ரூ.6,000 மாதத் தவணையில் வாங்கக்கூடிய புதிய கார்கள்!!

பண்டிகை காலம் வந்துவிட்டாலே பலருக்கு புதிய கார் கனவு மனதில் அல்லாட ஆரம்பித்துவிடும். ஆனால், பட்ஜெட் குறித்த கவலை உள்ளிட்ட பிரச்னைகளால் கார் கனவு திட்டம் தொடர்ந்து தள்ளிப்போடும் நிலை உள்ளது. இந்த நிலையில், புதிய கார் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதிக முன்பணம் செலுத்துவதும், மாதந்தோறும் பெரிய தொகையைத் தவணையாகக் கட்டுவதும் சவாலாக இருக்கிறது. குறிப்பாக, முதல் முறையாக கார் வாங்குபவர்கள் குறைந்த முன்பணத்தில், தங்களது மாத வருமானத்திற்குள் கட்டுப்படியாகும் தவணையில் கார் வாங்கவே விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஏற்ற பட்ஜெட் விலையில் கிடைக்கும் சில புதிய கார்களைப் பற்றிப் பார்க்கலாம்.

உங்கள் கையில் ரூ.75,000 முன்பணம் வைத்துக்கொண்டு, மாதம் ரூ.7,000க்குள் தவணை செலுத்தினால் சென்னையில் எந்தெந்த கார்களை வாங்க முடியும்? என்பதை தொடர்ந்து பார்க்கலாம். இதற்காக ஆண்டுக்கு 9.5 சதவீத வட்டி, 84 மாதங்கள் அதாவது 7 ஆண்டுகள் கடன் திருப்பி செலுத்தும் காலம் எனக் கணக்கிட்டுள்ளோம். இந்தப் பட்டியலில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ, ஆல்டோ கே10 ஆகிய இரண்டு கார்களைத் தேர்வு செய்ய முடியும். இன்னும் கொஞ்சம் பட்ஜெட்டை உயர்த்தினால் கூடுதல் தேர்வுகளும் கிடைக்கும்.

Maruti S Presso

1. மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ

குறைந்த விலையில் புதிய கார் வாங்க விரும்புபவர்களுக்கு மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ நல்ல தேர்வாக இருக்கிறது. உயரமான வடிவமைப்பு, அடக்கமான அளவு, நகரப் போக்குவரத்தில் எளிதாக ஓட்டும் வசதி ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக கூறலாம். தினசரி அலுவலகப் பயணம், ஷாப்பிக் செல்வதற்கு என சிறிய குடும்பத்தின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இந்தக் கார் பொருத்தமாக இருக்கும்.

இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இது 66 எச்பி பவரையும், 89 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. சென்னையில் அடிப்படை STD (O) வேரியண்ட்டின் ஆன்ரோடு விலை ரூ.4.30 லட்சமாக உள்ளது. ரூ.75,000 முன்பணம் செலுத்திய பிறகு ரூ.3.55 லட்சம் கடன் தேவைப்படும். 84 மாதங்களுக்கு 9.5 சதவீத வட்டியில் மாதத் தவணை சுமார்ரூ.5,802 ஆக இருக்கும். இந்தக் கணக்கீட்டின்படி மாதம் ரூ.6,000க்கும் குறைவாகவே தவணை செலுத்தும் வாய்ப்பை பெற முடியும். ஆனால், உங்களது சம்பளம், தகுதி, நிபந்தனைகளின்படி இது பொருந்துமா என்பதை ஷோரூமில் தீர விசாரித்துக் கொள்வது அவசியம்.

Also Read

2. மாருதி சுஸுகி ஆல்டோ கே10

மாருதி ஆல்டோ கே10 இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கும் பிரபலமான சிறிய கார்களில் ஒன்றாக உள்ளது. குறுகலான சாலைகளில் ஓட்டுவதற்கும், பார்க்கிங் செய்வதற்கும் ஏற்ற அடக்கமான அளவுகளைக் கொண்டுள்ளது. முதல் முறையாக கார் வாங்குபவர்கள் மட்டுமின்றி, வீட்டில் இரண்டாவது கார் தேவைப்படுபவர்களும் இந்த மாடலைப் பரிசீலிக்கலாம். எளிமையான பயன்பாடு மற்றும் குறைவான பராமரிப்புச் செலவு ஆகியவற்றை எதிர்பார்ப்பவர்களுக்கு இது ஏற்ற தேர்வாக இருக்கும்.

இதில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெற்றுள்ளது. இது 66 எச்பி பவரையும், 89 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. சென்னையில் அடிப்படை STD (O) வேரியண்ட்டின் ஆன்ரோடு விலை ரூ.4.58 லட்சமாக உள்ளது. ரூ.75,000 முன்பணம் செலுத்தினால் ரூ.3.83 லட்சம் கடன் தேவைப்படும். 84 மாதங்கள், 9.5 சதவீத வட்டி என்ற கணக்கில் மாதத் தவணை சுமார்ரூ.6,260 ஆக இருக்கும். அதாவது, மாதம் ரூ.7,000க்குள் இந்தக் காரை வாங்கும் வாய்ப்பு இருக்கிறது.

Renault KWID

3. ரெனால்ட் க்விட்

சிறிய காராக இருந்தாலும் எஸ்யூவி போன்ற தோற்றத்தை விரும்புபவர்களுக்கு ரெனோ க்விட் மற்றொரு தேர்வாக இருக்கிறது. இதன் முன்புற வடிவமைப்பு, கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் நகரப் பயணத்திற்கேற்ற அளவுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. சிறிய குடும்பத்துடன் அன்றாடப் பயணங்களை மேற்கொள்வதற்கும், அவ்வப்போது வெளியூர் செல்வதற்கும் இதைப் பரிசீலிக்கலாம்.

ரெனோ க்விட் காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இது சுமார் 67 எச்பி பவரையும், 91 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. சென்னையில் அடிப்படை வேரியண்ட்டின் ஆன்ரோடு விலை ரூ.5.28 லட்சமாக உள்ளது. ரூ.75,000 முன்பணத்திற்குப் பிறகு ரூ.4.53 லட்சம் கடன் தேவைப்படும். இதற்கான மாதத் தவணை சுமார்ரூ.7,404 ஆக இருக்கும். எனவே, ரூ.7,000 வரம்பைவிட மாதம் சற்றே கூடுதலாகச் செலுத்த வேண்டும். முன்பணத்தை சுமார் ரூ.1 லட்சமாக உயர்த்தினால், மாதத் தவணையை ரூ.7,000க்குள் கொண்டுவர முடியும்.

Also Read

4. மாருதி சுஸுகி செலிரியோ

குறைந்த எரிபொருள் செலவில் தினசரி அதிக தூரம் பயணிக்க விரும்புபவர்களுக்கு மாருதி சுஸுகி செலிரியோ காரை பரிசீலிக்கலாம். ஆல்டோ கே10 காரைவிட பெரிய கேபின், 313 லிட்டர் பூட் வசதி ஆகியவை இதன் கூடுதல் சிறப்புகளாக உள்ளன. குடும்பத்துடன் பயணம் செய்வதற்கும், அலுவலகப் பயன்பாட்டிற்கும் ஏற்ற ஹேட்ச்பேக் காராக இது விளங்குகிறது.

செலிரியோவில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இடம்பெற்றுள்ளது. இது சுமார் 66 எச்பி பவரையும், 89 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. சென்னையில் அடிப்படை LXi வேரியண்ட்டின் ஆன்ரோடு விலை சுமார் ரூ.5.71 லட்சமாக உள்ளது. ரூ.75,000 முன்பணம் செலுத்திய பிறகு ரூ.4.96 லட்சம் கடன் தேவைப்படும். 84 மாதங்கள், 9.5 சதவீத வட்டி என்ற கணக்கில் மாதத் தவணை சுமார்ரூ.8,107 ஆக இருக்கும். ரூ.7,000 வரம்பை விட மாதம் ரூ.1,107 கூடுதலாகச் செலுத்த வேண்டும். இந்த மாதத் தவணை சுமையை சற்று குறைக்க விரும்பினால் முன்பணத்தை சுமார் ரூ.1.40 லட்சமாக உயர்த்த வேண்டி இருக்கும். ரீசேல் மதிப்புடன் ஆல்ரவுண்டர் மாடலாக கூறலாம்.

5. டாடா டியாகோ

குறைந்த விலையில் குடும்பப் பயன்பாட்டிற்கான கார் வாங்க விரும்புபவர்கள் டாடா டியாகோவும் சிறந்த தேர்வாக பரிசீலிக்கலாம். இதன் கேபின் வசதி, வடிவமைப்பு மற்றும் நகரப் பயணத்திற்கேற்ற நடைமுறைப் பயன்பாடு ஆகியவை கவனிக்கத்தக்க அம்சங்களாக உள்லன. டாடா காரைத் தேர்வு செய்யும் முன், குறிப்பாக அடிப்படை வேரியண்ட்டில் கிடைக்கும் பாதுகாப்பு வசதிகள் மற்றும் உபகரணங்களை டீலரிடம் சரிபார்ப்பது நல்லது.

டியாகோ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இது சுமார் 85 எச்பி பவரையும், 113 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. சென்னையில் Smart அடிப்படை வேரியண்ட்டின் ஆன்ரோடு விலை ரூ.5.55 லட்சமாக உள்ளது. ரூ.75,000 முன்பணம் செலுத்தினால் ரூ.4.80 லட்சம் கடன் தேவைப்படும். இதற்கான மாதத் தவணை சுமார்ரூ.7,845 ஆக இருக்கும். எனவே, ரூ.7,000 மாதத் தவணை இலக்கை விட சுமார் ரூ.845 கூடுதலாகச் செலுத்த வேண்டும். முன்பணத்தை சுமார் ரூ.1.30 லட்சமாக உயர்த்தினால் மாதத் தவணையை ரூ.7,000க்குள் கொண்டுவர முடியும்.

Maruti Wagon R

கொஞ்சம் பட்ஜெட் கூட்டினால் மாருதி வேகன்ஆர்!

சிறிய காரில் கூடுதல் இடவசதி வேண்டும் என்று நினைப்பவர்கள் மாருதி சுஸுகி வேகன்ஆர் காரையும் பரிசீலிக்கலாம். இதன் உயரமான வடிவமைப்பு, கேபினில் கிடைக்கும் இடவசதி மற்றும் குடும்பப் பயன்பாட்டிற்கு ஏற்ற அமைப்பு ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள். குறிப்பாக, பின்புற இருக்கையில் பயணிப்பவர்களுக்கு கூடுதல் இடம் தேவைப்படும் குடும்பங்களுக்கு இது ஒரு மாற்றுத் தேர்வாக இருக்கும்.

வேகன்ஆர் காரின் LXi 1.0 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்டின் சென்னை ஆன்ரோடு விலை சுமார் ரூ.5.87 லட்சமாக உள்ளது. ரூ.75,000 முன்பணம் செலுத்தினால் ரூ.5.12 லட்சம் கடன் தேவைப்படும். 84 மாதங்கள், 9.5 சதவீத வட்டி என்ற கணக்கில் மாதத் தவணை ரூ.8,368 ஆக இருக்கும். மாதம் ரூ.7,000க்குள் தவணையை வைத்திருக்க விரும்பினால், முன்பணத்தை சுமார் ரூ.1.60 லட்சமாக உயர்த்த வேண்டியிருக்கும்.

எந்தக் காரைத் தேர்வு செய்யலாம்?

மாதம் ரூ.6,000க்குள் தவணை செலுத்த வேண்டும் என்பதே முக்கியம் என்றால், மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ மற்றும் ஆல்டோ கே10 ஆகியவை இந்தக் கணக்கீட்டில் பொருத்தமான தேர்வுகளாக இருக்கின்றன. இரண்டிலும் ரூ.75,000 முன்பணத்துடன் மாதத் தவணை ரூ.6,000க்கு அருகில் வருகிறது.

கொஞ்சம் கூடுதல் இடவசதி அல்லது வேறுபட்ட வடிவமைப்பு வேண்டும் என்றால் ரெனால்ட் க்விட், மாருதி செலிரியோ, டாடா டியாகோ ஆகியவற்றையும் பரிசீலிக்கலாம். ஆனால், இவற்றுக்கு மாதம் ரூ.7,000க்கு மேல் தவணை செலுத்த வேண்டும் அல்லது அதிக முன்பணம் செலுத்த வேண்டும். குறிப்பாக, க்விட் காருக்கு முன்பணத்தை ரூ.1 லட்சமாக உயர்த்தினால் ரூ.7,000 தவணை இலக்கை எட்ட முடியும்.

நாம் எப்போதுமே அதிக வசதிகள் கொண்ட டாப் வேரியண்ட்டுகளையே பரிந்துரைப்பது வழக்கம். ரீசேல் மதிப்பு, சிறந்த பயண அனுபவம் உள்ளிட்டவற்றை டாப் வேரியண்ட்டுகளில் மட்டுமே பெற முடியும். எனவே, கார் புக்கிங் செய்யும்போது அனைத்தையும் கணக்கீடு செய்து புக்கிங் செய்து கொள்வது அவசியம்.

ரூ.1,000 முதல் ரூ.1,500 கூடுதலாக மாதம் செலுத்த முடியும் என்றால், மிட் வேரியண்ட்டுகளை குறைந்தபட்சம் புக்கிங் செய்வது நீண்ட கால பயன்பாட்டில் சிறப்பான முடிவாக இருக்கும். அத்துடன், விலை குறைவான வேரியண்ட்டை வாங்கி அதில் சில வசதிகளை சேர்க்கும்போது 6 மாதங்கள் கழித்து நடைமுறையில் அந்த ஆக்சஸெரீகள் மூலமாக தேவையற்ற அதிர்வுகள், சப்தங்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளதையும் கருத்தில்கொள்வது அவசியம்.

குறிப்பு: இவை சென்னையின் ஆன்ரோடு விலை மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்ட கணக்கீடுகள். வங்கி வழங்கும் வட்டி விகிதம், காப்பீடு, பதிவு கட்டணம், டீலர் சலுகைகள் மற்றும் கடன் நிபந்தனைகளுக்கு ஏற்ப தொகைகள் மாறலாம். மேலும், அனைத்து வங்கிகளும் 84 மாதக் கடன் காலத்தை வழங்குவதில்லை. இறுதி முடிவெடுப்பதற்கு முன் டீலரிடம் ஆன்ரோடு விலையையும் வங்கியிடம் கடன் நிபந்தனைகளையும் உறுதிப்படுத்துவது அவசியம்.

Article Published On: Sunday, October 11, 2026, 11:35 [IST]
English summary
New cars 75000 down payment 6000 emi chennai s presso alto k10
மேலும்... #maruti suzuki #tata motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X