ஏரியாவில் ஒருத்தரிடமாவது இதில் ஒரு கியா கார் இருக்கும்! கொரியன் கம்பெனிகாரன் இலாபம் அள்ளுறான்!

கியா (Kia), தென்கொரியாவை சேர்ந்த உலகளவில் பிரபலமான கார் நிறுவனம். இந்திய சந்தையிலும் கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. 2019இல் முதலாவதாக செல்டோஸ் (Seltos) காரை இந்தியாவில் அறிமுகம் செய்த கியா நிறுவனம், தற்சமயம் 7 கார் மாடல்களை விற்பனை செய்கிறது. இதில் எலெக்ட்ரிக் கார்களும் அடங்குகின்றன.

கடந்த 2026 பிப்ரவரி மாதத்தில் கியா மொத்தம் 27 ஆயிரத்து 610 கார்களை விற்பனை (Sales) செய்துள்ளது. அதுவே, 2025 பிப்ரவரியில் 25,026 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த வகையில், கியா அடைந்திருக்கும் 10% விற்பனை வளர்ச்சிக்கு காரணமான 4 முக்கிய கியா கார் மாடல்களை, அவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் உடன் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

most selling kia cars

கியா செல்டோஸ்: ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் கியாவின் முதல் காரான செல்டோஸ், தற்சமயம் இந்தியாவில் பிரபலமான கார்களுள் ஒன்றாக விளங்குகிறது. இந்தியாவின் காம்பாக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவில் நிலைநிறுத்தப்படும் செல்டோஸ் கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 10 ஆயிரத்து 308 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதுவே கடந்த 2025ஆம் ஆண்டின் இதே பிப்ரவரி மாதத்தில் 6,446 செல்டோஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில் பார்க்கும்போது, செல்டோஸ் கார்களின் விற்பனை 60% அதிகரித்துள்ளது. அதாவது, 3,862 செல்டோஸ் கார்கள் கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2026 ஜனவரி மாதத்தில் இன்னும் அதிகமாக 10,639 செல்டோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. பல்வேறு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் செல்டோஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.99 லட்சம்- ரூ.19.99 லட்சம் வரை தற்சமயம் உள்ளன.

most selling kia cars

கியா சொனெட் (Sonet): கியா நிறுவனத்தின் சப்-காம்பாக்ட் எஸ்யூவி காரான இது 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக உள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 9,750 சொனெட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2025 பிப்ரவரியில் 7,598 சொனெட் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில் பார்த்தால், சொனெட் கார்களின் விற்பனை 28% அதிகரித்துள்ளது என்றாலும், 2026 ஜனவரியில் சுமார் 10,998 சொனெட் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. செல்டோஸை விட குறைவாக சொனெட் ரூ.7.30 லட்சம் - ரூ.14 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலைகளில் கிடைக்கிறது.

கியா கேரன்ஸ் (Carens): கியா நிறுவனத்தின் லேட்டஸ்ட் எம்பிவி (MPV) ரக காரான கேரன்ஸ், விசாலமான உட்புற இடவசதி உடன் 6-சீட்டர் மற்றும் 7-சீட்டர் வெர்சன்களில் கிடைக்கிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் கியா விற்பனை செய்திருந்த கேரன்ஸ் கார்களின் எண்ணிக்கை 6,815 ஆகும். அதுவே, 2025 பிப்ரவரியில் 5,318 கேரன்ஸ் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

இந்த வகையில் கேரன்ஸ் கார்களின் விற்பனை சொனெட்டை போல் 28% அதிகரித்துள்ளது. 2026 ஜனவரியிலும் கேரன்ஸ் கார்களின் விற்பனை 6 ஆயிரத்தை தொடவில்லை. பெட்ரோல் என்ஜின், டீசல் என்ஜின் மட்டுமின்றி, சிஎன்ஜி (CNG) ஆப்ஷனிலும் கேரன்ஸ் கிடைத்தாலும், இந்த கார் பிரீமியம் (ஆப்ஷ்னல்) என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

கியா சிரோஸ் (Syros): கேரன்ஸ் காரை விட லேட்டஸ்ட் கியா காரான சிரோஸ் விற்பனையில் கடந்த சில மாதங்களாகவே வெகுவாக சரிவை சந்தித்து வருகிறது. 2025 பிப்ரவரியில் 5,425 சிரோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் வெறும் 662 சிரோஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2026 ஜனவரியில் இன்னும் குறைவாக 275 சிரோஸ் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட கியா நிறுவனம் புது, புது முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கேரன்ஸ், சிரோஸ் கார்களை அறிமுகம் செய்தது எல்லாம் அதன் ஒரு பகுதியே. ஆனால், இதில் சிரோஸ் காரின் விற்பனை பெரியளவில் சோபிக்காதது நிச்சயமாக கியா நிறுவனத்திற்கு ஏமாற்றமாகவே இருக்கும். மேலும், கடந்த மாதத்தில் ஒரு எலெக்ட்ரிக் கார் கூட கியாவில் விற்பனையாகாததும் நாம் எதிர்பார்க்காத ஒன்றே.

More from DriveSpark

Article Published On: Saturday, March 14, 2026, 5:00 [IST]
English summary
Most selling kia cars in india as per february 2026 seltos sonet carens
மேலும்... #kia motors #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+