ஒட்டுமொத்த இந்திய நாடே எதிர்பார்க்கும் 7 புதிய எஸ்யூவி கார்கள்... அறிமுகமான உடனே புக்கிங்ஸ் குவியும்!
எஸ்யூவி கார் (SUV car)-களுக்கான மார்க்கெட் தொடர்ந்து விரிவடைந்துவரும் நிலையில், இந்தியாவில் அடுத்ததாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட புதிய எஸ்யூவி கார்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. ஆதலால், புதியதாக கார் வாங்க திட்டமிட்டு வருபவர்கள் இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகும் கார்களின் அறிமுகங்களுக்காக காத்திருக்கலாம். காத்திருக்கும் அளவிற்கு தகுதியுடைய அந்த புதிய எஸ்யூவி கார் அறிமுகங்கள் என்னென்ன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நிசான் டெக்டான் (Nissan Tekton): சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனால்ட் டஸ்டர் (Renault Duster) காரின் ரீ-பேட்ஜ்டு வெர்சனாக, அதாவது டஸ்டரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிசான் எஸ்யூவி கார் இந்த 2026ஆம் வருடத்தின் இரண்டாம் பாதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. தோற்றத்தில் சில வித்தியாசங்கள் உடன் இருந்தாலும், புதிய டஸ்டர் பெற்றுள்ள என்ஜின் ஆப்ஷன்கள் உடன் தான் புதிய டெக்டான் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எபெல்லா (Toyota Urban Cruiser Ebella): இந்தியாவில் டொயோட்டாவின் முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) என்பதினாலேயே பலத்த எதிர்பார்ப்பில் இருக்கும் எபெல்லா ஆனது மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரான இவிட்டாரா (eVitara)-இன் ரீபேட்ஜ்டு வெர்சனாக களமிறக்கப்படுகிறது.
டாடா சியரா இவி (Tata Sierra EV): சமீபத்தில் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் டாடா சியரா காரின் எலெக்ட்ரிக் வெர்சனையும் இந்த வருடத்திற்குள்ளாக அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தீவிரமாக தயாராகி வருகிறது. இரு பேட்டரி பேக்குகள் உடன் பின்பக்கத்தில் எலெக்ட்ரிக் மோட்டாரை கொண்டதாக இந்த கார் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டா எலிவேட் இவி (Honda Elevate EV): ஹோண்டாவில் இருந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் முதல் எலெக்ட்ரிக் காராக இந்த வருடம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் கார் இதுவாகும். முழுவதுமாக இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டு, 400- 500கிமீ ரேஞ்சை வழங்கக்கூடியதாக இந்த காரை எதிர்பார்க்கிறோம்.
கியா சிரோஸ் இவி (Kia Syros EV): இந்த வருடத்தில் மார்க்கெட்டில் விற்பனைக்குவர உள்ளதாக எதிர்பார்க்கப்படும் புதிய எலெக்ட்ரிக் கார்களுள் சிரோஸ் இவி ஒன்றாகும். கியா நிறுவனம் அதன் சிரோஸ் காரை மிக சமீபத்தில்தான் 2026ஆம் ஆண்டிற்கான அப்கிரேட்கள் உடன் மேம்படுத்தி அறிமுகம் செய்தது. அந்த அப்கிரேட்கள் அனைத்தையும் புதிய சிரோஸ் இவி காரிலும் எதிர்பார்க்கலாம்.
ஜே.எஸ்.டபிள்யூ ஜேடூர் டி2 (JSW Jetour T2): சீனாவின் செரி (Chery) நிறுவனத்துடன் இணைந்து அந்த நிறுவனத்தின் ஜேடூர் டி2 காரை இந்தியாவிற்கு கொண்டுவர ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் தயாராகி வருகிறது. எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்துடன் இணைந்து ஜேஎஸ்டபிள்யூ செயல்பட்டு வருகிறது என்றாலும், செரி நிறுவனத்துடனான கூட்டணிக்காக ஜேஎஸ்டபிள்யூ மோட்டார் என்கிற புதிய நிறுவனம் ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தில் துவங்கப்பட்டுள்ளது.
ரெனால்ட் பிக்ஸ்டர் (Renault Bigster): ரெனால்ட் டஸ்டர் காரின் 7-சீட்டர் வெர்சனாக வருகிற ஜூன் மாதத்தில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 7-சீட்டர் வெர்சன் என்பதால் சற்று அதிகமாக, ரூ.14 லட்சம்- ரூ.18 லட்சத்தில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எஸ்யூவி கார்களுக்கான மார்க்கெட் இந்தியாவில் கடந்த சில வருடங்களில் பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு காரணம், மக்களின் இரசனை ஆனது நிமிர்ந்த தோற்றம் கொண்ட கம்பீரமான கார்கள் பக்கம் சென்றிருப்பது ஆகும். அதற்கேற்ப கார் நிறுவனங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது புது, புது எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளன. இருப்பினும், இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ள புதிய எஸ்யூவி கார் அறிமுகங்களில் பெரும்பாலானவை எலெக்ட்ரிக் கார்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications








