும் கூட நீங்கள் பரிசீலனை செய்யலாம். இந்த 7 சீட்டர் காரின் ஆரம்ப விலை 8.80 லட்ச ரூபாயாக உள்ளது. இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே அந்தந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, April 10, 2026, 23:32 [IST]
English summary
Most affordable 7 seater cars nissan gravite renault triber mahindra bolero maruti suzuki ertiga
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X