செப்டம்பரில் அறிமுகமாகும் 4 புதிய கார்கள். கியா முதல் பிஎம்டபிள்யூ வரை...!!

இந்திய கார் சந்தையைப் பொறுத்தவரை செப்டம்பர் மாதம் எப்போதுமே மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. பண்டிகைக் கால விற்பனை தொடங்குவதற்கு முன்பாக, அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் புதிய கார்களுடன் வாடிக்கையாளர்களை கவர்வதற்கான திட்டங்களுடன் வரிந்து கட்டி நிற்கின்றன. இந்த நிலையில், வரும் செப்டம்பரிலும் வெவ்வேறு விலைப் பிரிவுகளில் பல புதிய கார்கள் களமிறங்குகின்றன.

இதில் பிரீமியம் எஸ்யூவி முதல் மாஸ் மார்க்கெட் ஹேட்ச்பேக் மற்றும் சொகுசு செடான் கார்கள் வரை இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், வரும் செப்டம்பரில் உறுதி செய்யப்பட்ட 4 புதிய கார் மாடல்கள் குறித்த விபரங்களை தொடர்ந்து காணலாம். இது புதிய கார் வாங்குவோருக்கு ஏதுவானதாக இருக்கும்.

Kia Sorento

1. கியா சொரெண்டோ

செப்டம்பர் மாதத்தின் முதல் கியா சொரெண்டோ கார் வர இருக்கிறது. வரும் செப்டம்பர் 4ம் தேதி இந்த புதிய சொரெண்டோ கார் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதை கியா உறுதி செய்துள்ளது. மூன்று வரிசை இருக்கைகளுடன் வரும் சொரெண்டோ, இந்தியாவில் கியா அறிமுகப்படுத்தும் முதல் ஹைப்ரிட் மாடல் என்ற சிறப்பையும் பெறுகிறது.

Also Read

இந்த காரில் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் ஸ்ட்ராங் ஹைப்ரிட் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என இரண்டு பவர்டிரெயின் ஆப்ஷன்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஹைப்ரிட் பதிப்பில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் இடம்பெறும். மேலும், இந்த காரில் ADAS, 360 டிகிரி கேமரா உள்ளிட்ட வசதிகளும் கிடைக்கும்.

2. மாருதி பலேனோ ஃபேஸ்லிஃப்ட்

வரும் செப்டம்பர் 5ம் தேதி பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் மாருதி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகமாக உள்ளது. தற்போதைய பலேனோவுடன் ஒப்பிடும்போது புதிய வடிவமைப்பு மற்றும் கூடுதல் தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் வர உள்ளது. வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும்.

Also Read

அதேபோன்று, இன்டீரியர் மற்றும் கூடுதல் கனெக்டட் வசதிகளும், பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெறுகின்றன. முக்கிய மாற்றமாக 3 சிலிண்டர் கொண்ட பெட்ரோல் எஞ்சின் மற்றும் சிஎன்ஜி எரிபொருளில் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு முக்கியமானதாக இருக்கும் என தெரிகிறது.

3. பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட்

வரும் செப்டம்பர் 11ம் தேதி சொகுசு கார் பிரிவில் பிஎம்டபிள்யூ தனது 7 சீரிஸ் செடான் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது. புதிய 7 சீரிஸில் புதுப்பிக்கப்பட்ட முன்பக்க வடிவமைப்பு, இலுமினேட்டட் கிட்னி கிரில் அமைப்பு, ஸ்பிளிட் எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் புதிய பனோரமிக் ஐடிரைவ் தொழில்நுட்பம் உள்ளிட்ட மாற்றங்கள் இடம்பெறுகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் பவர்டிரெயின்களிலும் மாற்றங்களுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

4. BMW i7 ஃபேஸ்லிஃப்ட்

அதே செப்டம்பர் 11ந் தேதி BMW i7 ஃபேஸ்லிஃப்ட் எலெக்ட்ரிக் காரும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த காரில் புதிய 112.4kWh பேட்டரி, மேம்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார், டிரான்ஸ்மிஷன் அமைப்பு மற்றும் புதிய கேபின் தொழில்நுட்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, ஐ7 50 மாடலில் எக்ஸ்டிரைவ் என்ற ஆல்-வீல்-டிரைவ் வசதி வழங்கப்படுவது முக்கிய மாற்றங்களில் ஒன்றாக இருக்கும்.

பிஎம்டபிள்யூ i5 LWB, புதிய ஹூண்டாய் எஸ்யூவி உள்ளிட்ட சில மாடல்கள் செப்டம்பர் மாதத்திற்கான எதிர்பார்ப்பு பட்டியலில் இருந்தாலும், அவற்றுக்கான உறுதியான அறிமுகத் தேதியை கார் நிறுவனங்கள் அறிவிக்கவில்லை. எனினும், மேலும் சில புதிய கார்கள் செப்டம்பர்-அக்டோபர் பட்டியலில் வெகுவிரைவில் இணையும் என்று தெரிகிறது.

Article Published On: Sunday, August 30, 2026, 11:08 [IST]
English summary
New car launches september 2026 kia sorento maruti baleno facelift bmw 7 series
மேலும்... #maruti suzuki #bmw #kia motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out