லாரியே மோதினாலும் பாறாங்கல்லு மாதிரி ஸ்ட்ராங்கா நிக்கும்! மாருதி சந்தையை பிடிக்க போகும் புத்தம் புதிய கார்!
இந்திய வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் (New-gen Renault Duster) கார், வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சுமார் 4 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு, ரெனால்ட் டஸ்டர் கார், இந்திய சந்தைக்கு மீண்டும் வந்துள்ளது.
இந்த சூழலில், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரை, பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்பு, சமீபத்தில் மோதல் சோதனைக்கு (Crash Test) உட்படுத்தியது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகி, வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளன. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

பாரத் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்று அசத்தியுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32க்கு 30.49 புள்ளிகளை புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் ஸ்கோர் செய்து அசத்தியுள்ளது.
அதே நேரத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 45 புள்ளிகளை புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் ஸ்கோர் செய்திருக்கிறது. இதன் மூலம் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என 2 தரப்பினருக்குமான பாதுகாப்பிலும் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது.

புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரில், 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், இபிடி உடன் ஏபிஎஸ், 360 டிகிரி கேமரா, பார்க்கிங் சென்சார்கள் மற்றும் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் (Safety Features) எல்லாம் வழங்கப்படுகின்றன.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பையும் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் கொண்டுள்ளது. புதிய தலைமுறை டஸ்டர் காரின் இந்த லெவல் 2 அடாஸ் பாதுகாப்பு தொகுப்பில் மொத்தம் 17 பாதுகாப்பு வசதிகளை ரெனால்ட் நிறுவனம் வழங்கியுள்ளது.
அத்துடன் இந்திய சந்தையில் லெவல் 2 அடாஸ் பாதுகாப்பு தொகுப்பை பெற்றுள்ள ரெனால்ட் நிறுவனத்தின் முதல் கார் புதிய தலைமுறை டஸ்டர்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்திய சந்தையில் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 10.49 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 18.69 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை அனைத்துமே ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos) மற்றும் டாடா சியரா (Tata Sierra) போன்ற கார்களுக்கு எல்லாம், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது எங்களுடைய கருத்து.


Click it and Unblock the Notifications








