மிகவும் விலை குறைவான சிஎன்ஜி எஸ்யூவி கார்கள்... லிஸ்ட்ல டாடா, மாருதி தயாரிப்புகள் இருக்கு...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற காரணங்களால் இந்தியாவில் தற்போது சிஎன்ஜி கார்களின் விற்பனை உயர்ந்து கொண்டே வருகிறது. பெட்ரோல், டீசல் உடன் ஒப்பிடும்போது சிஎன்ஜி விலை சற்று குறைவு. அத்துடன் பெட்ரோல், டீசல் கார்களை விட சிஎன்ஜி கார்கள் அதிக மைலேஜ் வழங்க கூடியவையாகவும் உள்ளன.

முன்பு ஒரு சில செக்மெண்ட்களில் மட்டுமே சிஎன்ஜி கார்கள் கிடைத்து வந்தன. தற்போது கிட்டத்தட்ட அனைத்து செக்மெண்ட்களிலும் சிஎன்ஜி கார்கள் கிடைக்கின்றன. இந்த செய்தியில் இந்திய சந்தையில் கிடைக்க கூடிய விலை குறைவான சிஎன்ஜி எஸ்யூவி ரக கார்கள் குறித்த தகவல்களை பார்க்கலாம்.

Tata Punch

டாடா பன்ச் (Tata Punch): டாடா பன்ச் காரின் சிஎன்ஜி வேரியண்ட்களின் ஆரம்ப விலை 6.80 லட்ச ரூபாயாக உள்ளது. டாடா பன்ச் காரின் சிஎன்ஜி வேரியண்ட்களில் 1.2 லிட்டர் Revotron இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மூலம் இயங்க கூடியதாகும்.

இந்த இன்ஜின் பெட்ரோல் மூலமாக இயங்கும்போது 87.8 பிஎஸ் பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். அதே நேரத்தில் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது 73.4 பிஎஸ் பவரையும், 103 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் கிடைக்கும் ஒரு சில சிஎன்ஜி/ஆட்டோமேட்டிக் கார்களில் இதுவும் ஒன்றாகும்.

Tata Nexon Front Profile

டாடா நெக்ஸான் (Tata Nexon): டாடா நெக்ஸான் காரின் சிஎன்ஜி வேரியண்ட்களின் ஆரம்ப விலை 8.35 லட்ச ரூபாயாக உள்ளது. இந்தியாவின் முதல் டர்போ பெட்ரோல் சிஎன்ஜி கார் என்ற பெருமை இதற்கு உண்டு. டாடா நெக்ஸான் சிஎன்ஜி வேரியண்ட்களில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு Revotron இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இன்ஜினும் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மூலம் இயங்க கூடியது. பெட்ரோல் மூலமாக இயங்கும்போது அதிகபட்சமாக 88.52 kW பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் இந்த இன்ஜின் உருவாக்கும். அதே நேரத்தில் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது 73.52 kW (100 பிஎஸ்) பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் இந்த இன்ஜின் உருவாக்கும்.

பொதுவாக சிஎன்ஜி கார்களின் பவர் அவுட்புட் குறைவாக இருக்கும். எனவே செயல்திறனில் அவை சற்று மந்தமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். ஆனால் டாடா நெக்ஸான் சிஎன்ஜி காரில் பொருத்தப்பட்டிருப்பது டர்போ இன்ஜின் என்பதால், செயல்திறன் சிறப்பாக இருக்கும். முன்னதாக டாடா நெக்ஸான் சிஎன்ஜி காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

Maruti Fronx Front Profile

மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx): மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் சிஎன்ஜி வேரியண்ட்களின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 8.66 லட்ச ரூபாயாக உள்ளது. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் காரின் சிஎன்ஜி வேரியண்ட்களில் 1.2 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதுவும் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மூலமாக இயங்கும்.

பெட்ரோல் மூலமாக இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 89.73 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். அதே நேரத்தில் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது அதிகபட்சமாக 77.5 பிஎஸ் பவரையும், 98.5 என்எம் டார்க் திறனையும் இந்த இன்ஜின் உருவாக்கும். இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

Maruti Suzuki Brezza

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza): மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் சிஎன்ஜி வேரியண்ட்களின் ஆரம்ப விலை 9.17 லட்ச ரூபாயாக உள்ளது. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி வேரியண்ட்களில் 1.5 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதுவும் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மூலமாக இயங்க கூடியதுதான்.

பெட்ரோல் மூலமாக இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 100.6 பிஎஸ் பவரையும், 137.1 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். அதே நேரத்தில் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது 87.8 பிஎஸ் பவரையும், 121.5 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டும் வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மிகவும் குறைவான விலையில் எஸ்யூவி ரகத்தில் ஒரு சிஎன்ஜி காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்கள் இந்த கார்களை பரிசீலனை செய்யலாம். பொதுவாக எஸ்யூவி ரக கார்களில் அதிக மைலேஜை நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் சிஎன்ஜி மூலம் இயங்குவதால் மேற்கண்ட கார்களில் நல்ல மைலேஜையும் எதிர்பார்க்கலாம். எனவே அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு எஸ்யூவி காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இவை நல்ல ஆப்ஷனாக இருக்கும்.

Article Published On: Sunday, July 12, 2026, 16:32 [IST]
English summary
Most affordable cng suvs tata punch nexon maruti suzuki fronx brezza
மேலும்... #maruti suzuki #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X