மாருதியை கதிகலங்க வைத்த புதிய கார்... விலை இவ்ளோதான் இருக்குமா... மார்ச் மாதம் மார்க்கெட் அதிர போகுது...
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த 2026 ரெனால்ட் டஸ்டர் (2026 Renault Duster) கார், குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன.
அவை 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.8 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின்கள் ஆகும். இதில், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் 163 பிஎஸ் பவர் மற்றும் 280 என்எம் டார்க் திறன் ஆக உள்ளது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மறுபக்கம் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 100 பிஎஸ் பவர் மற்றும் 160 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜினின் பவர் அவுட்புட் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த விபரங்கள் தீபாவளி பண்டிகை சமயத்தில்தான் அறிவிக்கப்படும்.
அதே நேரத்தில் இந்த காரில் 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.1 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் ட்யூயல் ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம், தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டியரிங் வீல், லெதரேட் அப்ஹோல்ஸ்ட்ரி, பனரோமிக் சன்ரூஃப் மற்றும் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய முன் பக்க இருக்கைகள் போன்ற வசதிகளையும் 2026 ரெனால்ட் டஸ்டர் கார் கொண்டுள்ளது.
இவற்றுடன் பாதுகாப்பிற்காக (Safety) லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பின் கீழ் 17 வசதிகள், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் போன்ற வசதிகளையும், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கொண்டுள்ளது.
இந்த சூழலில் 2026 ரெனால்ட் டஸ்டர் காரின் கலர் ஆப்ஷன்கள் (Colour Options) தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி 2026 ரெனால்ட் டஸ்டர் கார், பியர்ல் ஒயிட், ஸ்டீல்த் பிளாக், மூன்லைட் சில்வர், ரிவர் ப்ளூ, சன்செட் ரெட் மற்றும் ஜேட் மவுன்டெயின் க்ரீன் ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
இதுதவிர 2026 ரெனால்ட் டஸ்டர் காரில் டெரகோட்டா ப்ரவுன் கலர் ஆப்ஷனும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கலர் ஆப்ஷன் தற்போது சர்வதேச சந்தைகளில் விற்பனையில் உள்ள ரெனால்ட் டஸ்டர் காரில் வழங்கப்படுகிறது. எனவே இந்தியாவிலும் இந்த கலர் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் வரும் மார்ச் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அப்போதுதான் இதன் விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும். இருப்பினும் வெறும் 10 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில்தான் 2026 ரெனால்ட் டஸ்டர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என நாங்கள் கருதுகிறோம். இந்த விலையில் வந்தால், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா, மாருதி சுஸுகி விக்டோரிஸ் போன்ற கார்களுக்கு எல்லாம், 2026 ரெனால்ட் டஸ்டர் கடுமையான சவாலை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








