மிகவும் விலை குறைவான சிஎன்ஜி/ஆட்டோமேட்டிக் கார்கள்...
பெட்ரோல், டீசல் உடன் ஒப்பிடும்போது சிஎன்ஜி-யின் விலை குறைவு. அத்துடன் சிஎன்ஜி மூலம் இயங்க கூடிய கார்கள் சிறப்பான மைலேஜையும் வழங்குகின்றன. எனவே இந்தியாவில் தற்போது சிஎன்ஜி கார்களின் விற்பனை உயர்ந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான சிஎன்ஜி கார்களில் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது.
இருப்பினும் ஒரு சில கார்களில், குறிப்பாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களில், சிஎன்ஜி/ஆட்டோமேட்டிக் காம்பினேஷன் கிடைக்கிறது. இதில், மிகவும் விலை குறைவான சிஎன்ஜி/ஆட்டோமேட்டிக் கார்கள் பற்றிய தகவல்களை எல்லாம் இந்த செய்தியில் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். சரி, வாருங்கள். இனி செய்திக்குள் செல்லலாம்.

டாடா டியாகோ (Tata Tiago): டாடா டியாகோ காரின் 4 வேரியண்ட்கள் சிஎன்ஜி/ஆட்டோமேட்டிக் ஆப்ஷனில் கிடைக்கின்றன. அவை ப்யூர், ப்யூர் ப்ளஸ், ப்யூர் ப்ளஸ் ஏ மற்றும் க்ரியேட்டிவ் ஆகியவை ஆகும். இவற்றின் விலை முறையே 7.05 லட்ச ரூபாய், 7.55 லட்ச ரூபாய், 8.05 லட்ச ரூபாய் மற்றும் 8.55 லட்ச ரூபாயாக உள்ளது.
இவை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். டாடா டியாகோ காரின் இந்த அனைத்து வேரியண்ட்களிலும் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் Revotron இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு ஏஎம்டி (AMT - Automated Manual Transmission) கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

டாடா டிகோர் (Tata Tigor): டாடா டிகோர் காரின் 2 வேரியண்ட்களில் சிஎன்ஜி/ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அவை எக்ஸ்இஸட்ஏ மற்றும் எக்ஸ்இஸட்ஏ ப்ளஸ் ஆகியவை ஆகும். இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலை முறையே 8.29 லட்ச ரூபாய் மற்றும் 8.84 லட்ச ரூபாயாக இருக்கிறது. டாடா டியாகோ காரை போலவே டாடா டிகோரிலும் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் Revotron இன்ஜின்/5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்தான் வழங்கப்பட்டுள்ளது.

டாடா பன்ச் (Tata Punch): டாடா டியாகோ காரை போலவே, டாடா பன்ச் காரிலும், 4 வேரியண்ட்களில் சிஎன்ஜி/ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அவை ப்யூர் ப்ளஸ், அட்வென்ஜர், அட்வென்ஜர் எஸ் மற்றும் அக்காம்ப்ளீஸ்டு ப்ளஸ் எஸ் ஆகியவை ஆகும். இவற்றின் விலை முறையே 8.67 லட்சம், 9.27 லட்சம், 9.62 லட்சம் மற்றும் 10.67 லட்சமாக உள்ளது.
இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைதான். டாடா பன்ச் காரின் இந்த அனைத்து வேரியண்ட்களிலும், டாடா டியாகோ காரை போலவே 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் Revotron இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் டாடா டியாகோ காரை போலவே, 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்தான் வழங்கப்பட்டுள்ளது.

டாடா அல்ட்ராஸ் (Tata Altroz): நாங்கள் தொகுத்துள்ள இந்த பட்டியலில் இருப்பதிலேயே டாடா அல்ட்ராஸ் காரில்தான் மிகவும் அதிகபட்சமாக 5 வேரியண்ட்களில் சிஎன்ஜி/ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. அவை ப்யூர், ப்யூர் எஸ், க்ரியேட்டிவ், க்ரியேட்டிவ் எஸ் மற்றும் அக்காம்ப்ளீஸ்டு எஸ் ஆகியவை ஆகும்.
அவற்றின் விலை முறையே 8.70 லட்சம், 9 லட்சம், 9.60 லட்சம், 9.95 லட்சம் மற்றும் 10.80 லட்சமாக இருக்கிறது. டாடா அல்ட்ராஸ் காரின் சிஎன்ஜி வேரியண்ட்களிலும் 1.2 லிட்டர் இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்தான் கொடுக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மேனுவல் கார்களை விட ஏஎம்டி கார்களை இயக்குவது எளிது. ஆனால் இந்தியாவில் ஒரு சில கார்களில் மட்டுமே சிஎன்ஜி/ஏஎம்டி ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அதில் விலை குறைவான சிஎன்ஜி/ஏஎம்டி கார்களின் பட்டியலைதான் நாங்கள் இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். மிகவும் குறைவான விலையில் சிஎன்ஜி/ஆட்டோமேட்டிக் கார்களை எதிர்பார்த்து கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் இந்த கார்களை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம்.


Click it and Unblock the Notifications
