எலெக்ட்ரிக் காரை டாடாவில் வாங்குவதா (அ) மஹிந்திராவில் வாங்குவதா? இந்த இரண்டு பிராண்ட்கள் தான் இப்போதைக்கு டாப்

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை தொடர்ந்து வேகம் பெற்று வருகிறது. 2026ஆம் நிதியாண்டின் விற்பனைத் தரவுகளின்படி, இந்தத் துறையில் ஒட்டுமொத்தமாக 83.63% வளர்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த மே மாதத்தில், இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையில் மொத்தம் 26,682 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகி உள்ளன.

இது 2025 மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 14,725 எலெக்ட்ரிக் கார்களுடன் ஒப்பிடும்போது 81.2% வளர்ச்சியையும், கடந்த 2026 ஏப்ரல் மாதத்துடன் (26,160 யூனிட்கள்) ஒப்பிடும்போது 2% வளர்ச்சியையும் குறிக்கிறது. கடந்த ஓராண்டில் 11,957 எலெக்ட்ரிக் கார்கள் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையில் 38.75% பங்குகளுடன் டாடா மோட்டார்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

most electric cars selling brands

இது முந்தைய ஏப்ரல் மாதத்தில் 35.56% ஆக இருந்தது. கடந்த மே மாதத்தில் டாடா 10,340 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. இது 2025 மே மாதம் விற்பனை செய்யப்பட்ட 5,083 யூனிட்களை விட 103.42% அதிகமாகும். ஏப்ரல் மாதத்துடன் (9,302 யூனிட்கள்) ஒப்பிடும்போது, டாடா நிறுவனம் 11.16% மாதந்திர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

எலெக்ட்ரிக் கார் துறையில் முன்கூட்டியே பெரிய முதலீடுகளைச் செய்ததன் பலனை டாடா நிறுவனம் அறுவடை செய்து வருகிறது. மஹிந்திரா ஆட்டோ 6,210 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை உடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டு விற்பனையை விட (2,891 யூனிட்கள்) இரு மடங்கிற்கும் மேலாகும் (114.8% YoY வளர்ச்சி).

most electric cars selling brands

JSW எம்ஜி மோட்டார் 4,984 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது; இந்த நிறுவனம் 2025 மே மாதத்தை காட்டிலும் 8.37% வளர்ச்சியைக் கண்டாலும், மாதாந்திர அடிப்படையில் 8.04% சரிவைச் சந்தித்துள்ளது. இதற்கடுத்த 4வது இடத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமான மாருதி சுஸுகி உள்ளது.

மாருதி சுஸுகியில் இருந்து தற்போதைக்கு விற்பனை செய்யப்படும் ஒரேயொரு எலெக்ட்ரிக் காரான இ-விட்டாரா (eVitara) கடந்த மாதம் 1,591 யூனிட்கள் விற்பனையாகி, ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 19.53% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. வின்ஃபாஸ்ட் (Vinfast) 1,238 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து இருந்தாலும், கடந்த ஏப்ரல் மாதத்தை காட்டிலும் சற்று சரிவைச் சந்தித்துள்ளது.

Electric Car Sales May-26 May-25 Diff Growth % YoY
Tata 10,340 5,083 5,257 103.42%
Mahindra 6,210 2,891 3,319 114.80%
JSW MG 4,984 4,599 385 8.37%
Maruti 1,591 0 1,591 -
VinFast 1,238 0 1,238 -
BYD 686 621 65 10.47%
Hyundai 460 719 -259 -36.02%
BMW 352 201 151 75.12%
Kia 349 41 308 751.22%
Mercedes 208 122 86 70.49%
Tesla 35 0 35 -
Volvo 29 36 -7 -19.44%
Citroen 22 129 -107 -82.95%
Others 178 283 -105 -37.10%
Total 26,682 14,725 11,957 81.20%

பிஒய்டி (BYD) நிறுவனம் 10.47% ஆண்டு வளர்ச்சி மற்றும் 25.41% மாதாந்திர வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த வரிசையில் 7வது இடத்தில் ஹூண்டாய் உள்ளது. மற்ற நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, ஹூண்டாய் கிரெட்டா இவி (Creta EV) எலெக்ட்ரிக் காரின் விற்பனை சரிவைக் கண்டுள்ளது. கடந்த மாதத்தில் வெறும் 460 ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது, 2025 மே மாதத்தை காட்டிலும் 36.02% குறைந்துள்ளது. பிஎம்டபிள்யூ (BMW) 352 எலெக்ட்ரிக் கார்களையும், மெர்சிடிஸ் 208 எலெக்ட்ரிக் கார்களையும் விற்பனை செய்து சொகுசு எலெக்ட்ரிக் கார்கள் பிரிவில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. கியா (Kia) 349 எலெக்ட்ரிக் கார்களை கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ளது.

Electric Car Sales May-26 Apr-26 Diff Growth % MoM
Tata 10,340 9,302 1,038 11.16%
Mahindra 6,210 5,822 388 6.66%
JSW MG 4,984 5,420 -436 -8.04%
Maruti 1,591 1,331 260 19.53%
VinFast 1,238 1,291 -53 -4.11%
BYD 686 547 139 25.41%
Hyundai 460 558 -98 -17.56%
BMW 352 348 4 1.15%
Kia 349 403 -54 -13.40%
Mercedes 208 118 90 76.27%
Tesla 35 43 -8 -18.60%
Volvo 29 44 -15 -34.09%
Citroen 22 30 -8 -26.67%
Others 178 903 -725 -80.29%
Total 26,682 26,160 522 2.00%

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த முன்னணி நிறுவனங்களுடன் டெஸ்லா, வால்வோ மற்றும் சிட்ரோன் ஆகிய நிறுவனங்களும் குறைந்த எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையைப் பதிவு செய்துள்ளன. இதர வாகன நிறுவனங்கள் இணைந்து 178 எலெக்ட்ரிக் கார்களை கடந்த மே மாதத்தில் விற்பனை செய்துள்ளன. இருப்பினும், டாடா எலெக்ட்ரிக் கார்களின் அபரிதனமான வளர்ச்சி நம்மை வியக்க வைக்கிறது.

Article Published On: Thursday, June 11, 2026, 8:26 [IST]
English summary
Most electric cars selling brands in india tata motors mahindra and jsw mg motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out