மே மாதம் வெளியாகும் புதிய கார் மாடல்கள்.. வித விதமா ரக ரகமா கார்களை வெளியிடும் நிறுவனங்கள்!

ஏப்ரல் மாதம் இந்தியாவில் பல்வேறு புதிய கார் மாடல்களின் வெளியீடுகளைப் பார்த்தோம். வின்ஃபாஸ்ட் VF MPV 7, ஃபோக்ஸ்வாகன் டைகூன் ஃபேஸ்லிப்ட், டெஸ்லா மாடல் Y L, மெர்சிடீஸ் CLA EV உள்ளிட்ட பல்வேறு கார்கள் ஏப்ரல் மாதம் அணிவகுத்தன. மே மாதமும் அவ்வாறே பல்வேறு புதிய கார் மாடல்கள் வெளியீட்டிற்காக அணிவகுத்துக் காத்திருக்கின்றன. அவை என்னென்ன கார் மாடல்கள் என்பதைப் பார்க்கலாம்.

2026 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிப்ட் (2026 Honda City Facelift)

இந்த மே மாதம் இரண்டு கார்களை வெளியிடுகிறது ஹோண்டா. அதில் ஒன்று தற்போது விற்பனையில் இருக்கும் சிட்டி செடானின் ஃபேஸ்லிப்ட் வடிவம். தற்போதிருக்கும் ஐந்தாம் தலைமுறை சிட்டி மாடலுக்கான இரண்டாவது ஃபேஸ்லிப்ட் அப்டேட்டாக இது வந்தமையவிருக்கிறது. மே 22ம் தேதியன்று இந்த மேம்பட்ட சிட்டி மாடலின் வெளியீடு இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Honda City

புதிய ஃபேஸ்லிப்டில் டிசைன் வகையில் சின்னச் சின்ன மேம்பாடுகள் மட்டும் செய்யப்பட்டிருக்கும். காரின் உட்புறம் வசதிகளிலேயே ஹோண்டா கூடுதல் கவனம் செலுத்தியிருக்கும். தற்போது விற்பனையில் இருக்கும் மற்ற மிட்-சைஸ் செடான் மாடல்களுடன் போட்டியிடும் வகையில் புதிய வசதிகளை சிட்டி ஃபேஸ்லிப்டில் ஹோண்டா கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெக்கானிக்கலாக இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸில் எந்த மாற்றமும் இருக்காது.

ஹோண்டா ZR-V (Honda ZR-V)

சிட்டி ஃபேஸ்லிப்ட் வெளியாகும் அதே மே 22ம் தேதியன்று ஹோண்டா வெளியிடவிருக்கும் புதிய ப்ரீமியம் எஸ்யூவி இந்த ZR-V. ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சத்திற்குள்ளான விலையில் ப்ரீமியமான வசதிகள் கொண்ட எஸ்யூவியாக, CBU முறையில் முழுவதுமாக இறக்குமதி செய்யப்பட்டு இந்த ZR-V எஸ்யூவியை வெளியிடவுள்ளது ஹோண்டா. அந்நிறுவனத்தின் பிராண்டு வேல்யூவை உயர்த்துவதற்காக இந்த எஸ்யூவியை வெளியிட ஹோண்டா திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

MG Majestor

எம்ஜி மெஜஸ்டர் (MG Majestor)

தற்போது தாங்கள் விற்பனை செய்து வகும் கிளாஸ்டர் எஸ்யூவிக்கு மாற்றாக மெஜஸ்டர் என்ற புதிய ஃபுல் சைஸ் எஸ்யூவி மாடலை இந்த மே மாதத்தின் இரண்டாம் வாரத்தில் வெளியிடவுள்ளது எம்ஜி மோட்டார். டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு நேரடிப் போட்டியாளராக இந்த மெஜஸ்டர் எஸ்யூவி களமிறங்குகிறது. பிப்ரவரி மாதமே இந்த எஸ்யூவியை இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

6/7 சீட்டர் எஸ்யூவியாக, இரண்டு 12.4 இன்ச ஸ்கிரீன்கள், பனோரமிக் சன்ரூஃப், 12 ஸ்பீக்கர்கள் கொண்ட JBL சவுண்டு சிஸ்டம், 3 ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், டூயல் வயர்லெஸ் சார்ஜர்கள், பவர்டு டெயில்கேட், 64 நிறங்கள் கொண்ட ஆம்பியன்ட் லைட்டிங் உள்ளிட்ட மேம்பட்ட அம்சங்களுடன் ரூ.40 லட்சம் முதல் ரூ.45 லட்சத்திற்குள்ளான விலையில் இந்தப் புதிய ஃபுல் சைஸ் எஸ்யூவி இந்தியாவில் வெளியிடப்படவுள்ளது.

டாடா சியரா EV (Tata Sierra EV)

கடந்தாண்டு இறுதியில் டாடா வெளியிட்ட மிட்-சைஸ் எஸ்யூவி மாடலான சியராவின் எலெக்ட்ரிக் வடிவமாக புதிய சியரா எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளியிடப்படவிருக்கிறது. இந்த மே மாதம் மூன்றாம் வாரத்தில் புதிய சியரா EV காரை டாடா மோட்டார்ஸ் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டாடாவின் எலெக்ட்ரிக் லைன்-அப்பில் ஃப்ளாக்ஷிப் காராக விற்பனையாகி வரும் ஹேரியர் EV-க்கு சற்று கீழே இந்த சியரா EV-யை டாடா பிளேஸ் செய்யவுள்ளது.

ட்ரிபிள் ஸ்கிரீன் செட்டப், பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட் செய்யப்பட்ட சீட்கள், ப்ரீமியம் ஆடியோ சிஸ்டம் மற்றும் டிரைவ் மோடுகள் ஆகிய வசதிகளை இந்த சியரா EV கொண்டிருக்கும் எனத் தெரிகிறது. ஹேரியர் EV-யைப் போலவே இந்த சியரா EV-யிலும் ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் தேர்வுகளை டாடா கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.20 லட்சத்திற்குள்ளான தொடக்க விலையில் இந்த எலெக்ட்ரிக் காரை நாம் எதிர்பார்க்கலாம்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் எபெல்லா (Toyota Urban Cruider Ebella)

இந்த 2026ம் ஆண்டு ஜனவரியில் தான் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலினை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது டொயோட்டா. மாருதி சுஸூகி விற்பனை செய்து வரும் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலான e விட்டாராவின் ரீபேட்ஜ்டு மாடல் தான் இந்த எபெல்லா. மே மாதம் நான்காம் வாரத்தில் டொயோட்டா இந்தியாவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சுஸூகி e-விட்டாராவில் கொடுக்கப்பட்டிருக்கும் அதே வசதிகளுடன், அதனை விடக் கொஞ்சம் மட்டும் கூடுதலான விலையில் இந்த எபெல்லா வெளியாகும்.

ஸ்கோடா கோடியாக் RS (Skoda Kodiaq RS)

கடந்தாண்டு தான் மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை கோடியாக் எஸ்யூவி மாடலை இந்தியாவில் வெளியிட்டது ஸ்கோடா. தற்போது அதனைத் தொடர்ந்து மே மாதம் நான்காம் வாரத்தில் ஸ்போர்ட்டியான கோடியாக் RS மாடலை வெளியிடத் தயாராகி வருகிறது. இதுதான் ஸ்கோடா இந்தியாவில் வெளியிடும் முதல் RS பேட்ஜ் கொண்ட எஸ்யூவி மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கோடியாக் RS மாடலின் சிறப்பம்சமே அதன் அதிக பெர்ஃபாமன்ஸ் கொண்ட பவர்ட்ரெயின் தான். 265 hp பவர் மற்றும் 400 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட E888 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை இந்தக் காரில் ஸ்கோடா கொடுக்கவுள்ளது. இது ஸ்டாண்டர்டான கோடியாக் மாடலின் இன்ஜின் உற்பத்தி செய்வதை விட 60 hp கூடுதல் பவர் மற்றும் 80 Nm கூடுதல் டார்க்காகும்.

BMW M440i கன்வர்டிபிள்

4 சீரிஸ் கூபே மாடலில், ஃபோல்டிங் ஃபேப்ரிங் ரூஃபைக் கொடுத்தால், அது தான் BMW M440i கன்வர்டிபிள் கார். இந்தில் 18 நொடிகளில் விரிந்து/ மடங்கும் வகையிலான ஃபேப்ரிக் ரூஃபைக் கொடுக்கவுள்ளது BMW. அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கும் இந்தக் காரில், 3.0 லிட்டர் B58 டர்போ பெட்போல் ஸ்ட்ரெய்ட்-சிக்ஸ் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பவர்ஃபுல்லான இன்ஜினானது 374 hp பவர் மற்றும் 500 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. மேலே குறிப்பிட்டிருக்கும் அதிகபட்ச வேகம் என்பது எலெக்ட்ரானிக்கலாகக் கட்டுப்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பவர்ஃபுல்லான சொகுசு காரை இந்த மே மாதத்தின் நான்காம் வாரத்தில் இந்தியாவில் வெளியிட BMW திட்டமிட்டிருப்பதாகத் தகவல்.

மினி கண்ட்ரிமேன் C (Mini Countryman C)

BMW குழுமத்தைச் சேர்ந்த மினியின் இந்தப் புதிய காரும் மே மாதத்தின் நான்காம் வாரமே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படவிருக்கும் இந்த பெட்ரோல் எஸ்யூவிக்கான முன்பதிவை ஏற்கனவே மினி தொடங்கிவிட்டது. வழக்கமாக மினி கார்களில் இடம்பெறும், வட்ட வடிவ OLED டிஸ்பிளே, ஸ்டீயரிங் மவுண்ட்ட கண்ட்ரோல்கள், ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் ஆகிய அம்சங்களை இந்த கண்ட்ரிமேன் C-யிலும் நாம் எதிர்பார்க்கலாம்.

இந்தக் காரில் 1.5 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினைக் கொடுத்துள்ளது மினி. 136 hp பவர் மற்றும் 230 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் இந்த இன்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுவதால் சற்று குறைவான விலையிலேயே இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் வெளியீட்டை நாம் எதிர்பார்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த மே மாதம் குறைவான விலையிலான கார்களின் வெளியீடு எதுவும் இல்லை. மிட்-சைஸ் பிரிவில் தொடங்கிய நிறைய கார்கள் வெளியிடப்படவுள்ளன. எனவே ரூ.10 லட்சத்திற்கு மேலான விலையிலேயே புதிய கார்களை நாம் எதிர்பார்க்க முடியும். நாம் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இரண்டு எலெக்ட்ரிக் கார்களின் வெளியீடு இந்த மாதம் இருக்கிறது. இவை தான் இந்த மே மாதம் அதிகம் பேசப்படும் கார்களாகவும் இருக்கும் எனத் தெரிகிறது.

Article Published On: Friday, May 1, 2026, 12:03 [IST]
English summary
New car models to be launched in may 2026 check all car details here
மேலும்... #cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+