மார்ச் 31 வரையில் மட்டுமே நேரம் இருக்கு... புதிய ரெனால்ட் டஸ்டரை சலுகை விலையில் வாங்க எளிய வழி!
ரெனால்ட் (Renault) நிறுவனத்தில் இருந்து பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய தலைமுறை டஸ்டர் (Duster) கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.10.49 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள டஸ்டர் காரை விரைவாக சொந்தமாக்குவதற்கு ஆர்-பாஸ் (R-Pass) முறையை ரெனால்ட் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஆர்-பாஸ் முறையை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்பட்ட ரெனால்ட் கார்களுள் டஸ்டர் முக்கியமானது ஆகும். குறிப்பாக, இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு தேவை அதிகரித்த பிறகு டஸ்டர் காரை வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்தது. இருப்பினும், ஒருகட்டத்திற்கு மேல் விற்பனை குறைந்ததால் 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் டஸ்டரின் விற்பனையை ரெனால்ட் நிறுத்தியது.

ஏற்கனவே மார்க்கெட்டில் கவனம் ஈர்த்த ரெனால்ட் டஸ்டர் கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு பின் புத்துணர்ச்சியான தோற்றத்தில் வருவதினாலேயே இந்த காரின் அறிமுகத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவானது. இதனால், முதல் சில மாதங்களுக்கு அதிக பேர் புதிய டஸ்டர் காரை வாங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு மார்க்கெட்டிற்கு புதியதாக வரும் காரை எந்த அளவிற்கு விரைவாக முன்பதிவு செய்கிறோமோ அந்த அளவிற்கு விரைவாக டெலிவிரி பெறலாம்.
புக்கிங் செய்ய தாமதமாகினால் அதற்கேற்ப டெலிவிரி பெறுவதும் தாமதமாகும். ஆனால், புதிய டஸ்டர் காரை விரைவாக வாங்கிவிட வேண்டும் என விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கவலை ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக, ஆர்-பாஸ் முறையை ரெனால்ட் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஆர்-பாஸை பெற ரூ.21,000 செலுத்த வேண்டியிருக்கும்.

இந்த பாஸின் பலன் என்னவென்றால், ஆர்-பாஸ் வைத்திருப்பவர்களுக்கு புதிய டஸ்டர் கார் சலுகை விலையில் கிடைக்கும். அதாவது, புதிய டஸ்டர் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆனது ஆர்-பாஸ் இல்லாதவர்களுக்கு ரூ.10.49 லட்சம், ஆர்-பாஸ் வைத்திருப்பவர்களுக்கு ரூ.10.29 லட்சம் ஆகும். இவ்வாறு, ஆர்-பாஸ் கொண்டுள்ளவர்களுக்கு இந்த காரின் ஒவ்வொரு வேரியண்ட்டும் குறைந்த விலையில் கிடைக்கும்.
| Variant & Engine | Price (Lakh) | R Pass Price (Lakh) |
| Authentic TCe 100 MT | ₹10.49 | ₹10.29 |
| Evolution TCe 100 MT | ₹11.69 | ₹11.39 |
| Evolution TCe 160 MT | ₹12.99 | ₹12.69 |
| Evolution TCe 160 DCT | ₹14.49 | ₹13.99 |
| Techno TCe 100 MT | ₹13.49 | ₹13.19 |
| Techno TCe 160 MT | ₹14.49 | ₹14.19 |
| Techno TCe 160 DCT | ₹15.89 | ₹15.49 |
| Techno+ TCe 160 MT | ₹15.29 | ₹14.99 |
| Techno+ TCe 160 DCT | ₹16.69 | ₹16.29 |
| Iconic TCe 160 MT | ₹16.99 | ₹16.59 |
| Iconic TCe 160 DCT | ₹18.49 | ₹18.09 |
இந்த விலை குறைப்பானது ரூ.20,000-இல் இருந்து ரூ.50,000 வரையில் உள்ளது. இவ்வாறு கார் குறைந்த விலையில் கிடைப்பது மட்டுமில்லாமல், ஆர்-பாஸ் வைத்திருப்பவர்களுக்கு கார் விரைவாக டெலிவிரி (Delivery) செய்யப்படும். புதிய டஸ்டர் கார் டெலிவிரியில் ஆர்-பாஸ் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ரெனால்ட் தெரிவித்துள்ளது.
ஆர்-பாஸ் வாங்கிய பின்னர் கார் வாங்கவில்லை அல்லது அந்த திட்டத்தில் இருந்து பின்வாங்குகிறீர்கள் என்றால், ஆர்-பாஸுக்கு செலுத்திய ரூ.21,000 தொகை முழுமையாக சம்பந்தப்பட்டவருக்கு திரும்ப வழங்கப்படும் எனவும் ரெனால்ட் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த ஆர்-பாஸ் முறையானது மார்ச் 31ஆம் தேதி வரையில் மட்டுமே அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பப்படுவோர் புதிய ரெனால்ட் டஸ்டர் காரை ரெனால்ட்டின் இந்தியாவிற்கான அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கம் அல்லது அருகில் உள்ள ரெனால்ட் ஷோரூமுக்கு சென்று முன்பதிவு செய்யலாம். ஆன்லைனில் புக் செய்பவர்கள் காரின் வேரியண்ட், என்ஜின் மற்றும் கலர் ஆப்ஷன் உடன் அருகில் உள்ள அல்லது விருப்பமான ரெனால்ட் ஷோரூமை தேர்வு செய்துக் கொள்ளலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ரெனால்ட் டஸ்டர் காரில் ஆர்-பாஸ் முறையானது முழுக்க முழுக்க வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், அவ்வாறு ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாகவும் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆதலால், புதிய டஸ்டரை விரைவாக டெலிவிரி எடுத்து வீட்டிற்கு ஓட்டிச் செல்ல விரும்புபவர்கள் ஆர்-பாஸ் முறையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பாஸ் முறை குறித்த கூடுதல் விபரங்களுக்கு அருகில் ரெனால்ட் டீலர்ஷிப் ஷோரூமை அணுகவும்.


Click it and Unblock the Notifications








