ஒட்டுமொத்த இந்தியாவையும் மிரள விடும் சென்னை! தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல... இந்தியாவுக்கே தலைநகரம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் (New-gen Renault Duster) கார், கடந்த மார்ச் மாத மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் எஸ்யூவி காரை ஏற்றுமதி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார், சென்னையில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

New-gen Renault Duster

எனவே வட சென்னையில் (North Chennai) உள்ள காமராஜர் துறைமுகத்தில் இருந்தே புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார்களை ரெனால்ட் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. முதற்கட்டமாக சென்னையில் இருந்து தென் ஆப்ரிக்காவிற்கு (South Africa) 750 புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. வரும் மாதங்களில் இங்கிருந்து இன்னும் உலகின் பல்வேறு நாடுகளுக்கும், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

ரெனால்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெனால்ட் குரூப் மாடுலர் பிளாட்பார்ம் அடிப்படையில் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள ரெனால்ட் நிறுவனத்தின் முதல் கார் என்ற பெருமை புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டருக்கு உள்ளது. இது பல்வேறு பவர்ட்ரெயின்களுக்கு சப்போர்ட் செய்ய கூடிய பிளாட்பார்ம் ஆகும்.

New-gen Renault Duster

அத்துடன் இந்திய சந்தையில் லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொழில்நுட்ப வசதியை கொண்டுள்ள ரெனால்ட் நிறுவனத்தின் முதல் கார் என்ற பெருமையும், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டருக்கு உள்ளது. இது இந்திய கார்களில் தற்போது வேகமாக பிரபலமடைந்து வரும் பல்வேறு பாதுகாப்பு வசதிகளின் தொகுப்பு ஆகும்.

இதுபோன்ற அதிநவீன பாதுகாப்பு வசதிகள் காரணமாக, பாரத் என்சிஏபி (Bharat NCAP) மோதல் சோதனைகளில் (Crash Tests), முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (5 Star Safety Rating), புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் பெற்றுள்ளது. செயல்திறனை பொறுத்தவரையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன.

கூடிய விரைவில் 1.8 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரில் வழங்கப்படவுள்ளது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை இந்திய சந்தையில் 10.49 லட்ச ரூபாயாக உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும் (Ex-showroom Price).

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரமாக சென்னை உள்ளது. இங்கிருந்து தென் ஆப்ரிக்காவிற்கு புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் ஏற்றுமதி பணிகள் தொடங்கப்பட்டிருப்பது சிறப்பான ஒரு விஷயம் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து. துறைமுகம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் மிகவும் சிறப்பாக இருப்பதால்தான், பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்கள் தொழிற்சாலையை சென்னையில் அமைத்துள்ளன.

Article Published On: Monday, June 22, 2026, 17:58 [IST]
English summary
New gen renault duster suv export begins from chennai port
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out