அரபு ஷேக்குகள் போல் செல்வ செழிப்பாக மாற போகும் சிவகங்கை மக்கள்! ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை கொட்ட போறாங்க!

இந்தியாவில் மிகவும் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு (Tamil Nadu) உள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதாரம் மிகவும் சிறப்பாக இருந்து வருவதே இதற்கு காரணம். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இதில் மிகவும் முக்கியமான காரணமாக இருப்பது ஆட்டோமொபைல் துறை ஆகும்.

ஹூண்டாய் (Hyundai), பிஎம்டபிள்யூ (BMW), ராயல் என்பீல்டு (Royal Enfield), ரெனால்ட் - நிஸான் (Renault - Nissan) மற்றும் ஓலா (Ola) என ஏராளமான நிறுவனங்களின் வாகன தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் இயங்கி கொண்டுள்ளன. அத்துடன் தொடர்ந்து இன்னும் ஏராளமான நிறுவனங்கள் தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகளை திறந்து வருகின்றன.

MRF To Set Up Rs 5 300 Crore Tyre Manufacturing Plant In TN

ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) மற்றும் வின்ஃபாஸ்ட் (VinFast) போன்ற முன்னணி நிறுவனங்களின் கார் தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் சமீபத்தில் திறக்கப்பட்டன. ஜாகுவார் லேண்ட் ரோவர் மற்றும் வின்ஃபாஸ்ட் ஆகிய தொழிற்சாலைகளுக்கான முதலீடு, சமீபத்தில் தமிழ்நாட்டால் ஈர்க்கப்பட்ட மிகவும் முக்கியமான முதலீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்த வரிசையில் மற்றொரு மிக முக்கியமான முதலீடு ஒன்றை தற்போது தமிழ்நாடு ஈர்த்துள்ளது. அது எம்ஆர்எஃப் (MRF) நிறுவனத்தின் முதலீடு ஆகும். இந்தியாவை சேர்ந்த வாகன டயர் தயாரிப்பு நிறுவனங்களில் எம்ஆர்எஃப் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. சென்னையை (Chennai) தலைமையிடமாக கொண்டு எம்ஆர்எஃப் நிறுவனம் இயங்கி வருகிறது.

MRF Tyres

தற்போதைய நிலையில் எம்ஆர்எஃப் நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 10 தொழிற்சாலைகள் உள்ளன. இந்த வரிசையில் தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய டயர் தொழிற்சாலையை திறப்பதற்கு எம்ஆர்எஃப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சிவகங்கை (Sivaganga) மாவட்டத்தில் உள்ள சிப்காட் (SIPCOT) தொழில் பூங்காவில், எம்ஆர்எஃப் நிறுவனத்தின் இந்த தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது.

இந்த தொழிற்சாலையில் எம்ஆர்எஃப் நிறுவனம் 5,300 கோடி ரூபாயை முதலீடு செய்யவுள்ளது. இதன் மூலம் 1,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (Chief Minister M K Stalin) தலைமையில் தற்போது அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தமிழ்நாடு பொருளாதாரத்தில் மிகச்சிறந்த மாநிலமாக இருந்தாலும் கூட, ஒரு சில மாவட்டங்கள் தொழில் வளர்ச்சியில் சற்று பின்தங்கிதான் உள்ளன. இதில், சிவகங்கை மிகவும் முக்கியமானது. அப்படிப்பட்ட ஒரு மாவட்டத்திற்கு எம்ஆர்எஃப் நிறுவனத்தின் புதிய டயர் தொழிற்சாலை வரவிருப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது.

இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதுடன், நிலத்தின் மதிப்பு உயர்வு போன்ற நன்மைகளும் அவர்களுக்கு கிடைக்கும். ஒட்டுமொத்தத்தில் சிவகங்கை மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியில், எம்ஆர்எஃப் நிறுவனத்தின் இந்த புதிய டயர் தொழிற்சாலை மிகவும் முக்கியமான பங்களிப்பை வழங்கும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

எம்ஆர்எஃப் நிறுவனம் டூவீலர்கள் மற்றும் கார்களுக்கான டயர்கள் மட்டுமல்லாது, லாரிகள் போன்ற கனரக வாகனங்களுக்கான டயர்களையும், டிராக்டர் போன்ற விவசாய பணிகளில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களுக்கான டயர்களையும் தயாரித்து வருகிறது. அத்துடன் விளையாட்டு உபகரணங்களையும் எம்ஆர்எஃப் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 4, 2026, 18:22 [IST]
English summary
Mrf to set up rs 5300 crore tyre manufacturing plant in tamil nadu check all details here
மேலும்... #mrf #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+