வேட்டை தொடங்க போகுது... முரட்டுத்தனமான வண்டியின் டீசர் வீடியோவை வெளியிட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்த டொயோட்டா!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிக்-அப் டிரக்குகளில் ஒன்று டொயோட்டா ஹிலக்ஸ் (Toyota Hilux). இங்கு தற்போது விற்பனையில் இருப்பது டொயோட்டா ஹிலக்ஸ் பிக்-அப் டிரக்கின் 8வது தலைமுறை மாடல் ஆகும். இந்த சூழலில் ஹிலக்ஸ் பிக்-அப் டிரக்கின் 9வது தலைமுறை மாடலை டொயோட்டா நிறுவனம் வரும் ஜூலை 28ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், 9வது தலைமுறை டொயோட்டா ஹிலக்ஸ் பிக்-அப் டிரக்கின் அதிகாரப்பூர்வமான முதல் டீசர் வீடியோ (Teaser Video) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. டொயோட்டா இந்தியா நிறுவனத்தின் யூடியூப் (YouTube) பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த சிறிய டீசர் வீடியோவில், புதிய டொயோட்டா ஹிலக்ஸ் பிக்-அப் டிரக்கின் ஆஃப் ரோடு சாகச திறன்கள் சற்றே காட்டப்பட்டுள்ளன.

IMV லேடர்-ஃப்ரேம் பிளாட்பார்மின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் அடிப்படையில், புதிய டொயோட்டா ஹிலக்ஸ் பிக்-அப் டிரக் உருவாக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஸ் சிஸ்டம் போன்றவை எல்லாம் புதிய டொயோட்டா ஹிலக்ஸ் பிக்-அப் டிரக்கில் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போதைய மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே 2.8 லிட்டர் டீசல் இன்ஜின்தான், புதிய தலைமுறை மாடலிலும் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் டொயோட்டா நிறுவனம் புதிதாக மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இது நடக்குமா? என்பதை நாம் கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்க முடியும். இருப்பினும் தற்போதைய மாடலில் இருப்பதை போன்றே புதிய தலைமுறை மாடலிலும் முரட்டுத்தனமான 4 வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படவுள்ளது.

பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், லெவல் 2 அடாஸ், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 7 ஏர்பேக்குகள், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் டெசண்ட் கண்ட்ரோல் மற்றும் ஹில் ஹோல்டு அஸிஸ்ட் போன்ற அம்சங்களை எல்லாம், புதிய தலைமுறை டொயோட்டா ஹிலக்ஸ் பிக்-அப் டிரக்கில் நாம் எதிர்பார்க்கலாம்.
அதே நேரத்தில் கேபின் உள்ளே மற்ற வசதிகளை பொறுத்தவரையில், 9 ஸ்பீக்கர் ஜேபிஎல் பிரீமியம் ஆடியோ சிஸ்டம், கனெக்டட் கார் தொழில்நுட்பம், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ட்யூயல் ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் போன்ற அம்சங்களை எல்லாம் நாம் எதிர்பார்க்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டொயோட்டா ஹிலக்ஸ் பிக்-அப் டிரக்கின் புதிய தலைமுறை மாடலின் வருகை, இந்திய சந்தையில் இசூஸு வி-க்ராஸ் (Isuzu V-Cross) பிக்-அப் டிரக்கிற்கு, விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் புதிய ஹிலக்ஸ் பிக்-அப் டிரக்கின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையை 30-33 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யலாம் என நாங்கள் கருதுகிறோம்.
சர்வதேச சந்தைகளில் டொயோட்டா ஹிலக்ஸ் பிக்-அப் டிரக்கின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவில் தற்போதைக்கு டொயோட்டா ஹிலக்ஸ் பிக்-அப் டிரக்கின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் ஒரு சதவீதம் கூட இல்லை. இருப்பினும் எதிர்காலத்தில் வேண்டுமானால் அது நடக்கலாம்.


Click it and Unblock the Notifications