விற்பனைக்கு வருவதற்கு முன்னரே விற்று தீர்ந்த கார்! இந்திய மக்கள் குடுத்த வரவேற்பை பார்த்து ஆடிப்போன மாருதி!

இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) செக்மெண்ட்டில், கடந்த 2012ம் ஆண்டில் இருந்து 2022ம் ஆண்டு வரை, சுமார் 10 ஆண்டு காலத்திற்கு விற்பனையில் ஆதிக்கம் செலுத்திய கார் ரெனால்ட் டஸ்டர் (Renault Duster). ஆனால் 2022ம் ஆண்டு, ரெனால்ட் டஸ்டர் காரின் விற்பனை நிறுத்தப்பட்டது.

இருப்பினும் சுமார் 4 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு, ரெனால்ட் டஸ்டர் கார், இந்திய சந்தைக்கு தற்போது மீண்டும் வந்துள்ளது. கடந்த ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்ட போதே, புதிய ரெனால்ட் ரெனால்ட் டஸ்டர் (New-gen Renault Duster) கார் அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது.

New-gen Renault Duster

அதாவது புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options), வசதிகள் (Features) போன்ற அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டன. அத்துடன் அந்த சமயத்திலேயே, புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காருக்கு, அதிகாரப்பூர்வமாக முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளையும் ரெனால்ட் நிறுவனம் தொடங்கியது.

இந்த சூழலில், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் நேற்று (மார்ச் 17) அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் விலை எவ்வளவு? என்பது நேற்றுதான் அறிவிக்கப்பட்டது. புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் உடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

New-gen Renault Duster

அவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.8 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் (1.8 லிட்டர் டர்போ பெட்ரோல் + 1.4 kWh பேட்டரி) ஆகியவை ஆகும். இதில், டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் பொருத்தப்பட்ட வேரியண்ட்களுக்கான விலைகளை மட்டுமே ரெனால்ட் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

அவற்றின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 10.49 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 18.49 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆனால் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட்களுக்கான விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த காரின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட்களுக்கான விலை எவ்வளவு? என்பது வரும் தீபாவளி பண்டிகை சமயத்தில்தான் அறிவிக்கப்படும். ஆனால் விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே, புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன.

அதாவது நடப்பு 2026ம் ஆண்டில் எவ்வளவு புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் கார்களை உற்பத்தி செய்யலாம் என்று ரெனால்ட் நிறுவனம் தரப்பில் முடிவு செய்யப்பட்டிருந்ததோ, அவை அனைத்தும் விலை அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. இதன் காரணமாக புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் வேரியண்ட்களுக்கான முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

எனவே புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் வேரியண்ட்களை தற்போது உங்களால் முன்பதிவு செய்ய முடியாது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாகவே, நடப்பு 2026ம் ஆண்டிற்கான அனைத்து புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் கார்களும் விற்று தீர்ந்திருப்பது, வாடிக்கையாளர்கள் மத்தியில் அதற்கு கிடைத்துள்ள மிகவும் பிரம்மாண்டமான வரவேற்பை காட்டுவதாகவே உள்ளது.

புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் வேரியண்ட்களுக்கான முன்பதிவு பணிகள் எப்போது மீண்டும் தொடங்கப்படும்? என உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் நடப்பு 2026ம் ஆண்டு முடிவடைதற்கு முன்னதாக இந்த பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என நாம் உறுதியாக நம்பலாம்.

ஆனால் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் பொருத்தப்பட்ட வேரியண்ட்களை நீங்கள் தொடர்ந்து எப்போது வேண்டுமானாலும் முன்பதிவு செய்து கொள்ள முடியும். அவற்றுக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகளை ரெனால்ட் இந்தியா நிறுவனம் நிறுத்தவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரில் லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு, 25.65 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 26.03 செமீ டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் என ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின், சிறப்பான செயல்திறன் உடன், நல்ல மைலேஜையும் வழங்கும். இதன் காரணமாகவே அவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டிருப்பதாக நாங்கள் கருதுகிறோம். புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 19 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை சுமார் 23 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம். இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் சமயத்தில்தான் அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் வருகை காரணமாக, இந்திய சந்தையில், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), டாடா சியரா (Tata Sierra), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) போன்ற கார்களின் விற்பனை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 18, 2026, 17:46 [IST]
English summary
New gen renault duster strong hybrid sold out bookings halted check all details here
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+