கொம்பன் எறங்கீட்டான்! மாருதி, டாடாவை வெடவெடத்து போக வைத்த புதிய கார்! பிரான்ஸ் தயாரிப்பின் விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையில் ஒரு சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்து வந்த கார்களில் ஒன்று ரெனால்ட் டஸ்டர் (Renault Duster). ஆனால் இதன் விற்பனை கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இருப்பினும் ரெனால்ட் டஸ்டர் காரின் புதிய தலைமுறை (New-gen) மாடல், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வந்தன.

இதை நிரூபிக்கும் வகையில், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் சோதனை ஓட்டமும் தீவிரமாக நடைபெற்று வந்தது. அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட ஸ்பை புகைப்படங்கள் வெளியாகி, வாடிக்கையாளர்களின் ஆவலை தூண்டின. இந்த சூழலில், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார், ஜனவரி 26ம் தேதி (இன்று) குடியரசு தினத்தன்று (Republic Day) அறிமுகம் செய்யப்படும் என ரெனால்ட் நிறுவனம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

New-gen Renault Duster

அதன்படி புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் இன்று பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. செயல்திறனை பொறுத்தவரையில், 2 டர்போ பெட்ரோல் இன்ஜின்கள், 1 ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் என மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்களை (Engine Options), புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் பெற்றுள்ளது. அவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.8 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின்கள் ஆகும்.

வசதிகளை (Features) பொறுத்தவரையில், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.1 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், பனரோமிக் சன்ரூஃப், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் போன்ற அம்சங்களை எல்லாம் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கொண்டுள்ளது.

New-gen Renault Duster Rear

பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்திய சந்தையில் அடாஸ் பாதுகாப்பு தொகுப்பு வசதியை பெற்றுள்ள ரெனால்ட் நிறுவனத்தின் முதல் கார் புதிய தலைமுறை டஸ்டர்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இதுதவிர டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் போன்ற வசதிகளையும் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் பெற்றுள்ளது.

தற்போதைய நிலையில் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் பொது பார்வைக்கு மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் விலை எவ்வளவு? என்பது வரும் மார்ச் மாதம் அறிவிக்கப்படவுள்ளது. அனேகமாக புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 10 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டால், போட்டி மாடல்களுக்கு புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் மிக கடுமையான சவாலாக மாறும். அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 20 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 21 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, புக்கிங் செய்து கொள்ளலாம். அதே நேரத்தில் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொண்ட வேரியண்ட்களின் டெலிவரி (Deliveries) பணிகள் வரும் ஏப்ரல் மாதமும், ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் கொண்ட வேரியண்ட்களின் டெலிவரி பணிகள் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவும் தொடங்கப்படவுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் வருகை, இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில், போட்டியை கடுமையாக்கவுள்ளது. குறிப்பாக மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), டாடா சியரா (Tata Sierra), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) போன்ற கார்களுக்கு எல்லாம், விற்பனையில் கடும் நெருக்கடி ஏற்படலாம்.

அத்துடன் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), ஹோண்டா எலவேட் (Honda Elevate), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) மற்றும் எம்ஜி அஸ்டர் (MG Astor) போன்ற கார்களும், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனத்தின் தயாரிப்பான புதிய தலைமுறை டஸ்டர் காரின் வருகையால், விற்பனையில் நெருக்கடிகளை சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, January 26, 2026, 20:45 [IST]
English summary
New gen renault duster unveiled in india expected price safety features engine options
மேலும்... #renault #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+