3 லட்சம் இல்ல! 30 லட்சம் கம்மியா குடுத்தாலும் மாருதி எர்டிகா நிழலை கூட தொட முடியாது! அவமானப்பட்ட நிறுவனங்கள்!
இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் 7 சீட்டர் எம்பிவி கார் (7 Seater MPV Car) என்ற பெருமையை மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) தன்வசம் வைத்துள்ளது. இந்த பெருமையை நடப்பு 2026ம் ஆண்டு மே மாதமும் மாருதி சுஸுகி எர்டிகா தக்க வைத்து கொண்டுள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் 20,350 எர்டிகா கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது 26 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலம் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட 7 சீட்டர் எம்பிவி கார் என்ற பெருமையை மாருதி சுஸுகி எர்டிகா பெற்றுள்ளது.

அதேசமயம் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் அதிகமாக விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars May 2026) மாருதி சுஸுகி எர்டிகா 3வது இடத்தை பெற்றுள்ளது. இந்த பட்டியலில் முதல் 2 இடங்களில் முறையே செடான் (Sedan) ரகத்தை சேர்ந்த மாருதி சுஸுகி டிசையரும் (Maruti Suzuki Dzire), எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸூம் (Maruti Suzuki Fronx) உள்ளன.
காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக இது நமக்கு தெரிய வந்துள்ளது. இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 8.80 லட்ச ரூபாயாக உள்ளது. ஆனால் இதை விட மிகவும் குறைவான விலையில் 7 சீட்டர் எம்பிவி ரக கார்கள் கிடைக்கின்றன.

அவை ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) மற்றும் நிஸான் க்ராவைட் (Nissan Gravite) ஆகியவை ஆகும். இதில், ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 5.81 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் நிஸான் க்ராவைட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையோ வெறும் 5.65 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.
அதாவது மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் உடன் ஒப்பிடும்போது ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 2.99 லட்ச ரூபாய் குறைவாகும். அதே நேரத்தில் நிஸான் க்ராவைட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 3.15 லட்ச ரூபாய் குறைவாகும்.
இருப்பினும் மாருதி சுஸுகி எர்டிகாவையே மக்கள் வாங்குவது ஏன்? என்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. முதலில் ரெனால்ட் ட்ரைபர் மற்றும் நிஸான் மேக்னைட் ஆகியவை எல்லாம் சப்-4 மீட்டர் எம்பிவி ரக கார்கள் ஆகும். அதாவது அவற்றின் நீளம் 4 மீட்டருக்கு உள்ளதாகதான் இருக்கும். துல்லியமாக சொல்வதென்றால் ரெனால்ட் ட்ரைபர் காரின் நீளம் 3,985 மிமீ ஆகவும், நிஸான் க்ராவைட் காரின் நீளம் 3,987 மிமீ ஆகவும் மட்டுமே உள்ளது.
ஆனால் மாருதி சுஸுகி எர்டிகா காரின் நீளம் 4,435 மிமீ ஆக இருக்கிறது. எனவே ரெனால்ட் ட்ரைபர் மற்றும் நிஸான் க்ராவைட் ஆகிய கார்களுடன் ஒப்பிடும்போது, மாருதி சுஸுகி எர்டிகாவே பயணிகளுக்கு சௌகரியமான பயணத்தை வழங்கும். அத்துடன் ரெனால்ட் ட்ரைபர் மற்றும் நிஸான் க்ராவைட் ஆகிய கார்களில் 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்தான் வழங்கப்படுகிறது.
இந்த இன்ஜினின் செயல்திறனில் நிறைய வாடிக்கையாளர்களுக்கு திருப்தி இல்லை. ஆனால் மாருதி சுஸுகி எர்டிகா காரில் சக்தி வாய்ந்த 1.5 லிட்டர் ஸ்மார்ட் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இது போன்ற காரணங்களால்தான் மக்கள் மாருதி சுஸுகி எர்டிகாவையே பெரிதும் விரும்புகின்றனர்.
அத்துடன் மாருதி சுஸுகி எர்டிகா காரில் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷனும் உள்ளது. இதன் மைலேஜ் (Mileage) ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர்கள் ஆகும். மேலும் 17.78 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், பிஎம் 2.5 ஃபில்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் போன்ற வசதிகளையும் (Features) மாருதி சுஸுகி எர்டிகா கார் கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி எர்டிகா ஏன் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் 7 சீட்டர் எம்பிவி ரக காராக உள்ளது? என்பது தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என நாங்கள் நம்புகிறோம். மாருதி சுஸுகி நிறுவனம் கூடிய விரைவில் மற்றொரு 7 சீட்டர் காரையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
ஆனால் அது ஐசி இன்ஜின் கார் கிடையாது. பேட்டரி மூலமாக இயங்கும் எலெக்ட்ரிக் கார் ஆகும். எனவே இந்தியாவின் 7 சீட்டர் எம்பிவி கார் செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆதிக்கம் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.


Click it and Unblock the Notifications