மெகா டெலிவரி! ஒரே நாளில் இத்தனை கார்கள் விற்பனையா! மொத்த ஊரையும் மிரள விட்ட பிரபல நிறுவனத்தின் டீலர்!

ஃபிரான்ஸ் (France) நாட்டை சேர்ந்த ரெனால்ட் (Renault) நிறுவனம் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக மாறியதற்கு முக்கிய காரணம் எது என கேட்டால், ரெனால்ட் டஸ்டர் (Renault Duster) என தயங்காமல் சொல்ல முடியும். எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த இந்த கார் சுமார் 4 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு இந்திய சந்தைக்கு தற்போது புதிய அவதாரத்தில் மீண்டும் வந்துள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் டெலிவரி (Delivery) பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

New-gen Renault Duster Mega Delivery Event

இந்த சூழலில் ரெனால்ட் நிறுவனத்தின் டீலர்ஷிப் ஒன்று ஒரே நேரத்தில் 5 புத்தம் புதிய புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார்களை, வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்த வைரல் வீடியோ (Viral Video) ஒன்று, சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. Renault SUJA என்ற யூடியூப் பக்கத்தில் இந்த வைரல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இதில், வாடிக்கையாளர்கள் மிகவும் உற்சாகமாக புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார்களை டெலிவரி எடுத்து செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரில் தற்போதைய நிலையில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) மட்டுமே வழங்கப்படுகின்றன.

New-gen Renault Duster

இதில், 100 பிஎஸ் பவர் மற்றும் 160 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் (Gear Box Option) மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் மற்றொரு இன்ஜின் ஆப்ஷன் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகும்.

அதிகபட்சமாக 163 பிஎஸ் பவர் மற்றும் 280 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரில், 1.8 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படவுள்ளது.

1.4 kWh பேட்டரி (Battery) தொகுப்புடன் கூடிய இந்த ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின், வரும் தீபாவளி பண்டிகை சமயத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். இது அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடியதாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருவதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் இன்ஜின் ஆப்ஷன்கள் மட்டுமல்லாது, வசதிகளிலும் (Features) அசத்துகிறது. லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் போன்றவை எல்லாம் இந்த காரின் மிகவும் முக்கியமான வசதிகள் ஆகும்.

அத்துடன் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வென்டிலேஷன் வசதியுடன் கூடிய முன் பக்க இருக்கைகள் மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்ற வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் முக்கியமான அதிநவீன வசதிகளையும் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் கொண்டுள்ளது.

புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்பின் மோதல் சோதனையில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (5 Star Safety Rating) பெற்று அசத்தியுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் ஆரம்ப விலை வெறும் 10.49 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 18.69 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை அனைத்துமே ரெனால்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா சியரா, ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய எஸ்யூவி ரக கார்களுக்கு எல்லாம் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும். அத்துடன் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா மற்றும் மாருதி சுஸுகி விக்டோரிஸ் ஆகிய கார்களுக்கும் கூட இது நல்ல மாற்றுதான் என்பது எங்கள் கருத்து. முன்னதாக இந்த புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் மெகா டெலிவரி நிகழ்ச்சி குஜராத் மாநிலத்தில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 22, 2026, 15:35 [IST]
English summary
New gen renault duster mega delivery event in gujarat viral video check all details here
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+