நாட்டில் இருக்கிற எல்லா பணக்காரர்களின் டார்க்கெட்டும் இப்போ இதுதான்! மார்ச் 17 வரை காத்திருக்கனும்!
ஆடி எஸ்.க்யூ8 (Audi SQ8), ஜெர்மனியை சேர்ந்த ஆடி நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள சொகுசு கார். மார்ச் 17இல் அறிமுகம் செய்யப்படும் இந்த ஆடி காருக்கான முன்பதிவுகள் சமீபத்தில்தான் ரூ.5 லட்சம் என்கிற டோக்கன் தொகையில் துவங்கப்பட்டது. புதிய ஆடி எஸ்.க்யூ8 காரில் என்னென்ன வசதிகளை நீங்கள் எதிர்பார்க்கலாம் என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
இந்த புதிய ஆடி காரை விருப்பப்படுவோர் ஆடி இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கம் அல்லது மைஆடி கனெக்ட் செயலி மூலமாக புக் செய்துக் கொள்ளலாம். ஆடி இந்தியா நிறுவனத்தின் கார்கள் வரிசையில் ஏற்கனவே விற்பனையில் உள்ள க்யூ8 மற்றும் ஆர்.எஸ் க்யூ8 கார்களுக்கு இடையில் இது நிலைநிறுத்தப்பட உள்ளது.

மார்ச் 17இல் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விற்பனைக்கு வரும் இந்த ஆடி காரில் வி8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. ஆர்.எஸ் க்யூ8 காரில் பொருத்தப்படும் என்ஜினின் ட்யூன் செய்யப்பட்ட வெர்சனான இது எஸ்.க்யூ8 காரில் அதிகப்பட்சமாக 507 எச்பி மற்றும் 770 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.
ஆர்.எஸ் க்யூ8 காரின் என்ஜின் பவர் உடன் ஒப்பிடுகையில் இது குறைவே. அதுவே, க்யூ8 காரை விட அதிகம். ஏனெனில், க்யூ8 காரில் பொருத்தப்படும் 3 லிட்டர் டர்போசார்ஜ்டு வி6 என்ஜின் அதிகப்பட்சமாக 340 எச்பி மற்றும் 500 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. புதிய எஸ்க்யூ8 காரில் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

ஆடியின் குவாட்ரோ ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்தின் வாயிலாக என்ஜினின் ஆற்றல் காரின் நான்கு சக்கரங்களுக்கும் செல்கிறது. புதிய எஸ்க்யூ8 காரில் 0-இல் இருந்து மணிக்கு 100கிமீ வேகத்தை 4.1 வினாடிகளில் எட்டிவிட முடியும். அதுவே, க்யூ8 காரில் 5.6 வினாடிகளிலும், ஆர்.எஸ் க்யூ8 காரில் 3.6 வினாடிகளிலும் எட்ட முடிகிறது.
அதிகப்பட்சமாக மணிக்கு 250கிமீ வேகத்தை எட்டக்கூடிய புதிய எஸ்.க்யூ8 காரில் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன், ரியர்-வீல் ஸ்டீயரிங் சக்கரம் உள்ளிட்டவை உள்ளன. மேலும், ஆடியின் எஸ் ஸ்போர்ட்டின் மூலம் சிவப்பு நிற பிரேக் காலிபர்கள் மற்றும் கார் ஒருபக்கமாக சாய்வதை தடுக்கும் வசதி ஆகியவற்றையும் புதிய எஸ்க்யூ8 பெற்றுள்ளது.
தோற்றத்தில் க்யூ8 போன்று கூபே-எஸ்யூவி ஸ்டைலில் இருந்தாலும், புதிய எஸ்க்யூ8 காரின் முன்பக்க பம்பரில் பெரிய ஏர் இண்டேக்குகள், எஸ் பேட்ஜ் மற்றும் குவாட் எக்ஸாஸ்ட் குழாய்கள் உள்ளிட்டவை பிரத்யேகமாக உள்ளன. மேலும், மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்களும் ஸ்டாண்டர்ட் அம்சமாக இந்த காரில் கிடைக்கும்.
காருக்கு உள்ளே டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கு 12.3 இன்ச்சில் இரட்டை ஸ்க்ரீன் செட்-அப் உள்ளிட்டவை டாஷ்போர்டில் வழங்கப்பட்டுள்ளன. உட்புற கேபின் முழுவதும் அல்காண்ட்ரா மற்றும் லெதரால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இருக்கைகளில் எஸ் என்கிற பேட்ஜ் பொறிக்கப்பட்டுள்ளது. பனோராமிக் சன்ரூஃப், ஹெட்-அப் டிஸ்பிளே, மல்டி-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவையும் இந்த காரில் இடம்பெறுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆடி நிறுவனம் அதன் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய எஸ்.க்யூ8 காரை அறிமுகப்படுத்துகிறது. இருப்பினும், ஆடியின் முதலாவது டார்க்கெட் பெரும் பணக்காரர்கள் தான். ஏனெனில், இந்த காரின் விலை எப்படியிருந்தாலும் ரூ.1.5 கோடிக்கு அதிகமாகவே நிர்ணயிக்கப்படும். ஏனெனில், ஏற்கனவே விற்பனையில் உள்ள க்யூ8 காரின் விலை ரூ.1.13 கோடி ஆகும்.


Click it and Unblock the Notifications








