ஒட்டுமொத்த இந்தியாவும் பல வருடங்களாக காத்து கொண்டிருந்த காரின் டெலிவரி தொடங்கியது! டாடா, மாருதிக்கு செக்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் (New-gen Renault Duster) கார் கடந்த மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் டெலிவரி (Delivery) பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரை குடும்பம் ஒன்று டெலிவரி எடுத்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் NarrusAutovlogs சேனலில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. டெலிவரி பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரை இனி இந்திய சாலைகளில் நாம் பார்க்க போகிறோம்.

புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரில் தற்போதைய நிலையில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன. அவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகும். ஆனால் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரில் மூன்றாவதாக ஒரு இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படவுள்ளது.
அது 1.8 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆகும். ஆனால் வரும் தீபாவளி பண்டிகை சமயத்தில்தான் இந்த இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படும். சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்களுடன் ஏராளமான அதிநவீன வசதிகளையும் (Features) புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் கொண்டுள்ளது.

இதில், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், 48 கலர் ஆம்பியண்ட் லைட்டிங் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
அத்துடன் லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் (Safety Features) புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் கொண்டுள்ளது.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 10.49 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 18.49 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
இந்திய சந்தையில் ரெனால்ட் டஸ்டர் கார் கடந்த 2012ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் 10 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது கடந்த 2022ம் ஆண்டில், ரெனால்ட் டஸ்டர் காரின் விற்பனை நிறுத்தப்பட்டது. மீண்டும் எப்போது விற்பனைக்கு வரும்? என வாடிக்கையாளர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில், சுமார் 4 வருட இடைவெளிக்கு பிறகு ரெனால்ட் டஸ்டர் கார் தற்போது மறுபடியும் விற்பனைக்கு வந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), டாடா சியரா (Tata Sierra), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) போன்ற கார்களுடன் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் விற்பனையில் போட்டியிடும்.
மேலும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), ஹோண்டா எலவேட் (Honda Elevate) மற்றும் எம்ஜி அஸ்டர் (MG Astor) போன்ற கார்களுக்கும், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் விற்பனையில் சவால் அளிக்கும். இதில், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் கார்களின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல்கள் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








