இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் திறக்கப்பட்ட ஷோரூம்! 2 நாள் தரிசனம் தரும் மாருதியின் எமன்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் (New-gen Renault Duster). இது மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த சில நாட்களுக்கு முன்புதான், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார், இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார், வரும் மார்ச் மாதம் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதே சமயம் இந்த காரின் டெலிவரி (Delivery) பணிகள் வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடங்கப்படவுள்ளன. இதற்கு இன்னும் குறுகிய காலம் மட்டுமே இருக்கும் நிலையில், சென்னையில் (Chennai) புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

New-gen Renault Duster

சென்னை அம்பத்தூர் எஸ்டேட் (Ambattur Estate) பகுதியில், ரெனால்ட் ஆர் ஸ்டோர் (Renault R Store) இயங்கி வருகிறது. ஆர் ஸ்டோர் என்பது, ரெனால்ட் டீலர்ஷிப்களின் சீரமைக்கப்பட்ட வெர்ஷன் ஆகும். அதாவது ரெனால்ட் நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டில் இருந்து தனது பழைய டீலர்ஷிப்களை எல்லாம், ஆர் ஸ்டோர்களாக அப்டேட் செய்து வருகிறது.

வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக பிரீமியமான லைட்கள் மற்றும் இருக்கைகள் போன்ற அம்சங்களை எல்லாம், இந்த ரெனால்ட் ஆர் ஸ்டோர்கள் கொண்டிருக்கும். தற்போது நாம் பேசி கொண்டுள்ள சென்னை அம்பத்தூர் எஸ்டேட் டீலர்ஷிப்தான், இந்தியாவிலேயே முதல் முறையாக ரெனால்ட் ஆர் ஸ்டோராக அப்டேட் செய்யப்பட்ட டீலர்ஷிப் ஆகும்.

New-gen Renault Duster Rear

கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம், இந்த ரெனால்ட் ஆர் ஸ்டோர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த சமயத்தில், இந்த டீலர்ஷிப் பத்திரிக்கை செய்திகளில் பெரிதாக பேசப்பட்டது. இது நடைபெற்று சுமார் 1 ஆண்டு கடந்துள்ள சூழலில் தற்போது மீண்டும் ஒரு முறை இந்த டீலர்ஷிப் தற்போது அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.

புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார்தான் இதற்கு காரணம். சென்னை அம்பத்தூர் எஸ்டேட் ரெனால்ட் ஆர் ஸ்டோர் டீலர்ஷிப்பில், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 14 (இன்று) மற்றும் பிப்ரவரி 15 (நாளை) ஆகிய 2 நாட்களும், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரை நீங்கள் அங்கு பார்வையிடலாம்.

காலை 9 மணியில் இருந்து நள்ளிரவு வரை, புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரை, வாடிக்கையாளர்கள் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் ஆரம்ப விலை வெறும் 10 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு, 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 10.1 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற வசதிகள் (Features)எல்லாம், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரில் வழங்கப்பட்டுள்ளன.

செயல்திறனை பொறுத்தவரையில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.8 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் என மொத்தம் 3 சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்களை (Engine Options), புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் வருகை, மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos) மற்றும் டாடா சியரா (Tata Sierra) போன்ற மிட்-சைஸ் எஸ்யூவி கார்களுக்கு எல்லாம் விற்பனையில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 14, 2026, 17:37 [IST]
English summary
New gen renault duster displayed in chennai r store check all details here
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+