உருவம் மறைக்கப்பட்ட நிலையில் முதல் முறையாக தென்பட்ட கார்! இது மட்டும் வந்துச்சுனா டாடா, மாருதிலாம் காலி!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா சொனெட் (Kia Sonet). சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த சொனெட் காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் கியா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இந்த சூழலில் புதிய தலைமுறை கியா சொனெட் காரின் சோதனை ஓட்டம் இந்திய சாலைகளில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் சாலை சோதனையில் ஈடுபடுத்தப்பட்ட புதிய தலைமுறை கியா சொனெட் காரின் புகைப்படங்கள் AutoMatta இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. புதிய தலைமுறை கியா சொனெட் காரின் ஸ்பை படங்கள் வெளியாவது இதுவே முதல் முறை ஆகும்.

New-gen Kia Sonet

தற்போது விற்பனையில் உள்ள கியா சொனெட் காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டு வருகின்றன. அவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் ஆகியவை ஆகும்.

இந்த 3 இன்ஜின்களும், புதிய தலைமுறை கியா சொனெட் காரில் அப்படியே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் புதிய ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் ஒன்றும், புதிய தலைமுறை கியா சொனெட் காரில் வழங்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Kia Sonet Side Design

கியா நிறுவனம் இந்தியாவில் இந்தியாவிற்கே என்று பிரத்யேகமாக புதிய ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஒன்றை உருவாக்கி வருகிறது. எதிர்காலத்தில் விற்பனைக்கு வரவுள்ள ஹூண்டாய் (Hyundai) மற்றும் கியா நிறுவனங்களின் கார்களில் இந்த புதிய ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படவுள்ளது.

எனவே புதிய தலைமுறை கியா சொனெட் காரிலும் இந்த புதிய ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை நாம் எதிர்பார்க்கலாம். புதிய தலைமுறை கியா சொனெட் கார் அடுத்த ஆண்டு (2027) விற்பனைக்கு வரவுள்ளது. ஆனால் புதிய தலைமுறை கியா சொனெட் காரின் அறிமுகத்தில் இருந்தே இந்த புதிய ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுமா? என்பது உறுதியாக தெரியவில்லை.

ஒரு வேளை இந்த புதிய ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின், 2028ம் ஆண்டில் இருந்து கூட வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இன்ஜின் அப்டேட் தவிர பல்வேறு புதிய வசதிகளையும் புதிய தலைமுறை கியா சொனெட் காரில் நம்மால் எதிர்பார்க்க முடியும். குறிப்பாக பாதுகாப்பு வசதிகளில் (Safety Features) பல்வேறு அப்டேட்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது விற்பனையில் உள்ள கியா சொனெட் காரில் லெவல் 1 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் புதிய தலைமுறை கியா சொனெட் காரில் லெவல் 2 அடாஸ் பாதுகாப்பு தொகுப்பு வழங்கப்படும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய தலைமுறை கியா சொனெட் காரின் வருகை, டாடா நெக்ஸான் (Tata Nexon), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), ஸ்கோடா கைலக் (Skoda Kylaq), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) போன்ற கார்களுக்கு எல்லாம் விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என நாங்கள் கருதுகிறோம்.

Article Published On: Monday, May 11, 2026, 22:49 [IST]
English summary
New gen kia sonet spotted testing for the first time full details
மேலும்... #kia motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+