மாருதி பிரெஸ்ஸாவை விட மிகவும் குறைவான விலையில் ஸ்கோடா கார்! இவ்ளோ கம்மியா! சந்தோஷத்துல கையும் ஓடல காலும் ஓடல!

இந்திய சந்தையில் பிரீமியமான கார்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் ஒன்று ஸ்கோடா (Skoda). ஸ்கோடா கார்கள் என்றாலே மிகவும் விலை உயர்ந்தவையாகதான் இருக்கும் எனவும், அவற்றை பராமரிப்பதற்கு அதிகமாக செலவு ஆகும் எனவும், வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக ஸ்கோடா நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை பிரம்மாண்டமாக எல்லாம் இருக்காது.

ஆனால் இதெல்லாம் ஸ்கோடா கைலக் (Skoda Kylaq) காரின் வருகைக்கு முன்புதான்! அதற்கு பிறகு காட்சிகள் மாறி விட்டன. இந்திய சந்தையில் கிடைக்கும் ஸ்கோடா நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான கார் (Most Affordable Skoda Car In India) என்ற பெருமை கைலக்கிற்கு உண்டு.

Skoda Kylaq Interior Design

இதன் காரணமாக இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் ஸ்கோடா கைலக் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. குறிப்பாக நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், ஸ்கோடா கைலக் விற்பனையில் மிகவும் பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

ஸ்கோடா நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் வெறும் 1,242 கைலக் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் ஸ்கோடா நிறுவனம் 3,220 கைலக் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. அதாவது கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 1,978 ஸ்கோடா கைலக் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Skoda Kylaq

இதன் மூலம் ஸ்கோடா கைலக் கார் விற்பனையில் 159.26 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இந்த தகவல் தெரியவந்துள்ளது. இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) மற்றும் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) ஆகிய 2 கார்கள்தான், ஸ்கோடா கைலக் காரின் மிக முக்கியமான போட்டி மாடல்கள் ஆகும்.

ஆனால் இவை இரண்டையும் விட ஸ்கோடா கைலக் காரின் விலை மிகவும் குறைவு. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் ஆரம்ப விலை 8.26 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் ஹூண்டாய் வெனியூ காரின் ஆரம்ப விலை 8 லட்ச ரூபாயாக இருக்கிறது. ஆனால் ஸ்கோடா கைலக் காரின் ஆரம்ப விலை வெறும் 7.59 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

இவை அனைத்துமே அந்தந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வமான இணையதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். அதாவது மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவை விட ஸ்கோடா கைலக் காரின் ஆரம்ப விலை 67 ஆயிரம் ரூபாய் குறைவு. அதே நேரத்தில் ஹூண்டாய் வெனியூ காரை விட ஸ்கோடா கைலக் காரின் ஆரம்ப விலை 41 ஆயிரம் ரூபாய் குறைவு.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வெனியூ ஆகிய கார்கள் மட்டுமல்லாது, டாடா நெக்ஸான் (Tata Nexon), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO), கியா சொனெட் (Kia Sonet), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) ஆகிய சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் உடனும், ஸ்கோடா கைலக் போட்டியிட்டு வருகிறது.

விலை குறைவான காராக இருந்தாலும் கூட, சன்ரூஃப், கூல்டு க்ளவ் பாக்ஸ், முன் பகுதியில் டிரைவர் மற்றும் கோ-டிரைவர் ஆகியோருக்கு வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 8 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளை (Features) எல்லாம் ஸ்கோடா கைலக் கொண்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 17, 2026, 10:52 [IST]
English summary
Most affordable skoda car in india kylaq registers 159 per cent growth in january 2026
மேலும்... #skoda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+